ஹிஜ்ரி புத்தாண்டு: அறிஞர் கரீம் கனி சிந்தனை!

*நபிகள் நாயகம் (ஸல்) ஹிஜிரி சகாப்தத்தை ஆரம்பித்து ஆயிரத்தி முன்னூற்றி அறுபத்தி எட்டு சந்திர ஆண்டுகள் முடிந்து, *புதிய ஆண்டு பிறக்கின்றது.* *புதிய ஆண்டுக்கு நமது நல்வரவு உரித்தாகுக!* பழையன கழிந்து புதியனபுகும் தினம் வருடப்பிறப்பு தினம் ஆகும். புத்துயிர் பெற்ற உணர்ச்சிகளுடன், திடசித்தத்துடன், புதிய ஏடு போடும் தினம் ஆகும். *காலச் சக்கரம் என்பது அதிசயமான ஒரு பொருள். 24மணி நேரத்தைக்கொண்ட சிறிய சுற்றுதல் உள்ள சக்கரம் உண்டு ஏழு நாளுக்கொரு தடவை சுற்றி முடிக்கும் வாரச் சக்கரமும் உண்டு இருபத்தி ஒன்பதரை நாட்களில் ஒரு சுற்று முடியும் மாதச் சக்கரமும் உண்டு 364நாட்களில் சுற்றி முடியும் ஆண்டுச் சக்கரமும் உண்டு அங்ஙனமே அதை விட பெரிய சகாப்தச் சக்கரமும் உண்டு* *மானிடர் பொதுவாக நாள், வரம், மாதம், ஆண்டு சக்கரத்துடன் நின்றுவிடுவார்கள்*. *அதை விடப் என்ற பெரிய காலச்சக்கரங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் மட்டிலும் கவனிப்பர்கள்.* *ஒரு நாள் என்பது முதல் மனிதராகிய ஆதம் (அலை) காலத்தில் எத்தனை மணி நேரம் கொண்டதாக இருந்ததோ அதே நேரம் கொண்டதாகத்தான் இன்றும் இருக்கிறது. அன்று வாரம் என்பது ஏழு நாட்களைக் கொண்டதாக இருந்ததுபோல் இன்றும் இருக்கிறது மாதமும் அங்ஙனமே! ஆண்டும் அங்ஙனமே! எனினும், அன்றிருந்த நாள், வாரம், மாதம், ஆண்டு இன்று இல்லை. பெரும் மாறுதலை அடைந்து இருக்கிறது. இன்னும் அதிக மாறுதலைக் காணப்போகிறது* *பூமி ஒரு தடவை தன்னைச் சுற்றிக்கொள்வதற்கு 24மணி நேரம். அத்தகைய ஏழு நாள் கொண்டது ஒரு வாரம். சந்திரன் பூமியைச் சுற்றி முடிப்பதற்கு இருபத்தொன்பதரை நாள். அத்தகைய பன்னிரண்டு மாதம் கொண்டது ஒரு வருடம். பூமியின் வேகத்திலோ சந்திரன் வேகத்திலோ மாறுதல் இல்லை* *பூமியையும்,சந்திரனையும் சூரியனையும் கிரகங்களையும்விட* *உயரிய சிருஷ்டி எனப்பட்ட* *மனிதனின் ஜீவியத்தின் வேகத்தில் தான் மாறுதல்கள் விளைந்துள்ளன* கிரகங்களின் சுடர்கொண்டு மட்டிலும் மனித ஜீவியம் நடைபெறுவதாயின், இந்த மாறுதல்கள் ஏற்பட வேண்டியதில்லை. * *மனிதனோ கிரகங்கள் உட்பட்ட சடதத்துவப் பொருட்களின் ஆதிக்கத்தில் மட்டிலும் உள்ளவனாக இல்லை. சடதத்துவப் புலனுக்கெட்டாத சில விஷயங்களும் மனித ஜீவியத்தில் பங்கெடுத்துக் கொண்டு இருக்கின்றன* *இதனாலேயே திருக்குர்ஆன்*, *பலா-உக்ஸிமு -பி-முவாக்கிடன்-னுஜூம்',* *(கிரகப் பெயாச்சிகளின் கணிதம் கொண்டு மட்டிலும் மனிதனுடைய தலைவிதிப் பங்கீடுகள் நடைபெறுவதாக இல்லை)* என்ற கருத்தைப் புகட்டுகிறது. *மனிதன் ஒரு அதிசய சிருஷ்டி. அவனிடம் சடதத்துவ சக்திகளின் நடுவே இருக்க வேண்டிய சடதத்துவமும் இருக்கிறது சடதத்துவத்துக்குக் கட்டுப்படாத ஆத்துமாவும் உண்டு*. *கிரகங்களின் சுடர்கள் சடதத்துவத்தை மட்டிலும் பாதிக்கக்கூடியவை.