Posts

Showing posts from December, 2022

அபூர்வ தகவல் : பெருக்கு மரம் (பாவோ பாப்)!

Image
பெருக்கமரம், பாவோபாப் என்று சர்வதேச நாடுகளில் அழைக்கப்படுகிறது. இவ்வகை மரங்கள் மடகஸ்கார், ஆப்பிரிக்கா, அரேபியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் சொந்தமானவையாக காணப்பட்டாலும் இலங்கைக்கு இம்மரத்தை அறிமுகப்படுத்தியவர்கள் அரேபிய வணிகராகும். கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்கும் கி.பி.16ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட கால இலங்கையின் அயல்நாட்டு வாணிபத்தில் அரேபிய வணிகர் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளனர். அவர்கள் வணிகத்தின் பொருட்டு இலங்கையில் தங்கியிருந்த கடற்கரை நகரங்கள் துறைமுகங்களில் இம்மரத்தை நாட்டியுள்ளனர். இவ்வரலாற்றுப் பின்னணி கொண்ட இடங்களிலேயே பிற்காலத்தில் போத்துக்கேயர், ஒல்லாந்தர் தமது கோட்டைகளையும் அமைத்தனர். இதற்கு நெடுந்தீவு, மன்னார், காலி முதலான இடங்களில் உள்ள கோட்டைகளும் அவற்றின் அருகேயுள்ள பெருக்கு மரங்களும் சான்றாகும். கி.பி 1630 ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி போர்த்துக்கேயருக்கும் இரண்டாம் ராஜசிங்க மன்னனுக்கும் இடையில் மெனராகலை மாவட்டத்தில் உள்ள வெல்லவாய பகுதியில் யுத்தம் நடைபெற்றது. இதில் இலங்கை முஸ்லிம்களும் அரபிகளும் ஒட்டகத்தில் ஏறி போர்த்துக்கேயருக்கு எதிராக யுத்தம் செய்தார்கள். இ...

மாநிலம் தழுவிய போதை ஒழிப்பு பிரச்சாரம்!

Image
சென்னை: பத்திரிகையாளர் மன்றத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில துணை தலைவர் முஹம்மது முனீர் தலைமையில் மாநில செயலாளர் சையது அலி, மற்றும் சென்னை மாவட்டங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேட்டி அளித்தனர். காஞ்சி மாவட்டம் சார்பாக ஜனவரி 22 ம் தேதி பொது சிவில் சட்ட எதிர்ப்பு கூட்டம் நடைபெறும். மேலும் டிசம்பர் முதல் வரும் 2023 பிப்ரவரி இறுதி வரை தமிழகம் தழுவிய மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறுவது குறித்தும் விளக்கினர்.

கேரளாவில் நீதிபதியாகும் ஆலிம்!

Image
மௌலவி சி.அப்துர் ராசிக் சுரைஜி.... எம். ஏ., எல். எல். பி., எல். எல். எம். படித்தவர். மார்க்க கல்வியுடன் உலகக்கல்வி இணைந்த பாடத்திட்டத்தின் அவசியத்தை உணர்ந்த கேரள முஸ்லிம்கள், பல்லாண்டுகளுக்கு முன் பெருமுயற்சி செய்தனர். தற்போது அது, பல்வேறு அரசு வேலை வாய்ப்புகளில் பயனளித்து வருகிறது! கண்ணூர் மாவட்டத்தில் கட்டாங்கோடு ஊரைச் சார்ந்த அப்துர் ராசிக், தொடக்க கல்வி முதல் பத்தாம் வகுப்பு வரை மலையாள மீடியத்தில் பயின்றார். இவரின் தந்தை முஹம்மது மரணிக்க, தாயார் ஆமினா இவரை மார்க்க கல்வி பயில அனுப்பி வைத்தார். குற்றியாடி சிராஜுல் ஹுதா அரபிக் கல்லூரியில் +2 உடன் 2005 முதல் 2012வரை மார்க்க கல்வி பயின்று சுரைஜி ஸனது பெற்றார். சிராஜுல் ஹுதா அரபிக் கல்லூரியில் ஏற்பட்ட கல்வித்தாகம், அவரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றது. கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கில இலக்கியம், சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து எம்.ஏ. ஆங்கில இலக்கியமும் தேறினார். காரந்தூர் மர்க்கஸ் சட்டக்கல்லூரியில் சேர்ந்து ஸகாஃபி ஸனதுடன் எல்.எல்.பி முடித்த அப்துர் ராசிக், மீண்டும் திருப்பதி பல்கல...

அரிமா சங்க விருதுகள்!

