Posts

ஷார்ஜாவில் புதிய ரெஸ்டாரண்ட்!

Image
ஷார்ஜாவின் முவைலா பகுதியில் கார்லிக் அண்ட் ஜின்ஜர் என்ற புதிய இந்திய ரெஸ்டாரெண்ட்டை அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவில் மாலா மெக்ரா மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதன் பின்னர் அவர் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

சென்னை மதரஸயே ஆஸம் பள்ளி வளாகத்தில் எலைட் பள்ளி திட்டத்திற்கு எதிர்ப்பு!

Image
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஏழை இஸ்லாமிய மாணவர்களுக்கான மதரஸயே ஆஸம் பள்ளி வளாகத்தில் தொடங்க உள்ள எலைட் பள்ளி திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள மதரஸே-யே-ஆஸம் மேல்நிலைப்பள்ளி, என்பது 150 வருடங்களுக்கும் மேலாக இப்பகுதியில் வாழும் முஸ்லிம் மாணவர்களுக்கு குறிப்பாக ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி அளிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இப்பள்ளியில் படித்தவர்கள் இன்றளவும் உயர் பதவிகளிலும், பொறுப்புகளிலும் இருந்து வருகின்றனர். இப்பள்ளி ஹாக்கி விளையாட்டிலும் மிகவும் பெயர் பெற்றது. இப்பள்ளியில் மாணவர்கள் இந்திய அணியின் கேப்டனாக இருந்தும், பல மாணவர்கள் தமிழ்நாடு மாநில ஹாக்கி அணியில் இடம் பெற்றுள்ளனர். மேலும், இப்பள்ளியானது ஏழை முஸ்லிம் மாணவர்களின் கல்விக்காக ஆற்காடு நவாப்களால் உருவாக்கப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு முன் இவ்விடம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒரு பெரும்பகுதி இடம் தற்போதுள்ள காயிதே மில்லத் அரசு பெண்கள் கல்லூரியாக மாறியுள்ளது, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் அமைந்துள்ள இப்பள்ளி வளாகத்தில் விளையாட்டு துறை சா...

மகளிர் உதவித் தொகை பெற வழிகாட்டிடுவீர்!

Image
முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ள கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதியுள்ள அனைத்து குடும்பத் தலைவிகளும் பயன்பெற சமுதாய அமைப்புகள் உதவிட வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு : தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் கோரிக்கை!

Image
சென்னை: முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு 3.5 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் தனது பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றயுள்ளது. தொண்டு இயக்கப் பொதுச்செயலாளர் முனைவர் பேராசிரியர் சேமுமு முகமதலி தீர்மானங்களை வாசித்தார். பொது சிவில் சட்டம் கொண்டுவரும் திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். மணிப்பூர் கலவரம் - பெண்கள் பாலியல் வன்கொடுமையை தடுக்காத ஒன்றிய - மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்தும் மேலும் பல முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மான் சரோவர் - இந்தியாவின் பகுதி! சீனாவுக்கு உணர்த்திய ஒளரங்கசேப்!

Image
*'பேரரசர் ஔரங்கசேப், அப்போதைய சீன நாட்டின் சிங் வம்ச மன்னர் முதலாம் ஷுன்ஜிக்கு எழுதிய கடிதத்தில், கைலாஷ் மானசரோவர் இந்தியாவின் ஒரு பகுதி. அது மட்டுமின்றி, அது " எங்கள் இந்துசகோதரர்களுக்கு புனிதமானஇடம். எனவே, அந்த இடத்தை விட்டுவிலகுங்கள்" என எழுதினார்". *வரலாற்று குறிப்பில் ஒரு பகுதி இதுவரை யாரும் அறிந்திடாத ஒன்றை பற்றி காண்போம்.. *சிவனின் இருப்பிடமான கைலாஷ் மானசரோவர் சீனாவின் ஆதிக்கத்தில் உள்ளது.*. *நம் நாட்டு விடுதலைக்குப் பிறகு, சீனா கைலாஷ் பர்வத் (கைலாசமலை) அல்லது கைலாஷ் மானசரோவர் மற்றும் அருணாசலப் பிரதேசத்தின் பெரும்பகுதியை ஆக்ரமித்ததால் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு ஐநா அவைக்குச் சென்று, "சீனா எங்கள் பகுதியை வலுக் கட்டாயமாக ஆக்ரமித்துள்ளது. எங்கள் பகுதியை மீண்டும் எங்களுக்குப் பெற்றுத் தாருங்கள்" என்றார்.* *இதற்குச் சீனா தரப்பிடமிருந்து வந்த பதில்: "நாங்கள் இந்தியாவின் பகுதியை ஆக்கிரமிக்கவில்லை. எங்கள் நாட்டின் பகுதியை 1680ல் இந்தியாவை ஆண்ட பேரரசர் பிடுங்கியதை நாங்கள் திரும்ப எடுத்துக் கொண்டோம்". *இந்த பத...

