Posts

Showing posts from February, 2023

தலைவர் முனீருல் மில்லத் நேரில் காயல் மகபூப் நலம் விசாரித்தார்!

Image
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இன்று 28.2.23 அன்று பிறை மேடை அலுவலகம் வருகை தந்தார். உடல் நலம் குன்றி மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் அவர்களை நேரில் நலம் விசாரித்து சிகிச்சைகளை கேட்டு அறிந்து பூரண நலத்திற்கு துஆ செய்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா அகில இந்திய மாநாடு விளக்க கூட்டங்களுக்காக மாவட்டங்களில் பயணம் மேற்கொள்ளும் போதும் கூட்டங்களில் உரையாற்றும் போதும் உடல் நலத்தில் கவனம் செலுத்தும் படி தலைவர் வலியுறுத்தினார். ஒரு தொண்டனின் நலத்தில் தலைவர் அவர்கள் காட்டிய அக்கறை அங்கிருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர் பெத்தப்பா M.A.C. சுல்தான், வடசென்னை மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் முகம்மது ரபி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். ** தகவல்: - கோம்பை நிஜாமுதீன் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி இந்திய யூனியன் முஸ்...

கவிதை: மானுட சேவையும் மத துவேசமும்!

Image
* ஒரு வெண்ணிற தேவதையின் ஆயுட்கால தவத்தை ஒரு சுடுகாட்டுக் காக்கைக் கொத்திப் போட்டிருக்கிறது... * அப்பழுக்கில்லாத அந்த தேவதையின் மானுடச் சேவையை மத துவேஷத்தால் மறுதலிக்கிறான் ஒரு மவுட்டீகன்... * மனிதத்துவம் மிகுந்த அந்த பரோபகாரத்தின் மீது மதச் சாயம் பூசுகிறான் இந்த ராட்சசன்... * புழுவேறித் துளைத்த குஷ்ட விரல்களின் கொப்புளங்களையும் தன் ஈர இதழ்களால் ஒத்தி எடுத்து உபகாரம் செய்த பரிகாரத்தை அபச்சாரம் என்கிறான் இதயம் அழுக்கானவன்... * அவரது மரிக்கொழுந்து மனதை ஈட்டி கொண்டு சிதைக்கிறான் ஈனன்... * அன்னையின் தன்னலமற்ற சேவைப் பாலினை விஷம் என்று அலறுகிறான்... * கங்கைப் பிணந்தின்னிக் கழுகு தன் கரும்மாந்திர வினைக்காய் பறந்து சென்ற ஒரு பச்சைப் புறாவின் மேல் எச்சம் கழிக்கிறது... * ஏசு பெருமான் தொட்டால் நோயாளிகளுக்கு சுகமாம்... எந்த விரல் கொண்டு தீண்டச் சுகமாகும் இவன் நோய்...? * 'கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும்' என்றார் ஏசு பெருமான்.... அன்னை தெரசா ... இந்திய மக்கள் - ...

நூல் அறிமுகம்: ஸ்பெயினில் இஸ்லாம்!

Image
கி.பி. 712லிருந்து கி.பி. 1492 வரை ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 780 ஆண்டுகள் அந்த மண்ணில் நீதி மிக்கதொரு ஆட்சி நிலைத்திருந்தது. அவர்களுடைய பண்பாடு அந்த இஸ்லாமிய பண்பாட்டிலிருந்து இன்றும் விடுபடவில்லை. அடுத்தடுத்து அந்த மக்களை ஆட்கொண்ட ஐரோப்பிய பண்பாடு இந்த இஸ்லாமிய பண்பாட்டின் ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை. இஸ்லாம் வகுத்து வழங்கிய சமூகப் பாதுகாப்புத் திட்டம், பொருளாதார பாதுகாப்புத் திட்டம் ஸ்பெயின் நாட்டு மக்களின் வாழ்க்கையில் மட்டுமல்ல, ஐரோப்பாவின் சமூக பொருளாதார பாதுகாப்புத் திட்டத்திலும் ஊடுருவி நிற்கின்றது. ஆனால் இந்த ஸ்பெயினில் இன்று முஸ்லிம்களின் நிலை என்ன ஆனது? 780 ஆண்டு ஆட்சி செலுத்திய மண்ணில் ஆட்சி செலுத்திய மார்க்கத்தை சார்ந்தவர்கள் இந்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். இது எப்படி ஆனது? என்பதை அற்புதமான நடை, உள்ளத்தை கவர்ந்திழுக்கும் வாசக அமைப்பு, வார்த்தை நயங்களில் மௌலவி ஹாபிழ் எஸ். ஏ. காஜா நிஜாமுதீன் யூஸுஃபி அவர்கள் ஆய்வு செய்து வகுத்து தொகுத்துத் தந்துள்ளார். இது அனைவரும் படித்து படிப்பினை பெறக்கூடிய சிறந்த நூலாகும். *ஸ்பெயினில் இஸ்...

