Posts

Showing posts from November, 2022

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா ஆலோசனைக் கூட்டம்!

Image
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75ஆம் ஆண்டு பவள விழா தேசிய மாநாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு தொடர்புடைய கட்சியின் 9 மாவட்டங்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்திற்கு தேசிய தலைவர் முனீருல் மில்லத் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் தாங்கினார். மாநில துணை செயலாளர் இப்ராஹிம் மக்கி கிராஅத் ஓதினார். பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர் வரவேற்றார். பொருளாளர் ஷாஜஹான், முதன்மை துணை தலைவர் - தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான், துணை தலைவர் நவாஸ்கனி எம். பி., மாநில செயலாளர்கள் காயல் மகபூப், வழக்கறிஞர் ஜீவகிரிதரன், நிஜாமுதீன், துணை செயலாளர் ஆப்பனூர் ஜபருல்லாஹ், மகளிர் அணி தேசிய தலைவர் பாத்திமா முசப்பர், கே. எம். சி. சி. பொதுச்செயலாளர் சம்சுதீன் அபூபக்கர், இளைஞர் அணி பொதுச்செயலாளர் அன்சாரி மதார், மாணவர் அணி மாநில தலைவர் பழவை அன்சாரி ஆகியோர் உரையாற்றினர். தேசிய மாநாட்டிற்கு மாவட்டம் முழுவதும் வரவேற்பு குழு உறுப்பினர்கள் சேர்ப்பது என்றும் மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை அழைப்பது என்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வது என்பது உட்பட பல தீர்மான...

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா நிர்வாகிகள் கூட்டம்!

Image
சென்னை: பெரம்பூர் ரஹ்மானிய்யா பள்ளிவாசலில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை மாநில நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் இணைந்த ஆலோசனைக் கூட்டம் 28-11-2022 அன்று நடந்தது. ஈரோட்டில் எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தவுள்ள மாநில மாநாட்டுக்கு தேவையான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாநிலத் தலைவர் மௌலானா பி. ஏ. காஜா முயீனுத்தீன் பாகவி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

போலி பத்திரப் பதிவு : விழிப்புணர்வு கொள்வோம்!

Image
போலி ஆவணங்கள் மூலம் கிரையம் செய்யப்பட்ட பத்திரப் பதிவுகளை உடனடியாக ரத்து செய்து சொத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திற்கு இந்திய குடிரசுத் தலைவர் ஒப்புதல். சட்டம் உடனடியாக நடைமுறைக்கு வந்து விட்டது! பாதிக்கப்பட்டவர்கள் விழித்துக் கொண்டு இழந்த சொத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கலாம்! நிலத் தகராறு, பட்டா* மாறுதல் போன்ற வழக்குகளில், நீதிமன்றங்கள் வழங்கி இருக்கின்ற தீர்ப்புகள். நீங்கள் பதிவு இறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்கு, உங்கள் நண்பர்களுக்கு தகவலை தெரிவிக்கவும். (Land Disputes) 1. வழக்கு நிலுவையில் இருக்கும் போது *பட்டா* மாறுதல் போன்ற நடவடிக்கைகளில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபடக்கூடாது. நில நிர்வாக ஆணையர் - கடித எண் - K3/27160/2018, dt - 13.3.2018 சென்னை உயர்நீதிமன்றம் - W. P. No - 24839/2014, dt - 16.7.2018 W. P. No - 491/2012, dt - 4.6.2014 W. P. No - 16294/2012, dt - 4.4.2014 2. சொத்தின் பத்திரம் உரிமையாளர் பெயரில் இருந்தால், அவரிடமே சொத்தின் உரிமை மூலம் இருப்பதாகக் கருத வேண்டும். மற்றவர்களுக்கு பட...

நல்வழி காட்டும் நபிமொழிகள் : இதுவே அவர் செய்யும் தர்மம்!

