Posts

தலைவர் முனீருல் மில்லத் நேரில் காயல் மகபூப் நலம் விசாரித்தார்!

Image
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று 28.2.23 அன்று பிறை மேடை அலுவலகம் வருகை தந்தார். உடல் நலம் குன்றி மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் அவர்களை நேரில் நலம் விசாரித்து சிகிச்சைகளை கேட்டு அறிந்து பூரண நலத்திற்கு துஆ செய்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா அகில இந்திய மாநாடு விளக்க கூட்டங்களுக்காக மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ளும் போதும் கூட்டங்களில் உரையாற்றும் போதும் உடல் நலத்தில் கவனம் செலுத்தும் படி தலைவர் வலியுறுத்தினார். ஒரு தொண்டனின் நலத்தில் தலைவர் அவர்கள் காட்டிய அக்கறை அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் பெத்தப்பா M.A.C. சுல்தான், வடசென்னை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் முகம்மது ரபி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். ** தகவல்: - கோம்பை நிஜாமுதீன் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி இந்திய யூனியன் முஸ்...

கவிதை: மானுட சேவையும் மத துவேசமும்!

Image
* ஒரு வெண்ணிற தேவதையின் ஆயுட்கால தவத்தை ஒரு சுடுகாட்டுக் காக்கைக் கொத்திப் போட்டிருக்கிறது... * அப்பழுக்கில்லாத அந்த தேவதையின் மானுடச் சேவையை மத துவேஷத்தால் மறுதலிக்கிறான் ஒரு மவுட்டீகன்... * மனிதத்துவம் மிகுந்த அந்த பரோபகாரத்தின் மீது மதச் சாயம் பூசுகிறான் இந்த ராட்சசன்... * புழுவேறித் துளைத்த குஷ்ட விரல்களின் கொப்புளங்களையும் தன் ஈர இதழ்களால் ஒத்தி எடுத்து உபகாரம் செய்த பரிகாரத்தை அபச்சாரம் என்கிறான் இதயம் அழுக்கானவன்... * அவரது மரிக்கொழுந்து மனதை ஈட்டி கொண்டு சிதைக்கிறான் ஈனன்... * அன்னையின் தன்னலமற்ற சேவைப் பாலினை விஷம் என்று அலறுகிறான்... * கங்கைப் பிணந்தின்னிக் கழுகு தன் கரும்மாந்திர வினைக்காய் பறந்து சென்ற ஒரு பச்சைப் புறாவின் மேல் எச்சம் கழிக்கிறது... * ஏசு பெருமான் தொட்டால் நோயாளிகளுக்கு சுகமாம்... எந்த விரல் கொண்டு தீண்டச் சுகமாகும் இவன் நோய்...? * 'கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும்' என்றார் ஏசு பெருமான்.... அன்னை தெரசா ... இந்திய மக்கள் - ...

நூல் அறிமுகம்: ஸ்பெயினில் இஸ்லாம்!

Image
கி.பி. 712லிருந்து கி.பி. 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது. அவர்களுடைய பண்பாடு அந்த இஸ்லாமிய பண்பாட்டிலிருந்து இன்றும் விடுபடவில்லை. அடுத்தடுத்து அந்த மக்களை ஆட்கொண்ட ஐரோப்பிய பண்பாடு இந்த இஸ்லாமிய பண்பாட்டின் ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை. இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதார பாதுகாப்புத் திட்டம் ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஐரோப்பாவின் சமூக பொருளாதார பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி நிற்கின்றது. ஆனால் இந்த ஸ்பெயினில் இன்று முஸ்லிம்களின் நிலை என்ன ஆனது? 780 ஆண்டு ஆட்சி செலுத்திய மண்ணில் ஆட்சி செலுத்திய மார்க்கத்தை சார்ந்தவர்கள் இந்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இது எப்படி ஆனது? என்பதை அற்புதமான நடை, உள்ளத்தை கவர்ந்திழுக்கும் வாசக அமைப்பு, வார்த்தை நயங்களில் மௌலவி ஹாபிழ் எஸ். ஏ. காஜா நிஜாமுதீன் யூஸுஃபி அவர்கள் ஆய்வு செய்து வகுத்து தொகுத்துத் தந்துள்ளார். இது அனைவரும் படித்து படிப்பினை பெறக்கூடிய சிறந்த நூலாகும். *ஸ்பெயினில் இஸ்...

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் அட்டூழியம்!

