மணிப்பூர் கலவரம் : ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

கும்பகோணம்: மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்தாமல் இருக்கும் பிஜேபி அரசைக் கண்டித்து அமைதி திரும்ப ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்து ஜூலை முதல் நாளில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடந்தை சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், மாநகர துணைமேயர் சுப.தமிழழகன், கூட்டணி கட்சிகள், இடதுசாரி மற்றும் தலித் அமைப்பினர் திரளாக கலந்துக்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் த. மு. மு. க.
மாவட்ட தலைவர் ஏ.ஹிபாயத்துல்லா, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஹாஜா நஜ்புதீன், மாவட்ட வணிகர் சங்க தலைவர் குடந்தை ஜாபர், சுவாமிமலை பேரூர் தலைவர் ஃபுர்கான், மேலக்காவேரி கிளை பொறுப்பாளர் ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!