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் அட்டூழியம்!

Image
டெல்அவிவ்: பலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் தொடுத்து வருகிறது. சமீபத்தில் பலஸ்தீன் நப்ளஸ் நகருக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தியது. இதனால் அங்கு குண்டு வெடிப்பு சத்தமும் துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் கேட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் 11 பலஸ்தீனர்கள் பலியானார்கள். பலர் காயம் அடைந்தனர். இது இனப்படுகொலை என்று பலஸ்தீன் மூத்த அதிகாரி உசேன் அல் ஷேக் கண்டனம் தெரிவித்தார். இதற்கு இஸ்ரேல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். இது பிராந்தியத்தில் பதற்றம் ஏற்படுத்தியுள்ளது என்று பலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் தெரிவித்தார். இதற்கு பதிலடியாக காசா முனையில் இருந்து 6 ராக்கெட்களை பலஸ்தீன் போராளிகள் வீசினர்.

குவைத் தேசிய விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி!

Image
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* ஏற்பாடு செய்யும் *குவைத் தேசிய & விடுதலை நாள் சிறப்பு நிகழ்ச்சி* 📅 *24/02/2023 வெள்ளிக்கிழமை* ⏰ *நண்பகல் 12:00 மணி* முதல்... 🎙சிறப்புரை: தமுமுக, குவைத் மண்டலம் & இந்தியர் நல்வாழ்வு பேரவையின் சிறப்பு விருந்தினர் முனைவர் பேராசிரியர் *M.H. ஜவாஹிருல்லாஹ்* M.B.A., M.Phil., Ph.D., MLA ( தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் & மனிதநேய மக்கள் கட்சி & சட்டமன்ற உறுப்பினர், பாபநாசம் தொகுதி, தமிழ்நாடு ) 💐 குவைத் வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் அலைகடலென திரண்டு வருக! ✅ வெளிநாடுகளில் வசிப்போர் தங்களின் குவைத் வாழ் உறவுகளுக்கும், நட்புகளுக்கும் இச் செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் கலந்து கொள்ள செய்க!! 🚺 பெண்களுக்கு தனியிட வசதி 🅿️ வாகனங்கள் நிறுத்த விசாலமான மைதானம் 📡 நேரலையில் காண... www.youtube.com/Ktic12 www.facebook.com/q8tic அழைப்பில் இன்புறும்.... ☪️ *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* 📱 +965 *9787 2482* ******************* இரண்டு சிறப்பு நிகழ்ச்சிகளிலும் *துருக்கி மற்றும் சிரியா மக்களுக்கான புதிய ஆடைகள்...

குவைத்தில் புனித உம்ரா வழியனுப்பு நிகழ்ச்சி!

Image
புனித உம்ராவை நிறைவேற்ற *கைத்தான் K-Tic* பள்ளிவாசலிலிருந்து *புதன்கிழமை (22.02.2023) மாலை 4:00* மணிக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் அர் ரஹ்மான் உம்ரா குழு *புனித மக்கா* நோக்கி புறப்படுகின்றனர் இன்ஷா அல்லாஹ்.... *அமைப்பு, கொள்கை, ஜமாஅத், சமயம், மொழி, நாடு வேறுபாடின்றி குவைத் வாழ் மக்கள் அனைவரும் கலந்து கொண்டு புனித உம்ரா பயணிகளை பிரார்த்தனையுடன் வழியனுப்பி வைக்க அன்புடன் அழைக்கின்றது *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்*. தமிழ் பள்ளிவாசல் செல்வதற்கு… https://maps.app.goo.gl/wv6Uo அழைப்பில் இன்புறும்... - *குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)* +965 *9787 2482* www.youtube.com/Ktic12 www.twitter.com/@q8_tic

பண்பால் உயர்ந்த உள்ளமே!