Image
*தர்மம் செய்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்” என நபியவர்கள் ( ஸல் ) கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! (தர்மம் செய்வதற்கான பொருள்) ஏதும் கிடைக்காவிட்டால்?” எனக் கேட்டனர். அதற்கு நபியவர்கள், “ஏதேனும் கைத்தொழில் செய்து, தாமும் அதன் மூலம் பலனடைந்து தர்மம் செய்ய வேண்டும்” என்றார்கள். தோழர்கள், “அதுவும் முடியாவிட்டால்?” எனக் கேட்டதற்கு, “தேவையுடைய- உதவி தேடி நிற்கும் துயருற்றவர்களுக்கு உதவ வேண்டும்” என்று பதிலளித்தார்கள். தோழர்கள், “அதுவும் இயலவில்லை என்றால்?” என்றதும், “நற்காரியத்தைச் செய்து, தீமையிலிருந்து தம்மைத் தடுத்திட வேண்டும். இதுவே அவர் செய்யும் தர்மமாகும்” என்று கூறினார்கள்.* நூல்: *📚புகாரி-1445.*

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு விழா மாநாடு 'லோகோ' வெளியீடு!

Image
இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1948 மார்ச் 10 அன்று கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களை அமைப்பாளராக (கன்வீனராக )க் கொண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்காக பரிணாமம் பெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு விழா வருகிற 2023 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னை தீவுத்திடலில் அகில இந்திய மாநாடாக நடைபெறவுள்ளது. இது தொடர்பாக இன்று ( 23/11/2022 ) கேரளாவில் 75 ஆம் ஆண்டு பவள விழா மாநாட்டு சின்னத்தை ( லோகோவை ) தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப், தேசிய அரசியல் ஆலோசனை குழு தலைவரும் கேரள மாநில தலைவருமான பானக்காடு செய்யது சாதிக் அலி ஷிஹாப் தங்கள் ஆகியோர் வெளியிட்டனர். தேசிய பொதுச் செயலாளர் பி.கே. குஞ்ஞாலி குட்டி, தேசிய பொருளாளர் பி.வி. அப்துல் வஹாப் எம்.பி., தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் ( முன்னாள் எம் எல் ஏ ), கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அப்துஸ் சமது சமதானி, ஈ.டி. முஹம்மது பஷீர், கே. பி. அப்துல் மஜ...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு விழா! மூத்த இஸ்லாமிய அறிஞர் வாழ்த்து!

Image
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75 ஆம் ஆண்டு நிறைவு விழா வரும் 2023 மார்ச் 10 ஆம் நாளில் சென்னையில் நடைபெற உள்ளது. இது குறித்து மூத்த இஸ்லாமிய அறிஞர் மவ்லவி எம். எம். மதனி ஹஸ்ரத் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: காயிதே மில்லத், பாபக்கீஹ் தங்ஙள், மஹ்பூபே மில்லத் சுலைமான்சேட்ஜீ, முஜாஹிதே மில்லத் பனாத்வாலா, கேரளச் சிங்கம் CH முஹம்மது கோயா, மறுமலர்ச்சி அதிபர் மவ்லவி A.K.ஜமாலி, தாய்ச்சபை தளபதி திருப்பூர் முஹ்யித்தீன், சந்தனத் தமிழறிஞர் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமது, எளியோரின் தோழர் முன்னாள் எம் பி காஜா முஹ்யித்தீன், நாடறிந்த நாவலர் A.M.யூசுப், பிரச்சார பீரங்கி M.M. பீர்முகம்மது, அற்புத திறன்மிக்க பன்மொழி அறிஞர் அப்துல் லத்தீப், இன்றைய முத்தான தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் K.M.காதிர் முஹ்யித்தீன் ஆகிய அளப்பெரும் ஆற்றல்மிக்க ஆன்றோராகிய தலைவர்களுடன் பழகிய, பயணம் சென்ற, உரையாடிய, உறவாடிய, மிகச்சில முஸ்லிம்லீக் மூத்த ஊழியரில் நானும் ஒருவன். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்க ஆவலாக உள்ளேன் என்று மதுரையில் வசிக்கும் 80 வயது மூத்த இஸ்லாமிய அறிஞர் மவ...

