Posts

நூல் அறிமுகம்: மகாத்மா காந்தி படுகொலை - புதிய உண்மைகள்!

Image
பாசிசத்தை அறியும் புத்தகங்களின் வரிசையில்..... *மகாத்மா காந்தி கொலை வழக்கு புதிய உண்மைகள் - அப்பு எஸ்தோஸ் சுரேஷ், பிரியங்கா கோட்டம்ராஜூ* தன் வாழ்நாள் முழுதும் ஹேராம் என்று கூறியவர், சனதனத்தினை வலுவாக பிடித்துக்கொண்டிருந்தவர் , இறக்கும் வரையிலும் பிராத்தனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர். அப்படி இருந்தும் ஏன் காந்தியடிகள் கொல்லப்பட்டார்? அதுவும் கோட்சே எனும் பார்ப்பணரால்! காந்தி இந்துவாக இருந்தார்... கோட்சே இந்துத்துவா ஆக இருந்தார் என கூறி கடந்துப்போனாலும், இன்று கோட்சேவை கதாநாயகனாக ஆக்கிடும் நிலை ஆட்சியாளர்களால் வெளிப்படையாகவே செய்யப்படுகின்றது. இதற்கு என்ன காரணங்கள் முதன்மையாக இருக்கும் என ஆராய்ந்தால் அதற்கு கிடைத்திடும் பதிலே இந்நூல். காந்தியின் மீது ஒரு சாரார் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சியின் அடிப்படை என்ன? அந்த வெறுப்பு உணர்ச்சி கோபமாகவும், பின் வெறியாகவும் மாறிய தருணம் எது? கோட்சே எப்படி உருவாக்கப்பட்டான்? சதித்திட்டங்கள்? படுகொலைக்கான திட்டமிடல்கள்? இறுதியாக படுகொலை என பதைபதைக்க வைக்கும் பல நிகழ்வுகள் அடுத்தடுத்து மறைக்கப்பட்ட பல தகவல்களை கொண்டு உங்கள் மனக்கண்ணை...

காஷ்மிரில் ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு!

Image
ஸ்ரீநகர்: தேசிய ஒற்றுமைப் பயணம் மேற்கொள்ளும் காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்திக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் 12 மாநிலங்களைக் கடந்து 3,570 கி.மீ. பயணம் செய்து இந்திய மக்கள் மனதில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். கடந்த ஆண்டு செப். 7ம் தேதி கன்னியாகுமரியில் இந்த ஒற்றுமை பயணத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பல்வேறு மாநில பயணங்களில் ராகுல் காந்தி ஒன்றிய பிஜேபி - மோடி அரசின் மதவாத - பிற்போக்கு ஆட்சியைத் தோலுரித்துக் காட்டினார். அவருக்கு காஷ்மிரில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகபூபா முப்தி, அவரது மகள் இல்திஜா முப்தி உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றனர். அவரது தங்கையும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். ஜன.29 அன்று இந்த லட்சியப் பயணம் நிறைவடைந்து, 30ம் தேதி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி, எஸ்.கே. விளையாட்டு அரங்கில் நிறைவு விழா நடைபெற்றது. இதில் 23 எதிர்க் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். ( செய்தி புதுப்பிக்கப்பட்ட நாள்: ...

கோட்டாரில் நிகழ்ச்சி : தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி?

Image
*10th, +1, +2 மாணவ, மாணவிகளுக்கான பொதுத் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி | ஜனவரி 29* தேதியில் நடைபெறுகிறது. * தேர்வு திறன்களை (Examination Skill) வளர்த்து கொள்வது எப்படி ? * புரியாத பாடங்களை எப்படி படிப்பது ? * தேர்வு பயத்தைப் போக்கி மகிழ்ச்சியாக தேர்வு எழுத * தேவை உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கல்வி சார்ந்த Personal Counseling வழங்கப்படும். *நாள் : ஜனவரி-29 (29-01-2023) ஞாயிற்றுக் கிழமை* *நேரம் : காலை 10 மணிக்கு* *இடம் : அல்மின்ஹாஜ் மதரசா வளாகம், 55A/1, கச்சேரிரோடு, கோட்டார், நாகர்கோவில்* *வழிகாட்டல் வழங்குபவர்:* S.சித்தீக் M.Tech (கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி,வேலைவாய்ப்பு வழிகாட்டி) மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொள்ளலாம். *நிகழ்ச்சி ஏற்பாடு :* அல்மின்ஹாஜ் மதரசா, கோட்டார். ************************ * நமது செய்தி* யில் உங்கள் செய்திகள், சிந்தனைகள், விளம்பரங்கள் இடம் பெற 9841520645 வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கவும்.

டி யூ ஜே தலைவர் புருஷோத்தமன் வாழ்த்து!