* *இவைகளில் சுப கிரகங்களும் உண்டு பாபக் கிரகங்களும் உண்டு இங்ஙனமே, ஆத்துமாவில் சுடர்வீசக்கூடிய 'மலக்கு'கள் எனும் சுப சக்தியும் உண்டு*, *'ஷைத்தான்'கள்' எனப்படும் பாப சக்தியும் உண்டு* *சடத்துவத்தை மட்டிலுமன்று* *ஆத்துமிகக் கிரகங்களின் சக்திகளெனக் கூறக்கூடிய மலக்கு, ஷைத்தானையும் மிகைக்கும் சக்தி மனிதப் பிறவிக்கு உண்டு* *மலக்குகளும் 'ஆதத்துக்கு' அடிபணிய நேர்ந்த கதை குர்ஆனில் கூறப்பட்டிருப்பது இதைக்காட்டுவதற்கே!* *சிருஷ்டிகர்த்தன் ஒருவனைத் தவிர, எச்சக்திக்கும் கட்டுப்படாது இருக்கும் உரிமை, மனிதப் பிறவிக்கு உண்டு. இதுவே இஸ்லாத்தின் தவ்ஹீது எனப்படுவது.* *“வலகத்-கலக்னல் இன்ஸான-பீ-அஹ்ஸனி-தக்வீம்* (மஹோன்னத அம்சத்துடன் மானிடன் சிருஷ்டிக்கப்பட்டான்); என்றாலும், *தும்ம-ரதத்னாஹூ அஸ்பலஸாபீ லீன்* (அதிகக்கீழான நிலையில் கொண்டு வந்து வைக்கப்பட்டான்) ஏன்? சடதத்துவ சக்திகளுக்கு கட்டுப்பட்ட நிலைமையிலிருந்து தன்னுடைய பிறப்புரிமையாகிய மஹோன்னதத்தின் பக்கம் உயருவதற்காகவே! மானிடர்கள் உலகில் தோன்றும் நிலையிலிருந்து அவர்கள் மேலே ஏறவும் முடியும்; கீழே செல்லவும் முடியும். பிறப்புரிமையாகிய சுவர்க்கத்தை இம்மையிலும் மறுமையிலும் அடையவும் முடியும்; இம்மையிலும் மறுமையிலும் நரகத்துக்கு உரித்தானவர்களாக ஆகவும் முடியும். இம்மையில் அனுபவிக்கக்கூடிய சுவர்க்கமும் இருக்கிறது; மறுமையில் அனுபவிக்கக்கூடிய நரகமும் உண்டு; மறுமையில் அடைவதற்குரிய நரகமும் உண்டு. இதனாலேயே முஸ்லீம்கள், *'"ரப்பனா!* (இறைவனே) *ஆத்தினா- பித்துன்யா- ஹஸனத்தன் - வபில் - ஆஹிரத்தி - ஹஸனத்தன் - வகினா*- *அதாபன்னார்"* (இந்த உலகில் நன்மைகளையும் மறுமையில் நன்மைகளையும் கொடுத்தருள்வாயாக! நாகாக்கினியிலிருந்து ரட்சித்து அருள்வாயாக!) என்று துஆ ஓதுகிறார்கள். ஒரு ஆண்டு முடிந்து மறு ஆண்டு ஆரம்பிக்கும் சமயத்தில் வர்த்தகர்கள் கணக்கு முடித்து லாப நஷ்டக்கணக்கு எடுக்கிறார்கள் அல்லவா? அங்ஙனமே, *கடந்த ஆண்டில் செய்த நன்மை தீமைகளின் ஆதமீக விலைமதிப்புடன் ஒவ்வொருவரும் கணக்கிட்டுப் பார்த்தலும் அவசியம்.* சாப்பிட்டதும், தூங்கியதும், உழைத்ததும், ஒவ்வெடுத்ததும், இருக்கட்டும் அவைகள் தினசரிக் கடன்கள், மானுஷிக ஜீவியம் எனும் யந்திரம் ஓடுவதற்கு வேண்டியவை . ஒரு மோட்டாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு பெட்ரோல் வேண்டும்; என்ஜின் எண்ணை வேண்டும்; ஆஸிட் வேண்டும்; டயர்வேண்டும். இதெல்லாம் இருந்தால் வண்டி ஓடும். வண்டியைக் கொடுத்தான், அதுகொண்டு சில வேலைகளை முடிப்பதற்காக ஒரு வருடத்துக்குப்பின், என்ன வேலையை முடித்தாயென்று கேட்டால், இத்தனை