பிஜேபிக்கு எதிராக உருவானது இந்தியா கூட்டணி!
பெங்களூர்: எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம்
வெற்றிகரமாக நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் தேசிய தலைவர்கள், தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் உட்பட எதிர்க் கட்சிகளின் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டணிக்கு இந்தியா ( INDIA ) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
2024 மக்களவை தேர்தலில் மத்திய பாஜக அரசை ஆட்சிக் கட்டிலிருந்து அகற்ற கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று கூட்டியுள்ள ஆலோசனை கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய அரசியல் ஆலோசனை குழு தலைவர் பானக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இக் கூட்டம் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடுவதோடு அனைத்து தலைவர்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்படுத்தும் என்பதை எடுத்து காட்டுகிறது.




Comments
Post a Comment