Posts

கேந்திரிய வித்யாலயா பதவிகளுக்கு தமிழர் புறக்கணிப்பு : சு. வெங்கடேசன் எம்பி கண்டனம்!

Image
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முக்கிய பதவிகளுக்கு தமிழர் ஒருவர் கூட நியமனம் செய்யாத ஒன்றிய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்ட 957 பேர்களில் ஒரு தமிழர் கூட இல்லை. நியமன முறையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு உள்ளாக்கும் அப்பட்டமான அநீதி. இந்த தேர்வினை முழு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். குஜராத் தமிழ்நாடு சவுராஷ்ட்ரா சங்கம், காசி தமிழ் சங்கமம் ன்னு ரயில்வச்சி கூட்டிப்போய் ஓட்டுகேப்பாங்க. தமிழ்நாட்டுக்கு வரும்போது திருக்குறளை மனப்பாடம் பண்ணி ஒப்பிப்பிப்பாங்க. இங்கிருக்கும் சங்கிகளும் பிரதமருக்கு ஒன்றிய அரசுக்கு தமிழ்மேல ரொம்ப பாசம்ன்னு அளந்து விடுவாங்க. ஆனா வேலைவாய்ப்பெல்லாம் நமக்கு கிடையாது. இன்னுமா இவங்கள நம்புறீங்க.

தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க செய்திகள்!

Image

கர்நாடகா : தடைகளைத் தாண்டி முஸ்லிம் மாணவி சாதனை!

Image
*கல்லூரியில் புர்கா அணிய தடை விவகாரத்தில் அல்லாஹூ அக்பர் முழக்கம் மூலம் உலகப் ௭ெற்ற கர்நாடக மாநில மாணவி தபஸூம் ஷேக் கல்வியில் சாதனை படைத்துள்ளார். கர்நாடகப் பல்கலைக்கழகக் கல்வித் துறையால் நடத்தப்பட்ட PUC-II தேர்வில் 98.3% சதவீதம் பெற்று முதல் மதிப்பெண் பெற்ற மாணவி தபசும் ஷேக்கிற்கு வாழ்த்து குவிந்துவருகிறது. ஹிஜாப் விவகாரத்தில் பல தடைகளையும் எதிர்ப்புகளையும் தாண்டி தபசும் பெற்ற இந்த வெற்றி பெண்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது. தடைகள் பல வரலாம் - தட்டிப்பறிக்கக் கூட்டமும் சில வரலாம், ஆனால் அதைக்கண்டு அஞ்சாமல் துணிந்து நிற்பேன் என்று தேர்வில் சாதித்த தபசும் ஷேக்கின் வெற்றி பலருக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது . செய்தி: ஹமீது

12 மணி நேர வேலை திருத்த சட்டம்: ஆம் ஆத்மீ வசீகரன் கண்டனம்!

Image
சென்னை: 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரம் ஆக்கும் தொழிலாளர் விரோத சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 2023 ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியிருக்கிறது. இது திமுக இத்தனை ஆண்டுக் காலமாகக் கடைபிடித்து வரும் தொழிலாளர் நலன் சார்ந்த கொள்கைளுக்கே எதிராக உள்ளது. மேலும் மே தினம் என்பதே தொழிலாளர்களின் வேலைநேரம் எட்டு மணி நேரம் வேலை என்பதை உறுதிப்படுத்திய நாள். தொழிலாளர்களின் இரத்தத்தில் அவர்களின் போராட்டதால் விளைந்த அடையாளம் தான் 8 மணிநேர வேலை. 8 மணிநேர வேலை உரிமையைப் பறிக்கும் வகையில், 12 மணி நேரமாக உயர்த்துவது உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரான நடவடிக்கையே ஆகும். இது சர்வாதிகார - முதலாளித்துவ வர்க்கத்திற்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது. மேலும் இச்சட்டத்தால் தொழிலாளர் சமூகம் கூடுதலான உழைப்புச் சுரண்டலுக்கு ஆட்பட்டு கடும் பாதிப்புக்கு உள்ளாகும். எனவே, இதனை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அரசை த...

