பாசிச எதிர்ப்பில் உங்களுடன் நிற்கிறோம்!
நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்!
மனக்குறைகள் இருந்தாலும்
நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்!
* நாங்கள் மனமகிழவில்லை
எத்தனையோ கேள்விகளும், ஏக்கங்களும் எம்மிடம் உண்டு...
என்றாலும் நாங்கள் உங்கள் பக்கமே,
ஊழல் ஊதுகுழலாக இல்லை-
பாசிச எதிர்ப்பின் பங்காளர்களாக
நாங்கள் உங்கள் பக்கமே!
* சிறையில் வாடும் எம் சமூகம்
நிர்கதியாய் நிற்கிறதே எனும்
கவலைகள் ஒருபுறம் இருப்பினும்
செந்தில் பாலாஜியை சிறைபிடித்த விதம்
எங்களை கவலையுறவே செய்கிறது
* ஒன்றிய அரசின் ஏஜென்சிகளால்
முஸ்லிம் சமூகம் சூறையாடப்படும் போது
நீங்கள் கண்டுகொள்ளாமல் கடந்துபோனது கூட
எங்களுக்கு வலிதான்...
அதைவிட பெரியவலி
என் ஐ ஏ எனும் ஆட்தூக்கி அமைப்பிற்கு
அளவிலா அதிகாரம் தர ஆதரவு தந்த உங்கள் மீது
அதிருப்திதான்!
* இப்போது அதே என் ஐ ஏ தான்
தமிழக காவல்துறையையே பொருட்படுத்தாமல்
சூப்பர் போலீசாக மாறி
மாநில அரசின் சுயமரியாதையை
காற்றில் பறக்கவிடுகிறதே எனும்போது
எங்களால் உங்களைப்போல கடந்து போகமுடியவில்லை தான்!
எனவே நாங்கள் மாநில அரசுடன் நிற்கிறோம்!
மோடி அரசு அமலாக்கத்துறை மூலம் எதிர்கட்சிகளை பழிதீர்க்கும் போது
நாங்களும் எதிர்க்கிறோம்!
* நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தும்
பழிவாங்கும் நோக்கமே மேலோங்கி இருப்பதால்
ஊழலைவிட பாசிசம்தான் எங்களுக்கு முதல் எதிரி!
காரணம் பாசிசமே தேசத்தின் பொது எதிரி!
* மாநில உரிமை, மாநில சுயாட்சிகள்
ஒன்றிய அரசால் களவாடப்படும் போது
சொந்த நலனைவிட நாட்டு நலனே மேலோங்குகிறது!
அதனால்தான் நெருக்கடியான சூழ்நிலையில்
நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்!
ஆம், இந்தியனாய், திராவிடனாய்,
மனிதாபிமானமுள்ள தமிழனாய்
நாங்கள் உங்களுடனே நிற்கிறோம்!
பாசிச எதிர்ப்பிலும், மாநில உரிமை பாதுகாப்பிலும்
உறுதியாய் உங்களுடனே நிற்கிறோம்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே!
- அச.உமர் பாரூக்

Comments
Post a Comment