ஹிஜ்ரி புத்தாண்டு: அறிஞர் கரீம் கனி சிந்தனை!

Image
*நபிகள் நாயகம் (ஸல்) ஹிஜிரி சகாப்தத்தை ஆரம்பித்து ஆயிரத்தி முன்னூற்றி அறுபத்தி எட்டு சந்திர ஆண்டுகள் முடிந்து, *புதிய ஆண்டு பிறக்கின்றது.* *புதிய ஆண்டுக்கு நமது நல்வரவு உரித்தாகுக!* பழையன கழிந்து புதியனபுகும் தினம் வருடப்பிறப்பு தினம் ஆகும். புத்துயிர் பெற்ற உணர்ச்சிகளுடன், திடசித்தத்துடன், புதிய ஏடு போடும் தினம் ஆகும். *காலச் சக்கரம் என்பது அதிசயமான ஒரு பொருள். 24மணி நேரத்தைக்கொண்ட சிறிய சுற்றுதல் உள்ள சக்கரம் உண்டு ஏழு நாளுக்கொரு தடவை சுற்றி முடிக்கும் வாரச் சக்கரமும் உண்டு இருபத்தி ஒன்பதரை நாட்களில் ஒரு சுற்று முடியும் மாதச் சக்கரமும் உண்டு 364நாட்களில் சுற்றி முடியும் ஆண்டுச் சக்கரமும் உண்டு அங்ஙனமே அதை விட பெரிய சகாப்தச் சக்கரமும் உண்டு* *மானிடர் பொதுவாக நாள், வரம், மாதம், ஆண்டு சக்கரத்துடன் நின்றுவிடுவார்கள்*. *அதை விடப் என்ற பெரிய காலச்சக்கரங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் மட்டிலும் கவனிப்பர்கள்.* *ஒரு நாள் என்பது முதல் மனிதராகிய ஆதம் (அலை) காலத்தில் எத்தனை மணி நேரம் கொண்டதாக இருந்ததோ அதே நேரம் கொண்டதாகத்தான் இன்றும் இருக்கிறது. அன்று வாரம் என்பது ஏழு நா...

மணிப்பூர் 2 பழங்குடி பெண்கள் பாலியல் வன் கொடுமை: உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Image
மணிப்பூரில் இரு பழங்குடி பெண்கள் சாலையில் நிர்வாணமாக நடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக நாட்டில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

பிஜேபிக்கு எதிராக உருவானது இந்தியா கூட்டணி!

Image
பெங்களூர்: எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் தேசிய தலைவர்கள், தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் உட்பட எதிர்க் கட்சிகளின் மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டணிக்கு இந்தியா ( INDIA ) என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் மத்திய பாஜக அரசை ஆட்சிக் கட்டிலிருந்து அகற்ற கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்று கூட்டியுள்ள ஆலோசனை கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், தேசிய அரசியல் ஆலோசனை குழு தலைவர் பானக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்கள் கலந்து கொண்டுள்ளனர். இக் கூட்டம் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடுவதோடு அனைத்து தலைவர்களுக்குள் கருத்தொற்றுமை ஏற்படுத்தும் என்பதை எடுத்து காட்டுகிறது.

அழகு நிலையானது அல்ல - வாழ்க்கையும்!