இனிய திசைகள் நவ.2022 சேமுமு சிறப்புக் கட்டுரை!

Image

இந்தியாவில் பிஜேபி பிடி தளர்கிறது!

Image
இந்தியாவில் 29 மாநில சட்டசபைகளில் 9ல் மட்டுமே பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. மறுபுறம் - சிக்கிமில் 0 இடம், மிசோரமில் 0 இடம், தமிழகத்தில் 4 இடங்கள். மேலும், அவர்களுக்கு உள்ள இருக்கைகள் வருமாறு : ஆந்திராவில் 175க்கு 4, கேரளாவில் 140க்கு 1, பஞ்சாபில் 117 இல் 3, வங்காளத்தில் 294 இல் 3, தெலுங்கானாவில் 119 இல் 5, டெல்லியில் 70க்கு 8 பேர், ஒரிசாவில் 147க்கு 10, நாகாலாந்தில் 60க்கு 12, பீகாரில் 243க்கு 74. ** பா.ஜ.க. கூட்டணி ஆட்சி உள்ள மாநிலங்களில் அவர்களின் இருக்கை நிலை: மேகாலயாவில் 60-க்கு 2 பேர், ஜம்மு - காஷ்மிரில் 87 இல் 25, கோவாவில் உள்ள 40 இடங்களில் 13 இடங்கள். நாட்டில் மொத்தமுள்ள 4139 சட்டமன்றத் தொகுதிகளில், பாஜக 1516 இடங்களைக் கொண்டுள்ளது. அதில் 950 இடங்கள் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, உ.பி., ம.பி., ராஜஸ்தான் போன்ற 6 மாநிலங்களிலிருந்து வந்தவை. இதன் பொருள் தெளிவாக உள்ளது... இந்தியாவில் பா.ஜ.க.வின் அலையோ புயலோ வீசவில்லை என்பது தான்! உண்மையில், நாட்டின் 70% இடங்களில் பாஜக தோல்வியடைந்துள்ளது. பிஜேபியின் இந்த உண்மை நிலையை நாம் அம்ப...

நூல் அறிமுகம்: எலான் மஸ்க் - கார்த்திக் ஸ்ரீநிவாஸ்

Image
டுவிட்டர் நிறுவனம் வாங்கப்பட்டவுடன் உலகில் இன்று அநேகமானவர்களின் தேடலுக்கு உரித்தான ஒருநபர் எலான் மஸ்க். தனி மனிதராக நின்று *ஜிப் 2, பே-பால், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பனி, ஹைப்பர்லூப், ஒப்பன் ஏஐ , சோலார் சிட்டி, கிகா ஃபேக்டரி ஆகிய நிறுவனங்களை வளர்த்தெடுத்து இன்று அதிகாரப்பூர்வ சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தையும் நிர்வகிக்கிறார். உலகின் அதிக தேடலுக்கு பெயர்பெற்ற கூகுள் நிறுவனத்திற்கு போட்டியாக , இல்லை இல்லை கூகுளையே யே சாப்பிடும் அளவிற்கு மென்பொருள்களை கொண்டு தனது புதிய தளங்களை விரிவுபடுத்திட கருதும் போக்கை உலகமே மிரட்சியுடன்தான் காண்கிறது. உலக வரலாறானது 'மாற்றம்' என்ற ஒற்றை சொல்லுக்குள் அடக்கிவிடும் போக்கை கொண்டது. அப்படி தான் இன்று நம் சமூகத்தின் கைகளில் தவழும் பெரும்பான்மையான வஸ்துக்கள் கால மாற்றத்தின் சிந்தனை, தத்துவார்த்தம், அரசியல், தலைவர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் முதலானவர்கள் மாற்றத்தின் மூலம் உருவானவர்கள். இப்படியான "மாற்றங்களுக்கு" மத்தியில் உருவான வஸ்துக்களை இருபிரிவினர் விமர்சிக்கின்றனர் . ஒன்றாவது : 'உலகமயமாதல்...