Image
( மறைந்த தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் உபயதுல்லா பற்றி இரங்கல் கவிதை! ) * அன்பால், பாசத்தால், அரவணைப்பால், அனைவரையும் நேசிக்கும் , பண்பால் உயர்ந்த உள்ளமே ! * உறவையும், நட்பையும் ஒருசேர உறவாடும் உன்னத மனிதனே ! மதமாச்சரியம் இல்லாத மதங்களுக்கு அப்பாற்பட்ட மனித நேய அடையாளமே ! * வியாழன் தோரும் வறியவருக்கு வாரி வழங்கிய வள்ளலே ! இல்லை என்று வருவோர்க்கு இல்லையெனாது வழங்கிய தமிழ்வேல் வள்ளலே ! * திருக்குறள் , தேவாரம், திருப்புகழ் , கம்பராமாயணம், தொல்காப்பியம், நன்னூல், சிலப்பதிகாரம் என்றே நூல்கள் பல பயின்று தமிழருவியாய் உரையாற்றும் தமிழறிவு களஞ்சியமே ! * திருமண நிகழ்வில் கலந்து மகிழ்ந்த வேளையிலே காலன் வந்து விட்டானோ ? அறம் பாடி விரட்டாமல் - கண் அயர்ந்து விட்டாயோ ? * காலன் பணிமுடித்தானோ ? கண்ணீரில் மிதக்க விட்டாயே ! * அல்லாஹ்வின் திருவடியில் இளைப்பாறச் சென்றாயோ ? உன்னை இழந்து வருந்தும் உறவுக்கு, நட்புக்கும் ஆறுதல் சொல்வது யார்? யார்? யார்? ****** - தஞ்சை ந.இராமதாசு

இயல்பாய் பிறந்த கண்ணதாசன் கவிதை வரிகள்!

Image
அது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சினிமா நடிகையாக இருந்த காலம்... பட்டிக்காடா பட்டணமா படத்தில் அவர் நாயகி. சிவாஜி கணேசன் நாயகன்...இவர் கிராமப்புறம். அவர் நாகரிக நகர்ப்புறம்... கிராமத்தின் சிறப்புகளை நாயகன், நாயகியிடம் சொல்வதாகக் காட்சி... டைரக்டர் அதை விளக்கிச் சொல்ல கண்ணதாசன் சொல்ல ஆரம்பித்தார்... கேட்டுக் கோடி உருமி மேளம்... அடுத்த வரி... சற்று யோசிக்கையில் பக்கம் இருந்த ஜெயலலிதா சொன்னார்... போட்டுக்கோடி கோகோ தாளம் என்று போடலாமே... நல்லா இருக்குமே... மறுக்காமல் ஆஹா என்ற ஒற்றை வார்த்தையில் உடன்பட்டார் கவியரசர்... பாடல் வரிகள் வந்து விழ ஆரம்பித்தன... கேட்டுக்கோடி உருமி மேளம் போட்டுக்கோடி கோகோ தாளம் பாத்துக்கோடி ஒன் மாமன் கிட்ட பட்டிக்காட்டு ராகம் தாளம்... ஜெயலலிதா சொன்ன ஒரு வரி பாடலுக்குப் பொருந்தி வருகிறது என்றவுடன் அலட்டிக் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டார் கண்ணதாசன்...பாடல் சூப்பர் ஹிட்... இது ஒரு சமயம்... அப்புறம் அவர் வேறு ஒரு பாடலுக்கான மெட்டமைப்பில் இருந்தார்... அது வசந்த மாளிகை படம்...யாருக்காக... என்ற பாடல்... வரிகள் இப்படி வந்து விழுந்தன... "கண்களின...

சோதனை என்ற பெயரில் சிறுபான்மையின மக்களுக்கு அச்சுறுத்தல்!