Image
எல்லோரும், எல்லாமும் பெற வேண்டும்! இங்கு, இல்லாமை இல்லாத நிலை வேண்டும்! வல்லான் பொருள்குவிக்கும் நிலைமாறி, வரவேண்டும்! திருநாட்டில் பொதுவுடமை சமுதாயம் படைப்போம்! ஊடகங்களை பாதுக்கப்போம்! ஊடக சுதந்திரத்தை பாதுகாப்போம்! ஊடகவியலாளர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாப்போம் என உறுதி ஏற்போம்! அனைவருக்கும் 74- வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்! ** - பி.எஸ்.டி. புருஷோத்தமன், மாநிலத்தலைவர், தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ்.

தமிழ்நாடு என்பதே நமக்குப் பெருமை!

Image
இந்திய ஒன்றியத்தின் பெரும்பாலான மாநிலங்களின் பெயர்கள் அந்தந்த இன மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அம்மக்களின் நிலம், தேசம், நாடு என்ற வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாடு மட்டும் தான் ஏதோ தனிநாடு என்ற வகையில் பெயரிடப்பட்டுள்ளதாக பாசிசவாதிகள் கூறுகிறார்கள். தமிழ்நாட்டின் பெயரை மாற்ற நினைத்தால் (அது முடியாது என்பது வேறு தகவல்) முதலில் மிகப்பெரிய நாடு என தன் மாநிலத்திற்கு பெயர் வைத்துள்ள 'மகாராஷ்டிரா' வின் பெயரை மாற்ற வேண்டும். முதலில் அம் மாநிலத்தை பிரிக்க ஒன்றிய அரசுக்கு தைரியம் உள்ளதா? அத்துடன், - ராஷ்டிரா என்றால் தேசம் - நாடு (Nation & Dominion) என்று பொருள். மகாராஷ்டிரா மாநிலத்தின் பெயரை மாற்றலாமா? - பிரதேசம் என்றால் நிலம் , துணைப் பகுதி அல்லது துணை நாடு என்று பொருள். இதன் அடிப்படையில் ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், ஹிமாச்சல பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் பெயர்களை மாற்றலாமா? - 'கண்ட் ' என்றால் நிலம் என்று பொருள். இதன் அடிப்படையில் ஜார்கண்ட், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் பெ...

டிக்கெட் போதும் - விசா தேவையில்லை! - சவூதி ஏர்லைன்ஸ்

Image
ஜித்தா: டிக்கெட் வாங்கும் போது இலவச சுற்றுலா விசா வழங்கும் சேவை விரைவில் தொடங்கப்படும் என்று சவுதி ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல் ஷஹ்ரானி தெரிவித்தார். டிக்கெட் வாங்கும் போது வேறு கட்டணம் ஏதும் செலுத்தாமல் சுற்றுலா விசா வழங்கும் சேவை இன்னும் சில நாட்களில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி ஏர்லைன்ஸின் இதனை "உங்கள் டிக்கெட் தான் உங்கள் விசா என்று" பெயரில் அழைக்கிறது. இந்த விசாவில் நீங்கள் சவுதியில் 96 மணிநேரம் (நான்கு நாட்கள்) செலவிட அனுமதிக்கும். இந்த நேரத்தில் பயணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லலாம் மற்றும் உம்ரா செய்யலாம். சுற்றுலா மற்றும் உம்ரா யாத்திரைக்காக சவுதி அரேபியாவுக்கு வருபவர்களுக்கு இந்த புதிய சேவை பெரும் பயனளிக்கும். சவுதி ஏர்லைன்ஸின் புதிய டிக்கெட் முன்பதிவு முறையில், பயணிகள் டிக்கெட் முன்பதிவுடன் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். டிக்கெட் புக் செய்யும் போது விசா தேவையா என்ற கேள்வியும் இருக்கும். விசா தேவைப்படுபவர்கள் மூன்று நிமிடங்களுக்குள் செயல்முறையை முடிக்க முடியும். சில நாடுகளில் வெளியுறவு அமைச்சகத்தின் இண...

சென்னையில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

Image
* என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி சென்னை மக்கா மஸ்ஜிதில் வரும் ஞாயிறு 22ம் தேதி நடைபெறுகிறது. * துறை சார்ந்த திறன்களை மேம்படுத்துவது எப்படி ?* * சட்டம் மற்றும் மருத்துவக் கல்வி வழிகாட்டுதல்* * தேவை உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்கப்படும் * நாள் : 22-01-2023 ஞாயிற்றுக் கிழமை* * நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை * * இடம் : மக்கா மஸ்ஜித், அண்ணா சாலை , சென்னை-2 * * வழிகாட்டல் வழங்குபவர்: * S.சித்தீக் M.Tech (கல்வி ஆலோசகர், விஸ்டம் கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி) மற்றும் பல் துறை சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்று வழிகாட்ட உள்ளனர். மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். நிகழ்ச்சி ஏற்பாடு : * UNITED PROFESSIONALS TRUST(UNIPRO), Chennai * Registered No:48/2022 | mail: info.uniproteam@gmail.com | www.uni-pro.org