கைத்தடியா? செங்கோலா?
*1947 ல் நம் நாடு சுதந்திரம் அடைந்த போது பிரதமர் நேருவிடம் பலர் மகிழ்வைப் பகிர்ந்து கொண்டனர் . சிலர் பரிசுப் பொருளை அவருக்கு வழங்கினர். *அப்படி நேருவிடம் 14/08/1947 ல் வழங்கப்பட்ட ஐந்து அடி நீளமான ஒரு தங்கக் கைத்தடியைத் தான் இப்போது சோழ மன்னர்களின் செங்கோல் என சங் பரிவார் ஆசாமிகள் புருடா விடத்துவங்கி விட்டனர். *அந்தக் காலத்தில் நேரு அவருக்கு கிடைத்த எல்லா பரிசுப் பொருட்களையும் அரசிடமே ஒப்படைத்து விட்டார் . அவருக்கு தமிழகத்தின் ஒரு ஆதீனத்தைச் சார்ந்தவர்கள் வழங்கிய தங்க கைத்தடியையும் அரசிடமே ஒப்படைத்து விட்டார்.* *அது அலகாபாத் நகரில் ( தற்பொழுது பிரயாக் ராஜ் என பெயர் மாற்றப்பட்டது ) உள்ள நேரு நினைவகத்தில் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது. அதன் மேல் Walking Stick என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. *எனவே அது ஒரு சாதாரண கைத்தடி . சென்னையில் இருந்த பிரபல நகை வியாபாரிகளான உம்முடியார் சகோதரர்கள் 1947 ஆகஸ்ட் மாதம் தயாரித்த தங்க கைத்தடி எப்படி சோழ பேரரசில் மன்னர்கள் பயன்படுத்திய செங்கோலாக இருக்க முடியும் ? தமிழகத்தில் சோழர்களின் அரசாட்சிக் காலம் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் ( 1200 ஆம் ...