ஐ. எப். டி.யின் குழந்தைகளுக்கான நூல்கள் வெளியீடு!

Image
சென்னை: இஸ்லாமிய நிறுவனம் ( ஐ. எப். டி.) சார்பில் மதீனாவின் கிங் ஃபஹத் குளோரியஸ் குர்ஆன் பிரிண்டிங் காம்ப்ளக்ஸ், மொழிபெயர்ப்பு மையத்தின் இயக்குநரும் முதுபெரும் அரபு மொழி அறிஞருமான டாக்டர் வி. அப்துர் ரஹீம் எழுதிய குழந்தைகளுக்கான நூல்கள் ( ஆங்கிலம் மற்றும் தமிழ் ) வெளியிடப்பட்டன. ஐ.எப். டி. பொதுச் செயலாளர் எச். அப்துர் ரகீப் சாஹிப் தலைமையில், நூலாசிரியர் முன்னிலையில், வண்டலூர் பி. எஸ். அப்துல் ரஹ்மான் கிரெசென்ட் பல்கலைக்கழக அரபி மொழி மற்றும் இஸ்லாமிய கல்வித்துறை தலைவர் பேராசிரியர் பி. எஸ். சையத் மசூது ஜமாலி, திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி பொருளாளர் எம்.ஜே.ஜமால் முஹம்மது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி தேசிய தலைவி பாத்திமா முஸப்பர் எம்.சி. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில் ஐ.எப்.டி. துணை தலைவர் டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது, மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். எழுத்தாளர் அஜீஸ் லுத்புல்லாஹ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!

Image
சென்னை: முன்னேறிய சமுதாயத்தைச் சேர்ந்த உயர் ஜாதியினருக்கு ஒன்றிய பிஜேபி அரசு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது. இதற்கு எதிரான வழக்கில், பெரும்பான்மை நீதிபதிகள் கருத்து அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடுக்கு ஒப்புதல் அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த இடஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரானது என்று தமிழ்நாடு கருதுகிறது. எனவே, இது தொடர்பாக திமுக அரசு அனைத்துக் கட்சியினர் கூட்டத்தை நடத்தியது. அதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன. அதிமுக, பிஜேபி ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. இந்தக் கூட்டத்தில் சமூக நீதிக்கு எதிரான 10 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்தில் அமல்படுத்தப்படாது எனவும், இது தொடர்பான தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு சார்பில் மேல் முறையீடு செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இடஒதுக்கீடு கொடுத்தால் தகுதி இருக்காது - திறமை இருக்காது என்று கூறியவர்கள், இப்போது 10 சதவீத ஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவிக்கிறார்க...

விடுபட்டவர்கள் துயரத்தில்! பத்திரிகையாளர் ஓய்வூதியம் குறித்து டி. யூ. ஜே. கோரிக்கை !

Image
சென்னை: பத்திரிகையாளர் ஓய்வூதியம், இதழாளர் நல வாரிய கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( டி யூ ஜே ) தலைவர் தோழர் புருஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அச்சு மற்றும் காட்சி ஊடக அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், பத்திரிகையாளர்கள்நலவாரியதில் உறுபிப்பினராக சேரலாம் என்கிற அரசு அறிவிப்பை T.U.J.வரவேற்பதுடன்,இதய பூர்வ நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது. பத்திரிகையாளர்கள் நலன் கருதி,கீழ்காணும் கோரிக்கைகளை நிறை வேற்றிட,உரிய நடவடிக்கை களை துரிதமாக மேற்கொள்ளவேண்டும் என தமிழக அரசை T.U.J. அன்புடன் கோருகிறது. ஊரக பத்திரிகையாளர்களை, அங்கீகரித்து,ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து,உரிமைகள்,சலுகைகள் வழங்கப்படவேண்டும் என கடந்த 32 ஆண்டுகளாக, T.U.J. தமிழக அரசிடம்பல கோரிக்கை களை வைத்து வாதாடியும்,போராடியும் வந்துள்ளது. தற்போது அரசு அதை ஏற்றுக்கொண்டு,ஊடக அலுவலகங்களில் (Media House) பணிபுரியும்,அனைத்து ஊழியர்களையும் (Including Non journalist) பத்திரிகையாளர்கள் நலவாரியதில் உறுப்பினராக சேர்ப்பது என்று முடிவெடுத்து நலவாரியம் அறிவித்த...

