முஸ்லிம் லீக் மீராசா காலமானார்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய முன்னாள் மேலாளர் - மூத்த இதழாளர் ஏர்வாடி மீரா சாகிப் ( வயது 87 ) காலமானார். சென்னையில் கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முதல் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமது, முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் வரை தலைவர்களுடன் நீண்ட நெடிய காலம் முஸ்லிம் லீக் இயக்கத்தில் பணியாற்றியவர். மணிச்சுடர் நாளிதழிலும் தமது பணியைத் தொடர்ந்தார். வயது மூப்பு, உடல் நலக் குறைவு காரணமாக பணி ஓய்வு பெற்ற பிறகு திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் வசித்து வந்த K.M.G.M.மீரா சாஹிப் 21.6.2023 அன்று இரவு 9.50 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே. எம். காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் பேராசிரியர் சேமுமு. முகமதலி, மூத்த இதழாளர் ஜே. மீராமைதீன் மற்றும் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அன்னாரின் ஜனாசா நல்லடக்கம் 22.6.2023 வியாழக்கிழமை ஏர்வாடி கீழ முஹல்லம் பள்ளிவாசல் கபருஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது. நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவர் கோதர் மொகிதீன், நெல்லை மாவட்டத் தலைவர் எல். கே. எஸ்.மீரான் மைதீன் உள்ளிட்ட தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டு துஆ செய்தனர்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!