மூத்த மார்க்க அறிஞர்களுக்கு விருது - பொற்கிழி!

மதுரை: மூத்த மார்க்க அறிஞர்களுக்கு ஜமாஅத்துல் உலமா சார்பில் பொற்கிழி மற்றும் விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் இறைவன் அழைப்பை ஏற்ற கூத்தாநல்லூர் 'கலீஃபத்துஷ் ஷாதுலி' K.M. பஷீர் அஹ்மது உலவி ஹஜ்ரத் நினைவுகூரப்பட்டார். முதுபெரும் ஆலிம்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி கடந்த 16/8/2021 அன்று தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக மதுரை தலைமையகத்தில் நடைபெற்றது. எழுபத்தைந்து வயதைக்கடந்த உலமாக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது, பொன்னாடை, பொற்கிழி ரூபாய் ஒரு லட்சம் ஆகியன வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் வட்டாரம் சார்பாக உடல்நிலை காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலையிலிருந்த கூத்தாநல்லூர் மன்பஉல் உலா அரபிக் கல்லூரியின் நாஜிர் & கலீஃபதுஷ் ஷாதுலி மௌலானா பஷீர் அஹ்மது அவர்களை மாநில பொருளாளர் தலைமையில் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் 20.08.2021 வெள்ளி அன்று நேரில் இல்லத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்து விருது மற்றும் பொற்கிழியை வழங்கினார்கள். பொற்கிழியை பெற்றுக்கொண்ட பஷீர் அஹ்மது ஹஜ்ரத் மிகவும் மனமகிழ்ந்து துஆச்செய்ததுடன் தன் குடும்பத்தாரின் இசைவுடன், வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழியை மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் வளர்ச்சிக்காக நன்கொடையாக வழங்கினார். (தகவல் : தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபை கூத்தாநல்லூர் வட்டாரம்.)

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!