சிறைவாசிகள் விடுதலையும் முஸ்லிம்களின் கோரிக்கையும்!

Image
ஆளுநரின் உச்சந்தலையில் அடித்தது போன்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு...! பேரறிவாளனைத் தொடர்ந்து... ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 6 பேரையும் விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி...! தமிழக அரசின் பரிந்துரையினை கிடப்பில் போட்டுவந்த தமிழக ஆளுநருக்கும் குட்டுவைத்தது உச்சநீதிமன்றம்...! நீண்ட கால சிறைவாசம் அனுபவித்து விடுதலையான அந்த தமிழர்களை வரவேற்கிறோம்,...! விடுதலைக்கு வித்திட்ட தமிழக அரசுக்கும், அதற்காக நீண்ட நெடும் போராட்டத்தை முன்னெடுத்த பா.ஜ.க. தவிர்த்து அனைத்து கட்சியினருக்கும், நீதி வழங்கிய உச்சநீதிமன்ற நீதியரசர்களுக்கும் நன்றிகள் பல...! இந்த நீதி, இதே நீதி... நீண்ட காலமாக சிறையில் வாடும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் கிடைக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை! மேலே நன்றி கூறிய அனைவரும் அதற்காக சமநீதியுடன் நடந்துகொள்ளவேண்டும். களமாடவேண்டும். * - அச.உமர் பாரூக்

பிரபல பிரெஞ்சு நடிகை இஸ்லாம் தழுவினார்!

Image
** பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், பிரபல பிரெஞ்சு நடிகையும் அந்நாட்டு தொலைக்காட்சி நட்சத்திரமுமான மரீன் ஹில்மர், இஸ்லாம் மார்க்கத்தை மனப்பூர்வமாகத் தழுவி, முஸ்லிம் பெண்மணியாக மாறினார். தகவல் : மு. மு. மதனீ, சவூதி அரசின் இஸ்லாமிய துபை மேனாள் பிரதிநிதி, (முகாம் : மதுரை)

மதநல்லிணக்கம் பேணிய மாவீரர் திப்பு சுல்தான்!

Image
இன்று ( நவம்பர்10 ) திப்புசுல்தான் பிறந்த தினம்! ** மைசூர்ப் புலி திப்புசுல்தான் ஒரு தொலைநோக்குச் சிந்தனையாளர். அவர் ஆங்கிலேயரைக் குலை நடுங்கச் செய்தவர் மட்டும் அல்ல. ஒரு சீரிய மதச்சார்பற்ற ஆட்சியாளராகவும் சமூக சீர்திருத்தப் புரட்சியாளராகவும் விளங்கினார். கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், தேவனஹல்லி கிராமத்தில் 1750, நவம்பர் 10-ஆம் நாள் பிறந்த திப்பு பல்வேறு போர்க்கலைகளை முறையாக தனது தந்தையிடம் பயின்றார். திப்பு சுல்தானின் வீர தீர சாகசங்கள் அனைவரும் அறிந்ததே. 1782-இல் தந்தை ஹைதர் அலி மறைவுக்குப் பின் மைசூருக்கு மன்னராகிய திப்புவின் மதச்சார்பற்ற ஆட்சி மற்றும் சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் அதிகம் அறியப்படாதவை. திப்பு தனது ஆளுகையின் கீழ் உள்ள கோயில்களுக்குத் தாராளமாக மானியங்களை வழங்கினார். பட்டியல் இதோ * கி.பி.1786 மேலக்கோட்டை நரசிம்மசாமி கோயிலுக்கு தங்க, வெள்ளி ஆராதனைப் பாத்திரங்கள், பாரசீக மொழிப் பட்டயம் ஆகியவற்றுடன் 12 யானைகளும் பரிசாக வழங்கினார். நாராயணசாமி கோவிலுக்கும்,கந்தேஸ்வரசாமி கோவிலுக்கும் ரத்தின ஆராதனைத் தட்டுக்கள் வழங்கினார். * நஞ்சன் கூடுவில் உள்ள நஞ்சுண்டேஸ்வர...