Image
முதல் ஒளிப்படம் எடுக்கப்பட்டு இன்ஸ்டாகிராமில் 14.09.2019 அன்று பதிவிடப்பட்டது. இரண்டாவது ஒளிப்படம் 08.06.2021 அன்று நோர்விக் மருத்துவமனையில் எடுக்கப்பட்டது. அதே நபர்தான், இவர், முன்னாள் உலக அழகி மிஸ் நேபாள் இரண்டாவது இடம் வென்ற நிஷா கிமிரே. மிஸ். நிஷா கிமிரே 2018 இல் ஒரு மாடலாகவும், இந்தியத் திரைப்படங்களில் சிறந்த நடிகையாகவும் தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார். சிறுவயதில் இருந்தே ஏழ்மையான குடும்பத்தில் துன்பத்தை அனுபவித்த அவர் தனது திறமையின் மூலம் தனது குடும்பத்தை வறுமையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்று அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். பெரிய பெரிய நிறுவனங்கள் அவரை தங்கள் பிராண்ட் தூதராக நியமிக்க போட்டியிட்டன; நேபாளம் மற்றும் இந்தியாவில் உள்ள அரசியல் மற்றும் சினிமா ஆகிய இரண்டிலும் உள்ள பெரிய நபர்கள் அவளது கண் அசைவுக்கு காத்திருந்தனர், மேலும் அனைவரும் அவளுடன் நட்பு கொள்ள விரும்பும் நட்சத்திரமாக பிரகாசிக்க உச்சத்தில் இருந்தாள். எல்லோரும் அவளிடம் ஒரு பெரிய எதிர்காலத்தைக் கண்டார்கள். ஆனால் நடந்தது என்ன? ஜனவரி 2019 இல், டெஹ்ராடூனில் மாடலிங் மற்றும் நிர்வாகத் ...

துபை நூலகத்திற்கு பேராசிரியர் சேமுமு ஆய்வு நூல் அன்பளிப்பு!

Image
துபை முஹம்மது பின் ராஷித் பன்னாட்டு நூலகத்திற்கு அமீனுல் மில்லத் பேராசிரியர் முனைவர் சேமுமு. முகமதலி எழுதிய "தமிழ்க் கவிதை நாடகங்களில் பாத்திரப் படைப்பு" எனும் ஆய்வு நூலை இன்று 13-07-2023 இஸ்லாமிய இலக்கியக் கழக அமீரக ஒருங்கிணைப்பாளர் முதுவை ஹிதாயத் வழங்கிய காட்சி!

புதுக்கோட்டை மாவட்ட அரசு காஜி மவ்லவி என். அமானுல்லா இம்தாதி காலமானார்!

Image
புதுக்கோட்டை: சிராஜ் முனீர் அரபிக் கல்லூரியினுடைய முதல்வரும் புதுக்கோட்டை மாவட்ட அரசு காஜியுமான மௌலானா மௌலவி அல்ஹாஜ் N.அமானுல்லா இம்தாதி 12-07-2023 அன்று காலமானார். மஹ்ரிப் தொழுகைக்கு பின் ஜாமியா ஸிராஜூம் முனீர் அரபிக்கல்லூரியில் ஜனாஸா தொழுகையும் கலீப் நகர் மையவாடியில் நல்லடக்கம் நடைபெற்றது. அன்னாரின் பிழைகளை மன்னித்து உயர்ந்த சொர்க்கத்தை வழங்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுக்கோட்டை மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முகம்மது அஷ்ரப் அலி தமது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

பொது சிவில் சட்டம் ஆபத்தானது! - தலைவர்கள்

Image
பொது சிவில் சட்டம் எவ்வளவு ஆபத்து நிறைந்தது என்பது குறித்து தலைவர்கள் கூறுகிறார்கள்!

மணிப்பூர் செல்கிறது இ. யூ. முஸ்லிம் லீக் குழு!