காலன் பெட்ரோல் செலவழித்துவிட்டு என்ஜினை ஓடவைத்துக்கொண்டிருந்தேன், மேல்மிச்சமாக இவ்வளவு காலன் வைத்திருக்கிறேன் என்றால் முடியுமா? ஆகையால், வயிறு என்னும் என்ஜினுக்கு பெட்ரோல் ஊற்றியது இருக்கட்டும், அல்லாஹ்வின் இரசூல் உங்களுக்குக் கொடுத்துள்ள போதனைகளின்படி நீங்கள் நிறைவேற்றியுள்ள வணக்கங்கள், தீனுக்காகச் செய்த செய்த காரியங்களை நினைத்துப்பாருங்கள். அவற்றில் நஷ்டக்கணக்கு முடித்து, வேறு எந்தக் கணக்கில் லாபத்தை முடித்துக்கொண்டாலும் வீணே! மறு ஆண்டு திருந்துவோம், முன்னைவிட தீன் கரியத்தைக் கவனிப்போம் என்று தீர்மானம் செய்து நிறைவேற்றினால், சென்ற ஆண்டுகளின் நஷ்டக்கணக்கை எஜமானனாகிய அல்லாஹ் மன்னித்து அருளக்கூடியவன் என்பதை அறிந்து, 1369ல் முந்திய ஆண்டுகளைவிட அல்லாஹ் இரசூலின் உத்தரவுகளை அதிகமாக நிறைவேற்றுவவேம் என்ற பிரதிக்னை செயவீர்களாக! பிரதிக்னையை நிறைவேற்றவும் முயற்சிப்பீர்களாக! ஹிஜிரி 1369 அதிமுக்கிய மாறுதல் ஏற்படும் ஆண்டு என்பது பற்றிய ஹதீஸ் தீர்க்கதரிசனம் பற்றி முன்னரும் எழுதிக்காட்டியுள்ளோம். மறுபடியும் எழுதுகிறோம். சென்ற நாற்பது ஆண்டுகளாக உலகம் கண்ட திடீர் மாறுதல்கள், இனி நடைபெறப் போவதற்குமுன், கொசுக்கடிகளுக்குச் சமமானவை. *இனிமேல்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னெச்சரித்த பிரளய சகாப்தம்!* *தனிப்பட்ட வாழ்வில் யாஸீன் சூராவில்- உள்ள கருத்துக்களையும், தத்துவங்களையும், ஆலிம்கள் எனப்படுபவர்கள் அறிய முயற்சிப்பதும் கிடையாது; அறிந்ததைப் புகட்டுவதும் கிடையாது.இம்மையில் குருடாக இருப்பவர்கள் மறுமையிலும் குருடாக இருப்பார்கள்) *மன்- கான-பீஹாதிஹி- அஃமா- பஹு பில் ஆகிரத்தி அஃமா", என்று குர்ஆன் எச்சரித்ததை மறந்து அவர்களும் அகக்குருட்டுடனிருந்து உங்களையும் குருடாக இருக்கச் செய்து விடுகிறார்கள்* *"அத்துன்யா மஜ்ரஅத்துல் ஆகிரத்"* (மறுமைக்குரிய விளைவுஸ்தலம் இம்மை) என்பது - *ஹதீஸ்*. கடைசியில் உங்கள் கபுறுஸ்தானில் வந்து, யாஸீனை ஒதுவார்கள். விளைவு ஸ்தலத்தில் இருக்கையில் எங்ஙனம் வித்திட்ட ஆத்மீகத்தை விளைந்து பரிபக்குவத்தை அடையச் செய்வது என்பதைத் தெரிய வைக்காமல், விளைவு ஸ்தலத்தில் வெளியேறிய பின், விளைவு ஸ்தலத்தில் இப்படி இப்படி வித்துக்கள் இடவேண்டுமென்று அழகாக ஒதுவார்கள். தனிப்பட்ட ஜீவியத்துக்குரிய இஸ்லாமிய போதனை இங்ஙனம் இருள் சூழ்ந்து கிடக்கையில், ஏற்படவிருக்கும் பிரளய சகாப்தம் பற்றிய குர்ஆன் ஹதீஸ் போதனைகளை ஏடுகளில் கட்டிப் பத்திரமாக வைத்திருப்பின் அதிசயம் என்ன? முஸ்லீம்கள் மவுத்தான பின், மவுத்தாகாது இருப்பவர்கள் யாஸின் ஓதும் தானம் செய்வது போல், பிரயாணத்தில் அடிபட்டுக்கொண்டு நாசமாகப் போகிறவர்கள் தவிர, மிஞ்சுபவர்கள், குர்ஆன் ஹதீஸில் பிரளய