சென்னை மதரஸயே ஆஸம் பள்ளி வளாகத்தில் எலைட் பள்ளி திட்டத்திற்கு எதிர்ப்பு!
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஏழை இஸ்லாமிய மாணவர்களுக்கான மதரஸயே ஆஸம் பள்ளி வளாகத்தில் தொடங்க உள்ள எலைட் பள்ளி திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரஸே-யே-ஆஸம் மேல்நிலைப்பள்ளி, என்பது 150 வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் வாழும் முஸ்லிம் மாணவர்களுக்கு குறிப்பாக ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இப்பள்ளியில் படித்தவர்கள் இன்றளவும் உயர் பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருந்து வருகின்றனர்.
இப்பள்ளி ஹாக்கி விளையாட்டிலும் மிகவும் பெயர் பெற்றது. இப்பள்ளியில் மாணவர்கள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தும், பல மாணவர்கள் தமிழ்நாடு மாநில ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ளனர்.
மேலும், இப்பள்ளியானது ஏழை முஸ்லிம் மாணவர்களின் கல்விக்காக ஆற்காடு நவாப்களால் உருவாக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் இவ்விடம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பெரும்பகுதி இடம் தற்போதுள்ள காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரியாக மாறியுள்ளது,
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள இப்பள்ளி வளாகத்தில் விளையாட்டு துறை சார்பில் ஹாக்கி விளையாட்டு மைதானத்தில் மினி ஸ்டேடியம் கட்ட தீர்மானித்துள்ள நிலையில்
தற்போது பள்ளிக்கு பின்புறம் உள்ள இடத்தில் திடீரென எலைட் பள்ளி கட்டப்பட உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இப்படி தொடர்ந்து பள்ளியின் இடத்தில் அங்கு உள்ள மாணவர்களுக்கு நேரடியாக பயன் பெறாத வகையில், அங்கு இடங்கள் மற்ற திட்டங்களுக்கு எடுக்கப்படுவது, எதிர் காலத்தில் ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கான மேம்பாட்டுக்கு எந்த உதவியும் கிடைக்காத ஆபத்து உள்ளது.
மேலும் இந்த திட்டத்தின் ஆபத்து குறித்து கல்வி துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு மதரஸயே ஆஸம் பள்ளியை சுற்றியுள்ள பள்ளிவாசல் ஜமாஅத்துகள் உடனடியாக எலைட் பள்ளி திட்டத்தை திரும்ப பெற கோரிக்கை வைத்து உள்ளனர்.
எனவே இது தொடர்பாக ஏழை முஸ்லிம் மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு முதல்வர் முக ஸ்டாலின் , சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரஸயே ஆஸம் பள்ளி வளாகத்தில் தொடங்க உள்ள எலைட் பள்ளி திட்டத்தை உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் மதரஸயே-ஆஸம் பள்ளியை மேம்படுத்தும் வகையிலும் ஏழை முஸ்லிம் மாணவர்கள் பலன் பெறும் வகையிலும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்த வேண்டும் எனவும்
அதன்
துணைத் தலைவர் முஹம்மது முனீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments
Post a Comment