துபையில் தப்ஸீர் அஷ்ஷஃராவீ நூல் வெளியீட்டு விழா!

Image
லால்பேட்டை துபை ஜமாஅத் நடத்திய மீலாது விழா மற்றும் தப்ஸீர் அஷ்ஷஃராவீ நூல் வெளியீட்டு விழா 6-11-2022 அன்று துபை தேரா பணியாஸ் ஸ்கொயர் மெட்ரோ அருகிலுள்ள லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது. மௌலவி இனாமுல்லாஹ் கிராஅத் ஓதினார். ஜமாஅத்தின் துணைத்தலைவர் ஏ. ஆர். ரியாஜூல்லாஹ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஜமாஅத்தின் முன்னாள் செயலாளர் எஸ். எச். ஹாஜா மைதீன் வரவேற்புரையாற்றினார். லால்பேட்டை துபை ஜமாத் தலைவர் ஹாஜி எம். ஏ. ஆசிக் அலி, சிங்கப்பூர் ஹவுஸ் நிறுவனர் 'என்பவுல் ஹைராத்' மௌலவி பி. ஏ. ஜாபர் அலி மன்பயீ, கீழக்கரை 'முஹிப்புல் உலமா' முஹம்மது மஃரூஃப் காகா, ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். தப்ஸீர் அஷ்ஷஃராவீ தமிழாக்கம் நூலின் முதல் பிரதியை மௌலவி எம். ஒய். முஹம்மது அன்சாரி மன்பயீ, மௌலவி பி. ஏ. ஜாபர் அலி மன்பயீ ஆகியோர் வெளியிட ஜமாஅத் தலைவர் ஹாஜி எம். ஏ. ஆசிக் அலி, முன்னாள் தலைவர் எஸ். எம். முஹம்மது ஆசிக் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். இரண்டாம் பிரதியை மௌலவி M.Y முஹம்மது அன்சாரி மன்பயீ, முஹம்மது மஃரூஃப் காகா ஆகியோர் வழங்க, லால்பேட்டை பக்க...

நூல் அறிமுகம் : இவர்கள் இல்லாமல்... - கலீல் அஹமது

Image
*இவர்கள் இல்லாமல் - கலீல் அஹமது* நிலவில் கால் வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு பாங்கு சப்தத்தைக் கேட்டாரா? இல்லையா? என்று விவாதித்த முஸ்லிம் சமூகம், அதே நிலவில் 24 இடங்களுக்கு முஸ்லிம் அறிவியலாளர்களின் பெயர்களை அறிவியல் உலகம் ஏன் சூட்டியுள்ளது என விவாதிக்க மறந்து விட்டது. நமக்கெல்லாம் அறிவியலாளர்கள் நியூட்டனை , கலீலியோவைத் தெரியுமே தவிர *அறிவியலாளர் அல் கய்தமை* பலருக்குத் தெரிய வாய்ப்பில்லை. உலக வரைப்படத்தை முதலில் உருவாக்கிய *முஹம்மது அல் இத்ரிஸை* தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கணிதத்தை எழுதிட தெரிந்த நமக்கு *அல்ஜீப்ராவை உருவாக்கிய அல் குவாரிஸ்மியை* தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவ்வாறாக உலகிற்கு கேமராவும், காப்பியும், சோப்பும், காகிதமும் எப்படி வந்தது என்று எளிய நடையில் அனைவருக்கும் புரியும் வகையில் சொல்லும் ஒரு இயல்பான புத்தகமே! *இவர்கள் இல்லாமல்* விஞ்ஞானிகள் என்ன கண்டுபிடித்தார்கள்? என்பதை அறிய அழையுங்கள் *Unique Books*. *விலை : 170* அழையுங்கள் Facebook / Twitter / InstaGram ஊடாக Unique Booksஐ* *தொடர்புவையுங்கள்* : Call / WhatsApp / TeleGram / Signal : *9176277692* *...