சகாப்த விமோசன போதனைகளை உள்ள மோசமானவர்களுக்கு தானமாகவும், ஞாபகார்த்தமாகவும், ஓதிக்காட்டுவார்கள் போலும்! இஸ்லாமிய ஷரீ அத்படி நடப்பதற்கு இம்மையில் கைக்கு மேல் கூலி கிடைக்காது இருந்து வந்தது; அதை மீறுபவர்களுக்கு உடனே ஆக்கினை இம்மையில் கிடைக்காமல் இருந்துவந்தது. இதுகாறும், செத்த பின்னர்தானே அதன் நன்மை தீமை தெரியுமென்ற நினைவில் அநேகர்பொடு போக்காக இருந்திருக்கக்கூடும். நீதித் தீர்ப்பு எல்லாம் மறுமையில் மட்டிலும் பார்த்துக் கொள்ளும் வரம் உள்ளவர்களாக முன்னவர்கள் இருந்தார்கள்; இனியோ இம்மையிலும் நீதித் தீர்ப்பை கண்டு கொள்ளவேண்டிய வரம் உள்ளவர்களாக நாம் இருக்கின்றோம். ஒரு வழியில் நாம் முன்னவர்களை விட கொடுத்து வைத்தவர்களே! ஏனெனின், இம்மையிலேயே கணக்கு பார்க்கப்பட்டு விடுவது மறுமையில் கணக்குப் பார்க்கப்படுவதை விட ஒரு வழியில் மேலான விஷயம்! மௌலானா முஹம்மது அலி (ரஹ்) ஒரு கவியில் *'மறுமையின் கேள்வி கணக்குக்குத் தப்பிக்க முடியுமாயின் ஆண்டவனே! இம்மையிலே எனக்கு ஆக்கினைகள் ஏற்படட்டும். அந்நிய நாடாகிய இம்மையில் அவமானம் ஏற்படில் பரவாயில்லை சுயநாடாகிய மறுமையில் எனக்கு அவமானம் கூடாது'* என்ற கருத்துடன் பாடினார். இம்மையில் பாவமன்னிப்பு பெறுவதற்கும், திருந்திக் கொள்வதற்கும், அவகாசம் உண்டு என்பதையும் நாம் மறக்கக்கூடாது. ஆரம்பிக்கும் பிரளய சகாப்தத்தில்- *மதீனா எதற்கு அறிகுறியாக இருந்ததோ அந்த இலட்சிய உலகு தவிர இதர கட்டிடங்கள் தகரவேண்டிய காலத்தில்-மதீனாவைக்காட்டும் குர்ஆன் ஹதீஸ் தவிர முஸ்லிம்கள் கையில் ஒன்றும் இன்று இல்லை.* *குர்ஆன், ஹதீஸை நாளுக்கு நாள் தெளிவாக அறிந்து, மதீனத்து முஸ்லீம்கள் போல் ஆகவேண்டுமென்பதே நமது புதியசகாப்த நிர்ணயமாகவும், அந்த சகாப்தத்தின் முதல் வருடப் பிறப்பு தினத்தின் தீர்மானமாகவும் இருக்க வேண்டும்*. *அல்லாஹூ அக்பர்!* - சுதந்திரப் போராட்ட வீரர் - நேதாஜி படையின் தளபதிகளில் ஒருவர் *அறிஞர் கரீம் கனி* . *(22-10-1949* *மலாயா நண்பன் இதழில் எழுதிய தலையங்கம் )* *அறிஞர் கரீம் கனி (ரஹ்) சிந்தனைச் சிதறல்* நூலில் இருந்து ) ----------------------------- குறிப்பு; *இந்த கட்டுரை *(ஹிஜ்ரி 1369)* *புத்தாண்டை* வரவேற்று *அறிஞர் கரீம் கனி அவர்களால் எழுதப்பட்டு *மலாயா நண்பன் 20-10-1949 இதழில்* வெளிவந்த கட்டுரை ஆகும். (ஹிஜ்ரி புத்தாண்டு -1445 - முஹர்ரம் பிறை-1)* ஐ முன்னிட்டு *(20-07-2023) மறுபதிவு செய்யப்படுகிறது*. ----------- வழங்கியவர் : இராசமு.ஹமீது பத்திரிகையாளர் பீப்பிள் மீடியா ரிசர்ச் டிரஸ்டு -99410 86586

Comments

Popular posts from this blog

கர்நாடகா தேர்தல் : பாசிசவாதிகளுக்கு பதிலடி!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!