இந்து - முஸ்லிம் சகோதரத்துவம்!
அக்பர் சிறுவயதில் ராஜபுத்திரர்களுடன் கொண்ட நட்பு அவரை ஜோதாபாய் என்ற ராஜபுத்திர இந்து பெண்ணை திருமணம் செய்யத் தூண்டுகிறது. இந்தத் இந்துத்தாய் பெற்றெடுத்த மகனே ஜஹாங்கிர். அவரின் மகனே ஷாஜஹான். ஷாஜஹானின் மகன் அவுரங்கஜேப். இப்போது அவுரங்கஜேபின் கொள்ளுப்பாட்டி இந்து. இந்தியர், ராஜபுத்திரர். அவுரங்கஜேப் இந்து முஸ்லிம் சகோதரத்துவ வழித்தோன்றல்... ரத்தத்தின் ரத்தம்! கொள்கையால் இஸ்லாமியர். ஆனால், அவர் இந்தியரே... ராஜபுத்திர முகலாயர்களின் நல்லுறவின் அடையாளச் சின்னமே ஷாஜஹான், அவுரங்கஜேப் எல்லாரும்! ஆனால், இதை சகிக்க முடியாதவர்கள் உருவாக்கிய பிம்பமே இந்து விரோதியாக அவுரங்கஜேபை முன்னிறுத்துவது! இதற்கு நேரெதிர் துருவம் சிவாஜி. ஆதில் ஷா படையில் முக்கிய பொறுப்பில் இருந்த இந்து படைவீரன் குழந்தையில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகிறார். ஆதில்ஷா, ஒரு குறிப்பிட்ட தர்காவில் ஒரு மண்டலம் கணவனும் மனைவியும் தங்கி தான தர்மங்கள் செய்து வேண்டினால் நல்லது நடக்கும் என்று பரிந்துரைக்க அதன்படி செய்து அவர் அவ்வாறு வேண்டியதன் பலனாக குழந்தை பிறக்கிறது. அக்குழந்தைக்கு அந்த தர்காவில் அடக்கப்பட்ட இஸ்லாமிய துறவியின் ப...