முனைவர் சேமுமு முகமதலிக்கு விருது!
திருச்சி : திருச்சியில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஜமால் முகமது கல்லூரியில் நிறுவனர் நாள் விழா வரும் 11 - 7 - 2023 தேதியன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதில் பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி அவர்களுக்கு இஸ்லாமிய அறிவாளர் விருது வழங்கப்படுகிறது.
சென்னை காயிதே மில்லத் ஆண்கள் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற சேமுமு, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளராகவும் இஸ்லாமிய இலக்கிய கழக தலைவராகவும் சேவையாற்றி வருகிறார்.
முஸ்லிம் மாணவர்கள் ஐ ஏ எஸ் தேர்வுகள் எழுதி அரசு உயர் பதவிகள் வகிக்கவும், யூ பி எஸ் சி, டி என் பி எஸ் சி முதலான தேர்வுகள் எழுதி அரசு வேலை வாய்ப்பு பெறவும் எஸ் - ஐ ஏ எஸ் சக்ஸஸ் அகாடமி பயிற்சி
நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
மேலும் இனிய திசைகள் சமுதாய மேம்பாட்டு மாத இதழையும் நடத்தி வருகிறார்.

Comments
Post a Comment