ஈகைத் திருநாள் வாழ்த்துகள்!

Image
இன்று மாலை பல்வேறு இடங்களில் பிறை தெரிந்ததால் நாளை (22 - 4 - 2023) சனிக்கிழமை தமிழ்நாட்டில் ஈகைத் திருநாள் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி ஸலாஹுதீன் அறிவித்துள்ளார். அனைவருக்கும் ஈதுல் பித்ரு பெருநாள் வாழ்த்துகள்! ஈத் முபாரக்!- ஜே. மீராமைதீன், ஆசிரியர் - இயக்குநர், நமது செய்தி.

பலவீனமானவர்களுக்கு செலவு செய்யுங்கள்!

Image
* சுயமாக சம்பாதிக்க இயலாத பலவீனமானவர்கள் உங்கள் இல்லத்தில் இருந்தால் அவர்களுக்குச் செலவு செய்வதற்கு சலிப்படையாதீர்கள். அவர்களால் உங்களுக்கு அல்லாஹ்வின் உதவியும் ரிஜ்கும் கிடைக்கும் என்கிறார்கள் காருண்ய நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். நம்முடைய வீட்டில் நிறைய குழந்தைகள் இருக்கலாம். வயதான பெற்றோர்கள் இருக்கலாம். திருமணம் ஆகாத அல்லது கணவனை இழந்த, விவாகரத்து செய்யப்பட்ட மகள்களோ சகோதரிகளோ இருக்கலாம். பலவீனமான மாமனார் - மாமியார் (மனைவியின் பெற்றோர்) ஆதரிப்போர்கள் இன்றி நம்முடன் தங்கியிருக்கலாம். இவர்களுக்குச் செலவு செய்வதைப் பாரமாக கருதாதீர்கள். ஏனென்றால் அவர்களை நீங்கள் பராமரிப்பதால் அவர்களுக்கும் சேர்த்து அல்லாஹ் உங்களுக்கு ரிஸ்க் வழங்குவான். وعن أبي الدرداء عويمر رضي الله عنه قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ) ابغوني الضعفاء ، فإنما تنصرون وترزقون بضعفائكم (رواه أبو داود நபியவர்கள் சொல்கிறார்கள்: எனக்காக பலவீனமானவர்களுக்கு உதவுங்கள். உங்களுக்கு உதவி கிடைப்பதும் ரிஸ்க் வழங்கப்படுவதும் உங்களிடமுள்ள பலவீனமானவர்களால்தான்(அபுதாவூத்) குர்ஆன் கூற...

அன்புளார் எழுக - வருக!

Image
அருளன்பு எங்கும் நிறைக அறமெலாம் பொலிக- வளர்க! இருளெலாம் இங்கிருந் தகல்க! இன்பங்கள் நிறைந்து பெருக! மருளெலாம் மாய்க! தொலைக மயக்கங்கள் எல்லாம் கலைக! அருள்மிகும் ரமலானோடு சித்திரை வருவ தாக... கொடுநோய்கள் மறைவதாக! குறையெலாம் அகல்வதாக! மிடுமைகள் தொலைவதாக! மேன்மைகள் பொலிவதாக! அடிமைகள் கேடர் ஒழிக! அன்புளார் எழுக வருக! கொடுமைகள் நீங்கியிந்த குவலயம் சிறப்பதாக... பாதையில் வெளிச்சம் வருக! பாசிச இருண்மை தொலைக! போதையின் கொடுமை ஒழிக போர்களின் சத்தம் மாய்க! மாதரார் மாண்பு மலர்க! மதப்பகை பூசல் அழிக! ஆதார வாழ்வில் இன்பம் அனைவர்க்கும் இறைவன் அருள்க! இனிய தமிழ் சித்திரை வாழ்த்துக்கள்! * - அத்தாவுல்லா