Posts

கைத்தடியா? செங்கோலா?

Image
*1947 ல் நம் நாடு சுதந்திரம் அடைந்த போது பிரதமர் நேருவிடம் பலர் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர் . சிலர் பரிசுப் பொருளை அவருக்கு வழங்கினர். *அப்படி நேருவிடம் 14/08/1947 ல் வழங்கப்பட்ட ஐந்து அடி நீளமான ஒரு தங்கக் கைத்தடியைத் தான் இப்போது சோழ மன்னர்களின் செங்கோல் என சங் பரிவார் ஆசாமிகள் புருடா விடத்துவங்கி விட்டனர். *அந்தக் காலத்தில் நேரு அவருக்கு கிடைத்த எல்லா பரிசுப் பொருட்களையும் அரசிடமே ஒப்படைத்து விட்டார் . அவருக்கு தமிழகத்தின் ஒரு ஆதீனத்தைச் சார்ந்தவர்கள் வழங்கிய தங்க கைத்தடியையும் அரசிடமே ஒப்படைத்து விட்டார்.* *அது அலகாபாத் நகரில் ( தற்பொழுது பிரயாக் ராஜ் என பெயர் மாற்றப்பட்டது ) உள்ள நேரு நினைவகத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. அதன் மேல் Walking Stick என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. *எனவே அது ஒரு சாதாரண கைத்தடி . சென்னையில் இருந்த பிரபல நகை வியாபாரிகளான உம்முடியார் சகோதரர்கள் 1947 ஆகஸ்ட் மாதம் தயாரித்த தங்க கைத்தடி எப்படி சோழ பேரரசில் மன்னர்கள் பயன்படுத்திய செங்கோலாக இருக்க முடியும் ? தமிழகத்தில் சோழர்களின் அரசாட்சிக் காலம் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் ( 1200 ஆம் ...

மருத்துவக் கல்லூரிக்கு நிலம் தானமாக வழங்கிய மீரான் சாஹிபு!

Image

வக்பு வாரிய தலைவர் அல் ஹாஜ் அப்துல் ரஹ்மான் சமுதாயப் பணிகள் சிறக்க வாழ்த்துகள்!

Image
மே-28 பிறந்தநாள் காணும் தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் முதன்மை துணை தலைவர் "பிறைமேடை" இதழ் நிறுவனர் - ஆசிரியர் எம்.அப்துல்ரகுமான் (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்கள் வக்பு வாரியம் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். வக்பு சொத்துக்களை பாதுகாப்பதற்கும் ஆக்கிரமிக்கப்பட்ட வக்பு சொத்துக்களை மீட்பதற்கும் முயற்சி எடுத்து வருகிறார். முஸ்லிம் மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் அவர்களின் சமுதாயப் பணிகள் மேலும் சிறக்கவும் அவர் அனைத்து நலனும் பெற்று பல்லாண்டு வாழவும் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறோம். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

2000 ரூபாயும் நாகரிக கோமாளியும்!

Image
*இதுவரைக்கும் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 375 கோடி இருக்கும். *ஒரு நோட்டு அச்சடிக்க ஆன செலவு மட்டும் சராசரியாக 4 ரூபாய். ஆக மொத்தம் அச்சடிக்கிற செலவு மட்டும் 1500 கோடி ரூபாய். *இந்த நீளமான நோட்டை ஏடிஎம் மெசின்களில் அடுக்க முடியாததால் மெசின்களை மாற்றியமைக்க வேண்டி இருந்தது. *நாட்டில் ஏடிஎம்கள் எண்ணிக்கை அப்போது சுமார் 2 இலட்சம். *ஒரு ஏடிஎம்மின் விலை சராசரியாக 7 இலட்சம் ரூபாய். மாற்றியமைக்க ஏடிஎம் விலையில் 10% ஆனது என்றால் மொத்த செலவு, கிட்டத்தட்ட 1400 கோடி. *இது போக 15 இலட்சம் பொதுத் துறை, தனியார் துறை வங்கி ஊழியர்களுக்கு பயிற்சிக்கான செலவு, *375 கோடி நோட்டுகளை நாடு முழுக்க லாரிகளில் கொண்டு சென்று விநியோகிக்க ஆன செலவு, எல்லாவற்றையும் சேர்த்தால், *2000 ரூபாய் நோட்டுகளை அவசர கோலத்தில் அறிமுகப்படுத்தி, இப்போது திரும்பப் பெற்ற, மோடியின் கோமாளித் தனத்தினால் ஆன மொத்த தண்ட செலவு 5000 கோடி ரூபாயைத் தாண்டும்! *இது போக கள்ள நோட்டு ஒழிப்பு, கருப்பு பண ஒழிப்பு, மின்னணு வர்த்தகப் பரவலாக்கம் என எல்லா குறிக்கோள்களிலும் முற்று முழுவதுமாகத் தோற்ற, இ...

சுவாமிமலை - சென்னை இடையே அரசு பேருந்து சேவை!

Image
சுவாமிமலை நகரிலிருந்து சென்னைக்கு கும்பகோணம், வடலூர், பண்ருட்டி, திண்டிவனம் வழியாக அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து சேவை தொடக்க நிகழ்ச்சி சுவாமிமலை கீழ வீதியில் நடைபெற்றது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம், பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம். எச். ஜவாஹிருல்லா ஆகியோர் கொடியசைத்து பேருந்து சேவையை தொடக்கி வைத்து பொதுமக்களுடன் பயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் எஸ்.கே. முத்துச்செல்வம், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா, அரசு வழக்கறிஞர் பா.விஜயகுமார், சுவாமிமலை பேரூர் திமுக செயலாளர் எஸ்.எம்.எஸ். பாலசுப்பிரமணியன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தலைமை பிரதிநிதி வழக்கறிஞர் சரவணபாண்டியன், மாவட்ட தலைவர் ஹிபாயத்துல்லா, மாவட்ட செயலாளர் முஹம்மது மைதீன், மாவட்ட பொருளாளர் பொகர்தீன், சுவாமிமலை பேரூர் தலைவர் புர்க்கான் அலி, மாவட்ட மகளிர் பிரிவு பொருளாளர் ஷபானா மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளர் உள்ளிட்ட அலுவலர்கள், திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஏராளம...

கவிதை : அநாதை!

Image

சென்னை மாநகர பைத்துல் மால்களின் செயற்குழு கூட்டம்!

Image
சென்னை மாநகர பைத்துல் மால்களின் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் 21- 5 - 2023 அன்று ராயபுரத்தில் உள்ள தமிழக மஸ்ஜிதுகளின் கூட்டமைப்பு தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக எஸ் டி பி ஐ கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்வில் பைத்துல்மால் மற்றும் பள்ளி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.