தியாகத் திருநாள் வாழ்த்துகள்!

* மக்க மாநகரில் கஅபா எனும் உலகின் முதல் இறையில்லத்தில் பல்வேறு நாடுகள் - பல்வேறு நிறங்கள் - பல்வேறு மொழிகள் கொண்ட உலக மக்கள் ஒன்றுகூடி வழிபடும் சகோதரத்துவ மாநாடு ஹஜ்! * பல்லாண்டு தவமிருந்து பெற்ற மகனை - இறைக் கட்டளையை ஏற்று பலி கொடுக்க முனைந்த தியாக உணர்வு! ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்து ஆடு மாடு முதலான பிராணிகளைக் குர்பானி கொடுக்கும் தியாகம் போற்றும் நாள்! இறைவனுக்காக உடல் - பொருள் - உயிர் கொடுக்க முடியாவிட்டாலும் கோபம் - வெறுப்பு - விரோதம் நீக்கி பிறர்க்கு சின்னச் சின்ன உதவிகளேனும் செய்து வாழ்வோம்! உலக அமைதி - சகோதரத்துவம் பேணுவோம்! அனைவருக்கும் ஈதுல் அள்ஹா - தியாகத் திருநாள் வாழ்த்துகள்! * - ஜே. மீராமைதீன், மூத்த இதழாளர்.

Comments