அமீரகத்தில் பாரதியார் கவிதைகள் அரபு மொழிபெயர்ப்பு வெளியீடு!

Image
துபை: சென்னைப் பல்கலைக்கழக அரபுத்துறைப் பேராசிரியர் முனைவர் அ. ஜாகிர் ஹுசைன் தமிழிலிருந்து அரபியில் மொழியாக்கம் செய்துள்ள பாரதியார் கவிதைகள் 06.11.2022 அன்று துபை அல்ஜதாஃப் ஹில்டன் டபுள் ட்ரீ நட்சத்திர ஹோட்டலில் அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமம் ஒருங்கிணைத்த நிகழ்வில் வெளியிடப்பட்டது. அமீரகத்தின் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் அரசு செயலாளர் ஹெஸ்ஸா தெஹ்லக் நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். அமீரக எழுத்தாளர் அஸ்மா அல் ஸர்வூனி மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் தொழிற்நுட்ப ஆலோசகர் சயீத் அப்துல்லா முதல் மற்றும் இரண்டாவது பிரதிகளைப் பெற்றுக்கொண்டு வாழ்த்துரை வழங்கினர். பேராசிரியர் ஜாகிர் ஹுசைன் தனது ஏற்புரையில், தமிழர் - அரேபியர் உறவு குறித்தும் தனது மொழியாக்க அனுபவம், பாரதியார் கவிதைகள் அரபு மொழியாக்கம் உருவான பின்னணி குறித்தும் எடுத்துரைத்தார் . எழுத்தாளர் ஆசிப் மீரான் வரவேற்புரை நிழ்த்தினார். கேலக்ஸி பதிப்பகத்தின் பாலாஜி பாஸ்கரன் நன்றியுரை வழங்கினார். எழுத்தாளர் ஜெஸிலா பானு நிகழ்ச்சியைத் தொகுத்தார். அமீரக அரசு அதிகாரிகளும் அரபு எழுத்தாளர்களும் பாரதியா...

யுவன் சங்கர் ராஜாவுக்கு வழியனுப்பு!

Image
கடந்த 2014ம் ஆண்டு இஸ்லாத்தை தழுவிய பின் முதன் முறையாக குடும்பத்துடன் புனித உம்ராவிற்கு வந்திருந்த அப்துல் காலிக் கிற்கு (யுவன் சங்கர் ராஜா) ஜித்தா விமான நிலையத்தில் ம. ம. க. தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் எழுதிய அகிலத்திற்கு அருட்கொடை அண்ணல் நபி (ஸல்) புத்தகத்தை ஐ.டபிள். யூ. ஜித்தா மண்டல நிர்வாகிகள் வழங்கினர். மேலும் அவர்களுக்கு விமான நிலையத்தில் தேவையான உதவிகள் செய்து வழியனுப்பி வைத்தனர். தகவல் : இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF)- ஜித்தா மேற்கு மண்டலம்

செய்தித் துளிகள்!

Image

சேவையும் மத நல்லிணக்கமும்!

Image
குஜராத்தில் தொங்கு பாலம் கீழே விழுந்து சுமார் 150 பேர் பாலியாகி விட்டனர். 27 ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் பிஜேபி அரசு பழுதடைந்த பாலத்தை கடந்த மாதம் செப்பனிட்டு அவசரம் அவசரமாக பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அதற்கான தரச் சான்று அனுமதி பெறாத நிலையில் சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு திறந்து வைக்கப்பட்டதால் கடந்த அக்.30ல் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தங்களுக்கு பாசிச சக்திகள் துன்பம் இழைத்தபோதும் முஸ்லிம்கள் அனைத்து சமூகத்தினரையும் சகோதரர்களாகத் தான் பாவிக்கிறார்கள். அந்த வகையில் பல சேவைகளைச் செய்து வருகிறார்கள். குஜராத் மோர்பி பால விபத்தில் தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் 50க்கும் மேற்பட்ட உயிர்களை ஹுசைன் மெஹபூப் பதான் என்பவர் காப்பாற்றியுள்ளார். அதனை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். சமூக வலைதளங்களில் அவரது படம் பகிரப்பட்டு வருகிறது. இதுபோன்ற நற்செயல்களை முஸ்லிம்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். மத நல்லிணக்கத்துக்கு முன்னோடியாக திகழ வேண்டும்.