Image
டெல்அவிவ்: பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது. சமீபத்தில் பலஸ்தீன் நப்ளஸ் நகருக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு குண்டு வெடிப்பு சத்தமும் துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் கேட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் 11 பலஸ்தீனர்கள் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். இது இனப்படுகொலை என்று பலஸ்தீன் மூத்த அதிகாரி உசேன் அல் ஷேக் கண்டனம் தெரிவித்தார். இதற்கு இஸ்ரேல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இது பிராந்தியத்தில் பதற்றம் ஏற்படுத்தியுள்ளது என்று பலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார். இதற்கு பதிலடியாக காசா முனையில் இருந்து 6 ராக்கெட்களை பலஸ்தீன் போராளிகள் வீசினர்.

குவைத் தேசிய விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி!

Image
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி* 📅 *24/02/2023 வெள்ளிக்கிழமை* ⏰ *நண்பகல் 12:00 மணி* முதல்... 🎙சிறப்புரை: தமுமுக, குவைத் மண்டலம் & இந்தியர் நல்வாழ்வு பேரவையின் சிறப்பு விருந்தினர் முனைவர் பேராசிரியர் *M.H. ஜவாஹிருல்லாஹ்* M.B.A., M.Phil., Ph.D., MLA ( தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சி & சட்டமன்ற உறுப்பினர், பாபநாசம் தொகுதி, தமிழ்நாடு ) 💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக! ✅ வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!! 🚺 பெண்களுக்கு தனியிட வசதி 🅿️ வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம் 📡 நேரலையில் காண... www.youtube.com/Ktic12 www.facebook.com/q8tic அழைப்பில் இன்புறும்.... ☪️ *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* 📱 +965 *9787 2482* ******************* இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளிலும் *துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கான புதிய ஆடைகள்...

குவைத்தில் புனித உம்ரா வழியனுப்பு நிகழ்ச்சி!

Image
புனித உம்ராவை நிறைவேற்ற *கைத்தான் K-Tic* பள்ளிவாசலிலிருந்து *புதன்கிழமை (22.02.2023) மாலை 4:00* மணிக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் அர் ரஹ்மான் உம்ரா குழு *புனித மக்கா* நோக்கி புறப்படுகின்றனர் இன்ஷா அல்லாஹ்.... *அமைப்பு, கொள்கை, ஜமாஅத், சமயம், மொழி, நாடு வேறுபாடின்றி குவைத் வாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு புனித உம்ரா பயணிகளை பிரார்த்தனையுடன் வழியனுப்பி வைக்க அன்புடன் அழைக்கின்றது *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்*. தமிழ் பள்ளிவாசல் செல்வதற்கு… https://maps.app.goo.gl/wv6Uo அழைப்பில் இன்புறும்... - *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* +965 *9787 2482* www.youtube.com/Ktic12 www.twitter.com/@q8_tic

பண்பால் உயர்ந்த உள்ளமே!

Image
( மறைந்த தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் உபயதுல்லா பற்றி இரங்கல் கவிதை! ) * அன்பால், பாசத்தால், அரவணைப்பால், அனைவரையும் நேசிக்கும் , பண்பால் உயர்ந்த உள்ளமே ! * உறவையும், நட்பையும் ஒருசேர உறவாடும் உன்னத மனிதனே ! மதமாச்சரியம் இல்லாத மதங்களுக்கு அப்பாற்பட்ட மனித நேய அடையாளமே ! * வியாழன் தோரும் வறியவருக்கு வாரி வழங்கிய வள்ளலே ! இல்லை என்று வருவோர்க்கு இல்லையெனாது வழங்கிய தமிழ்வேல் வள்ளலே ! * திருக்குறள் , தேவாரம், திருப்புகழ் , கம்பராமாயணம், தொல்காப்பியம், நன்னூல், சிலப்பதிகாரம் என்றே நூல்கள் பல பயின்று தமிழருவியாய் உரையாற்றும் தமிழறிவு களஞ்சியமே ! * திருமண நிகழ்வில் கலந்து மகிழ்ந்த வேளையிலே காலன் வந்து விட்டானோ ? அறம் பாடி விரட்டாமல் - கண் அயர்ந்து விட்டாயோ ? * காலன் பணிமுடித்தானோ ? கண்ணீரில் மிதக்க விட்டாயே ! * அல்லாஹ்வின் திருவடியில் இளைப்பாறச் சென்றாயோ ? உன்னை இழந்து வருந்தும் உறவுக்கு, நட்புக்கும் ஆறுதல் சொல்வது யார்? யார்? யார்? ****** - தஞ்சை ந.இராமதாசு