Image
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கள ஆய்வுக் குழு வரும் 10ம் தேதி மணிப்பூர் சென்று ஆய்வு செய்கிறது. * வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனை குழு தலைவர் பாணக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்கள் தலைமையில் கள ஆய்வு குழு செல்கிறது. * இக்குழுவில் முஸ்லிம் லீக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.டி. முஹம்மது பஷீர், அப்துஸ் ஸமது சமதானி, பி.வி.அப்துல் வஹாப், கே.நவாஸ் கனி மற்றும் தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர் ஆகியோர் சென்று கள ஆய்வு செய்து பின்னர் மணிப்பூர் ஆளுநரையும் சந்தித்துப் பேச உள்ளனர். * செய்தி: முஹம்மது இஸ்மாயில்

முனைவர் சேமுமு முகமதலிக்கு விருது!

Image
திருச்சி : திருச்சியில் அமைந்துள்ள புகழ் பெற்ற ஜமால் முகமது கல்லூரியில் நிறுவனர் நாள் விழா வரும் 11 - 7 - 2023 தேதியன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதில் பேராசிரியர் முனைவர் சேமுமு முகமதலி அவர்களுக்கு இஸ்லாமிய அறிவாளர் விருது வழங்கப்படுகிறது. சென்னை காயிதே மில்லத் ஆண்கள் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராக சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெற்ற சேமுமு, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளராகவும் இஸ்லாமிய இலக்கிய கழக தலைவராகவும் சேவையாற்றி வருகிறார். முஸ்லிம் மாணவர்கள் ஐ ஏ எஸ் தேர்வுகள் எழுதி அரசு உயர் பதவிகள் வகிக்கவும், யூ பி எஸ் சி, டி என் பி எஸ் சி முதலான தேர்வுகள் எழுதி அரசு வேலை வாய்ப்பு பெறவும் எஸ் - ஐ ஏ எஸ் சக்ஸஸ் அகாடமி பயிற்சி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் இனிய திசைகள் சமுதாய மேம்பாட்டு மாத இதழையும் நடத்தி வருகிறார்.

நோயால் வாடும் மாணவிக்கு உதவிடுவீர்!

Image
உதவும் மனப்பான்மை கொண்டோருக்கு இந்த வேண்டுகோள் : வாலிநோக்கம் மீனவ கிராமத்தில் வசித்து வரும் ஆலிம் உதுமான் கனி மன்பஈ அவர்களின் மகள் பரீரா ( வயது 18 ) மைக்ரோ பயாலாஜி (லேப் படிப்பு) முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி க்கு இறைப்பை கேன்சர் வந்து உள்ளது. அவரது பெற்றோர், " எங்களால் முடிந்த அளவிற்கு எல்லாவற்றையும் விற்று வைத்தியம் பார்க்கிறோம். முடியவில்லை. தற்போது மதுரை ஆசிர்வாதம் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்து வருகிறோம். ஒருமுறை சிகிச்சைக்கு சென்று வர 20 ஆயிரம் செலவாகிறது " என்று கூறியுள்ளனர். எனவே அன்புள்ளம் கொண்டோர் உங்களால் முடிந்த உதவிகளை அந்த ஏழைப் பெண்ணுக்கு கொடுத்து உதவுங்கள்! வங்கி கணக்கு விவரம் : A/c 123701000007152 PAREERA IOB VALINOKKAM branch. A/c 815610110006673 S.UTHUMANGANI bank of India ramnad branch ifsc bkid 0008156 கைபேசி: +917548865837

மணிப்பூர் கலவரம் : ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

Image
கும்பகோணம்: மணிப்பூர் கலவரத்தை தடுத்து நிறுத்தாமல் இருக்கும் பிஜேபி அரசைக் கண்டித்து அமைதி திரும்ப ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்து ஜூலை முதல் நாளில் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குடந்தை சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன், மாநகர துணைமேயர் சுப.தமிழழகன், கூட்டணி கட்சிகள், இடதுசாரி மற்றும் தலித் அமைப்பினர் திரளாக கலந்துக்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் த. மு. மு. க. மாவட்ட தலைவர் ஏ.ஹிபாயத்துல்லா, மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ஹாஜா நஜ்புதீன், மாவட்ட வணிகர் சங்க தலைவர் குடந்தை ஜாபர், சுவாமிமலை பேரூர் தலைவர் ஃபுர்கான், மேலக்காவேரி கிளை பொறுப்பாளர் ரியாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிய தலைமை செயலாளர் பதவி ஏற்றார்!