Image
சென்னை: விபத்தில் சிக்கி மரணம் அடைந்த இரு முஸ்லிம்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்காமல் அவர்களின் மீது கடும் பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையில் கார் வெடிப்பு (அக்.23 - 2022) சம்பவத்தில் ஜமேஷா முபீன் என்பவர் மரணம் அடைந்தார். ஆனால் அவர் அருகில் உள்ள வழிபாட்டுத் தலத்தை தகர்க்க திட்டம் போட்டதாக வழக்கு போடப்பட்டது. தொடக்கத்தில் அவர் மீது குற்ற வழக்கு எதுவும் இல்லை என்று தமிழ்நாடு காவல் துறையினர் தெரிவித்தனர். ஆனால் அந்த வழக்கு தேசிய புலனாய்வு முகாமைக்கு ( ஒன்றிய போலீஸ் ) மாற்றப்பட்டது. பின்னர் மங்களூரில் நடந்த ஆட்டோ விபத்தில் ஷாரிக் என்பவர் ( நவ.19 -2022 ) படுகாயம் அடைந்தார். இந்த சம்பவமும் குக்கர் குண்டு வெடிப்பு வழக்காக பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளுக்கும் தொடர்பு இருப்பதாக - சந்தேக அடிப்படையில் தே.பு.மு. போலீஸ் சென்னையில் 3 இடங்களிலும் கோவையில் 14 இடங்களிலும் திருச்சியில் ஒரு இடம், நீலகிரியில் 2 இடங்களிலும் நெல்லையில் 3 இடங்களிலும் திருவண்ணாமலையில் ஒரு இடத்திலும் காயல்பட்டினம், தென்காசியிலும் சோதனை நடைபெற்றது. மங்களூர் குக்கர் வெடிப்ப...

சிறப்புத் தகவல் / நூல் அறிமுகம்!

Image

எழுத்தாளரின் அற உணர்வு!

Image
தி இண்டியன் எக்ஸ்பிரஸ் குரூப் ' தேவி அவார்டு' என்ற பெயரில் தேசம் முழுமைக்கும் 12 ஆளுமைகளை தேர்ந்து எடுத்திருந்தது! அதில் ஒருவர் கவிதை இலக்கியத்தில் தனித்துவம் படைத்த சுகிர்தராணி!* இவர் தலித் மக்களின் பாடுகளையும், பெண்களின் உளவியலையும் கருப் பொருளாக்கி இலக்கியத்தை படைப்பவர். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஐ.டி.சி சோழா என்ற ஸ்டார் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு சென்ற போது தான் இந்த விருது நிகழ்வு அதானி குருப் ஸ்பான்ஸர் செய்துள்ளது தெரிய வந்தது. " இந்தியாவையே சூறையாடிக் கொழுக்கும் அதானி குருப் ஸ்பான்சரில் வழங்கும் விருதை ஏற்க என் மனம் ஒப்பவில்லை’’ என சுகிர்தராணி அந்த விருதை தவிர்த்த செய்தியை தி வயர் இணைய இதழில் வாசித்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. இந்த தன்மான உணர்வும், அறச் சீற்றமும் எல்லா விருதுகளையும் விட உசத்தியானது!* ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டுக் கொண்டிருக்கும் அதானியிடம் எந்தக் குற்றவுணர்வுமின்றி, யாசகம் பெற்று சுகபோகங்களில் திளைக்கும் ஊடகங்கள் - அவர் செய்யும் ஊழல்களை எப்படி அறச் சீற்றத்துடன் தட்டிக் கேட்க முடியும்? நம் ...

முன்னாள் ஐ. ஏ. எஸ். அதிகாரி ஹர்ஷ் மந்தர் கலந்துரையாடல்!

Image
சென்னை: உலக புகழ் பெற்ற சமூக ஆர்வலரும் , காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் ஆலோசகரும் குஜராத்தில் நடைபெற்ற முஸ்லிம் இன படுகொலைகளை கண்டித்து தனது ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களுக்காக தனது எழுத்தால் பேச்சால் குரல் கொடுத்துவரும் மக்கள் போராளி ஹர்ஷ் மந்தர் அண்மையில் சென்னை வந்தார். அவருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம் எல் ஏ தலைமையில் தமுமுக மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் ஐ எப் டி - எஸ். என். சிக்கந்தர், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர், பொருளாளர் பிர்தௌஸ் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். அனைவரின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

கன்னியாகுமரி நோக்கி நடைபயணம் : ஆம் ஆத்மீ வசீகரன் தொடங்கினார்!

