அமலாக்கத்துறை அத்துமீறல் : அமைச்சர் செந்தில் பாலாஜி கைது - மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதற்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தமிழக தலைவர் அழகிரி, வி சி க தலைவர் திருமாவளவன், மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் நெஞ்சு வலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு மாநில அரசின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டுள்ளது பிரதமர் மோடியின் சர்வாதிகாரப் போக்கையே காட்டுகிறது. அதிகார துஷ்பிரயோகம் செய்யும் உள் துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சூழ்நிலை குறித்து முதல்வர் மு. க. ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
*அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இருவருக்குமான அரசியல் மோதலில், கடந்த 02/08/2022 அன்று செந்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் செந்தில் பாலாஜி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "வெயிட்பண்ணுங்க, அமலாக்கத்துறை கொஞ்சம் பிசியா இருக்காங்க, ஃப்ரீ ஆகிட்டு வருவாங்க. அதுவரைக்கும் வெயிட் #பண்ணுவோம் “ என்று ஒரு பதிலை தெரிவித்திருந்தார். அமலாக்கத்துறை குறித்து அவர் பேசியது ஏதாவது உள்நோக்கம் இருக்கிறதா? அண்ணாமலை ஏன் செந்தில் பாலாஜியை மட்டும் குறி வைத்து குற்றம் சாட்டி வருகிறார்? இப்படியான கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் எழும்பியது. இந்நிலையில் சுமார் 10 மாதங்கள் கடந்த நிலையில் 13-06-2023 அன்று அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை அரசு பங்களா, தலைமைச் செயலகத்தின் அமைச்சர் அறை உட்பட செந்தில்பாலாஜி தொடர்புடைய பல இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை மற்றும் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளதன் மூலம் அது ஒன்றிய அரசின் ஏவல் துறையாக மாறி சட்டவிரோத - மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகி வருகிறது.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!