Image
சென்னை: புதிய தலைமைச் செயலாளராக ஐ ஏ எஸ் அதிகாரி சிவதாஸ் மீனா நேற்று பொறுப்பு ஏற்றார். ராஜஸ்தானைச் சேர்ந்த இவர் தமிழகத்தில் பல்வேறு முக்கியப் பதவிகளை வாகித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் விடைபெறும் தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்று அவருக்கு பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்தினார். முன்னதாக சிறப்பாக பணியாற்றிய இறையன்புக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

தியாகத் திருநாள் வாழ்த்துகள்!

Image
* மக்க மாநகரில் கஅபா எனும் உலகின் முதல் இறையில்லத்தில் பல்வேறு நாடுகள் - பல்வேறு நிறங்கள் - பல்வேறு மொழிகள் கொண்ட உலக மக்கள் ஒன்றுகூடி வழிபடும் சகோதரத்துவ மாநாடு ஹஜ்! * பல்லாண்டு தவமிருந்து பெற்ற மகனை - இறைக் கட்டளையை ஏற்று பலி கொடுக்க முனைந்த தியாக உணர்வு! ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்து ஆடு மாடு முதலான பிராணிகளைக் குர்பானி கொடுக்கும் தியாகம் போற்றும் நாள்! இறைவனுக்காக உடல் - பொருள் - உயிர் கொடுக்க முடியாவிட்டாலும் கோபம் - வெறுப்பு - விரோதம் நீக்கி பிறர்க்கு சின்னச் சின்ன உதவிகளேனும் செய்து வாழ்வோம்! உலக அமைதி - சகோதரத்துவம் பேணுவோம்! அனைவருக்கும் ஈதுல் அள்ஹா - தியாகத் திருநாள் வாழ்த்துகள்! * - ஜே. மீராமைதீன், மூத்த இதழாளர்.

அபூர்வ ஒளிப்படம்!

Image
மறைந்த முதுபெரும் தலைவர் பனாத்வாலா சாஹிப் உடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன், பொதுச் செயலாளர் குஞ்சாலிக் குட்டி, தளபதி மவ்லானா ஷபீக்குர் ரஹ்மான் ரியாஜி, கேரள மாநில தலைவர் பாணக்காடு ஷிஹாப் தங்கள், அப்துஸ் சமத் சமதானி எம்பி மற்றும் பிரமுகர்கள். ** ஒளிப்படம் உதவி: அஹமது தளபதி

மூத்த மார்க்க அறிஞர்களுக்கு விருது - பொற்கிழி!

Image
மதுரை: மூத்த மார்க்க அறிஞர்களுக்கு ஜமாஅத்துல் உலமா சார்பில் பொற்கிழி மற்றும் விருது வழங்கப்பட்டது. சமீபத்தில் இறைவன் அழைப்பை ஏற்ற கூத்தாநல்லூர் 'கலீஃபத்துஷ் ஷாதுலி' K.M. பஷீர் அஹ்மது உலவி ஹஜ்ரத் நினைவுகூரப்பட்டார். முதுபெரும் ஆலிம்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி கடந்த 16/8/2021 அன்று தமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக மதுரை தலைமையகத்தில் நடைபெற்றது. எழுபத்தைந்து வயதைக்கடந்த உலமாக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருது, பொன்னாடை, பொற்கிழி ரூபாய் ஒரு லட்சம் ஆகியன வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் வட்டாரம் சார்பாக உடல்நிலை காரணமாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலையிலிருந்த கூத்தாநல்லூர் மன்பஉல் உலா அரபிக் கல்லூரியின் நாஜிர் & கலீஃபதுஷ் ஷாதுலி மௌலானா பஷீர் அஹ்மது அவர்களை மாநில பொருளாளர் தலைமையில் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் 20.08.2021 வெள்ளி அன்று நேரில் இல்லத்தில் சந்தித்து பொன்னாடை அணிவித்து விருது மற்றும் பொற்கிழியை வழங்கினார்கள். பொற்கிழியை பெற்றுக்கொண்ட பஷீர் அஹ்மது ஹஜ்ரத் மிகவும் மனமகிழ்ந்து துஆச்செய்ததுடன் தன் ...