நூல் அறிமுகம் : ஆத்மானந்தங்கள்- ஷஹீத் சையத் குதுப்

Image
ஓர் இலட்சிய முஸ்லிமின் வாழ்வை வழிநடத்திச் செல்வதற்கான சில அடிப்படைக் கருத்துகளை சையித் குதுப் இந்நூலின் மூலம் வழங்குகிறார். வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்குதல், மரணத்தை மகிழ்வுடன் எதிர்கொள்ளல், இலட்சிய வேட்கையை உள்ளத்தில் வளர்த்தல், சத்தியத்தின் இறுதி வெற்றியில் நம்பிக்கை, அசைக்க முடியாத ஆழமான தன்னம்பிக்கையை உருவாக்கிக்கொள்ளல், விரிந்த ஆன்மாவோடு பிறருடன் பழகுதல், எல்லோரும் இன்புற்றிருக்க வழிசெய்தல் போன்ற வாழ்வியல் தத்துவங்களை அவருக்கே உரிய உணர்ச்சிபூர்வமான நடையில் இந்நூலில் சையித் குதுப் வடித்துள்ள பான்மை அற்புதமானது. **- எம்.ஏ.எம். சுக்ரி. *விலை : ரூ. 30 அழையுங்கள் Facebook / Twitter / InstaGram ஊடாக Unique Booksஐ* *தொடர்புவையுங்கள்* : Call / WhatsApp / TeleGram / Signal : *9176277692* Haja Nawaz ஜி பே மூலம் பணம் செலுத்தலாம்.

புதுக்கோட்டையில் அரேபிய தங்க நாணயம்! - ஒரு வரலாற்றுப் பார்வை

Image
( புதுக்கோட்டையில் அரேபிய தங்க நாணயம்! என்ற செய்தி குறித்து வரலாற்று ஆய்வாளர் ஜெ. ராஜா முஹம்மது எழுதியுள்ள கட்டுரை ) ****** 2022 மே மாதம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகில் உள்ள ஏனாதி கிராமத்தில் 16 தங்க நாணயங்கள் புதையலாகக் கிடைத்தன. இந்த நாணயங்கள் குறித்த வரலாற்றுச் செய்திகள் சில: 1) 2020 ஜுன் மாதத்தில் சிவகங்கை மாவட்டம் இலந்தக்கரையில் ஒரு தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இந்த நாணயம் குறித்த செய்தி கிடைத்தவுடன் சென்னை பல்கலைக்கழக அரபுத்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஜாகிர் உசேன் அவர்களுடன் தொடர்பு கொண்டு சில சரியான செய்திகளை உறுதி செய்து கொண்டேன். 2) தற்போது ஏனாதியில் கிடைத்திருப்பதும் இதே வகை காசுகள்தான். ஏனாதி, இலந்தக்கரை ஆகிய ஊர்கள் சற்று அருகருகே உள்ள ஊர்கள்தாம். மேலும் ஏனாதி தொன்மை வரலாற்றுச் சான்றுகள் கொண்ட இடமாகும். 3) ஏனாதியில் நாணயங்கள் கிடைத்தவுடன் இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள் என்னிடமும் தொடர்பு கொண்டு விபரம் கேட்டனர். வரலாற்றுத் தகவல்களைச் சொன்னேன். ஆனால் சமூக வலைதளக்காரர்கள், ஊடகவியலார் ஆகியோர் பல ஊகங்களை வெளியிட்டு வருகின்றனர். சில நண்பர்க...