கவிக்கோ நினைவேந்தல்!
நினைத்து,
நினைத்து பூரித்துப்போகிறேன்,
நின் கவி வரிகளை
பார்த்து...!
* நீர் நிதானமாய் வடித்த வரிகள் அனைத்தும்
நீ தானமாய் விட்டுச்சென்றவைகளே!
நீ தடுமாறவும் இல்லை,
தடம் மாறவும் இல்லை,
அதனால்தான் நீ போற்றப்படுகிறாய்!
* தமிழ் வாழும் வரை,
தரணி உள்ளவரை,
உனது பேனா சிந்திய
பேரின்ப அமுதை
தமிழுலகம் சுவைத்துக்கொண்டேதான் இருக்கும்!
* கவியே,கவிக்கோவே,
வாழ்க நின் புகழ்...!
* - அச.உமர் பாரூக்

Comments
Post a Comment