Image
திருச்சி: ஆம்ஆத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன் நேற்று (பிப்ரவரி 5ம் தேதி) மக்களை நோக்கிய நடைபயணம் தொடங்கினார். மேக் இந்தியா No 1 என்ற கெஜ்ரிவாலின் முழக்கத்தை வலியுறுத்தி நடைபயணம் திருச்சி காந்தி மார்க்கெட் காந்தி சிலையருகில் துவங்கி கன்னியாகுமரி மாவட்டம் வரை செல்கிறது. பின்னர் தமிழகத்தின் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்த நடைபயணம் தொடருகிறது. கடந்த 2020ல் முதல்கட்ட நடைபயணம் சென்னையில் துவங்கி திருச்சியில் முடிவடைந்தது. இந்த நடைபயணம் தேச ஒற்றுமை, மத நல்லிணக்கம், அரசியல் சாசன சட்ட பாதுகாப்பு வலியுறுத்தி வசீகரன் தலைமையில் நடைபெற்றது. 2022 நடைபயணத்தின் தொடர்ச்சியாக மீண்டும் நேற்று திருச்சியில் தொடங்கியது. டெல்லி மாநில ஆம்ஆத்மி கட்சி அரசின் சாதனைகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, மக்களின் அடிப்படை தேவைகளை வழங்கி வரும் கெஜ்ரிவால் ஆட்சியின் சாதனைகளை விளக்கவும் 2024 மக்களவை தேர்தலில் மக்கள் விரோத பாஜக ஆட்சியை ஆகற்றி - உண்மையான ஜனநாயக ஆட்சியை - நேர்மையான ஆட்சியை டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் அமைத்தது போல் இந்திய அளவில் 2024ல் உருவாக்கிட வலியுறுத்தியும் மக்களை நோக்கி இந்த நடைபய...

ஏ. கே. ரிபாயி நூல் வெளியீட்டு விழா!

Image

கவிதை : அகிம்சைக்கு நேர்ந்த இம்சை!

Image
* இவனது கைத்தடியின் முன்னால் வெள்ளைக்காரனின் பீரங்கிகளும் ஏவுகணைகளும் பயனற்றுப் போயின.... ஆனால் ஒரு கள்ளத்துப்பாக்கியின் முன்னால் தோற்றுப் போனான்.... * இனி பொய் பேசுவதில்லை என்று மெய் சொன்னவன் மேனியை ஒரு பொய் பொய்யாக்கிப் போட்டது... * கறந்த பாலாய் இருந்தவனை கள்ளிப்பால் கரித்துப் போட்டது... * ஓர் அரையாடை பக்கிரியை மூடி வந்த முழுஆடை போட்டுத் தள்ளியது... * இப்போதையக் கலகங்களுக்கெல்லாம் அப்போதே விதை போடப்பட்டது... * ஒரு பச்சைத்துரோகம் கையில் பச்சைக்குத்தி பச்சைப் படுகொலையை பட்டப்பகலில் செய்தது... * இந்து மத சத்தியம் அப்போது முதலே அசத்தியம் பூசி இந்துத்துவம் ஆனது... * வெள்ளையர் பாதுகாத்த அஹிம்சையின் தர்மத்தைக் கொள்ளையர் கொன்று இம்சையாக்கினர்... * நன்முறை இந்தியா வன்முறையானது.. * காந்தியின் தேசம் காந்தியைக் கொன்று இரத்தக் கரை படிந்தது... * எத்தனையோ முறை எப்படி எப்படியோ கழுவியும் நீங்காமல் அந்தக்கரை சரித்திரத்தில் படிந்தது... * இனி... இந்த தேசம் சாந்தியின் தேசமாக விடிவு காலம் எப்போது? ** - அத்தாவுல்லா

முதல்வர் தலைமையில் சிறுபான்மையினர் நல கூட்டம்!

Image