Image
சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்தின் சேவையை பாராட்டியும், வட்டாரத் தலைவர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கருக்கு விருது வழங்கப்பட்டது. லயன்ஸ் சங்கம் 324 ஜெ யூனிட்டி ஆண்டின் முதல் காலாண்டில் சங்கங்கள் ஆற்றிய சீரிய பணிகளை பாராட்டி அங்கீகரிப்பதற்கான கேட் (GAT) காலாண்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு வானகரம் தனகோட்டி அம்மாள் திருமண மண்டபத்தில் மாவட்ட ஆளுநர் பி.வி. ரவீந்திரன் தலைமையில் கேட் தலைவர் பி.ஜெயக்கொடி ஏற்பாட்டிலும் முன்னிலையிலும் நடைபெற்றது. கூட்டு மாவட்டத் தலைவர் எஸ்.வி.மாணிக்கம், செயலாளர் ஆர்.ஸ்ரீதரன் சென்னை சோசியல் லயன்ஸ் சங்கத்திற்கு சிறந்த சங்கத்திற்கான (கோல்டு) விருதை வழங்க, தலைவர் எம்.அன்சர் ஃபாத்திமாவும் சிறந்த வட்டாரத் தலைவருக்கான விருதை வட்டாரத் தலைவர் நண்பன் எம்.முகம்மது அபுபக்கர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இதில் பன்னாட்டு முன்னாள் இயக்குநர் சம்பத், இளங்கோவன், முதல் நிலை ஆளுநர் பஜேந்திர பாபு, இரண்டாம் நிலை ஆளுநர் ஏ.டி. ரவிச்சந்திரன், முன்னாள் ஆளுநர்கள் டி.துளசிங்கம், சிவக்குமார், சுரேஷ், மாவட்டச் செயலாளர் இரா.ஏ.பாபு, பொருளாளர் சரவணன், மாவட்ட நிர்வாகிகள் மணிசேகர், ராமு, மோகன்...

குனி மனிதரைக் கூன் நிமிர்த்தியவர்!

Image
* கூடாது கூடாது கூடாது கூடாதென்று பாடாய்ப் படுத்திப் பாழ்படுத்தினர்! சமூகத்தை கேடுகள் கிழித்தெறியக் கிளர்ந்தது ஒரு சிங்கம்! * கூடாது கூடாதென்று கூடாரை வென்ற பெருஞ்சித்தர் நம் பெரியார்! * காலணியக் கூடாது - மேலணியக் கூடாது - நூலணியக் கூடாது - கையவிழக் கூடாது - மெய் நிமிரக் கூடாது - நீர் அருந்தக் கூடாது - நேர் வருதல் கூடாது - நூல் படிக்கக் கூடாது - மேலுயரக் கூடாது - கிட்ட வரக் கூடாது - தொட்டுவிடக் கூடாது - பட்டுவிடக் கூடாது - வேலை பெறக் கூடாது - கோவில் வரக் கூடாது - துண்டு தோளேறக் கூடாது - பெண்டிர் முன்னேறக் கூடாது - விதவையர் பூச்சூடக் கூடாது - பொட்டு வைக்கக் கூடாது - மறுமணங்கள் கூடாது - புதுவாழ்வு கூடாது என கூடாதுகளால் வாழ்வு கூடாதிருந்தது... * கனியை விலக்கிற்று ஒரு வேதம் - மனிதரையே விலக்கிற்று இம்மண் பேதம் - வைக்கத்தில் பெரியார் வைத்தார் பாதம் - மிதிபட்டது அம்மண் மட்டுமன்று - அம்மண்ணின் அடிமைத்தனமும்! * வந்ததைக் கண்டனர் - வென்றதைக் கேட்டனர் - இதிகாச ராமசாமி பாதம் பட்டு ஓர் அகலிகை மட்டுமே உய்...

நலத்திட்ட உதவிகள் - பணி ஆணைகள் வழங்கிய அமைச்சர் உதயநிதி!

Image
காரைக்குடி: சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடியில் நலத்திட்ட உதவிகளை ஏழை - நடுத்தர மக்களுக்கு வழங்கினார். மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன்களும் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் தென்னவன் இல்லம் சென்று நலம் விசாரித்தார். காரைக்குடி நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தில் புதிய திட்டப்பணியை பார்வையிட்டார் புதிய இளம் அமைச்சர் உதயநிதி. முன்னதாக அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக காரைக்குடி நகரின் முக்கிய சாலைகளில் திமுக கொடிகள் நடப்பட்டிருந்தன.

காரைக்குடியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Image
காரைக்குடி: தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இன்று காரைக்குடி வந்த அவர் நாளை ( சனிக்கிழமை ) காலை இல்லம் தேடி உறுப்பினர் சேர்க்கை, இளைஞர் அணி உறுப்பினர் சேர்ப்பு பணியை தொடங்கி வைக்கிறார். காரைக்குடி செல்லப்பா வித்யா மந்திர் சர்வதேச பள்ளியில் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கிவைத்து பணி நியமன ஆணைகளை வழங்குகிறார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்களை வழங்கிப் பேசுகிறார். அமைச்சராகி முதன் முதலாக வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் செய்துள்ளார்.

போற்றத்தக்க மொரோக்கோ வீரர்களின் பண்பு!

Image
கொண்ட கொள்கையில் வளைந்து கொடுக்காத வளைகுடா நாடு கத்தர்! அங்கு நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் மொராக்கோ முஸ்லிம் வீரர்கள் உலகுக்கே ஒரு பெரும் பண்பையும் போற்றத்தக்க நாகரீகத்தையும் கற்றுத்தந்தனர். போட்டியில் வெற்றி பெறும்போதெல்லாம் தங்கள் பெற்றோரைக் கட்டியணைத்து முத்தமிட்டு, ஒவ்வொரு போட்டியின்போதும் குழுவாகச் சேர்ந்து 'துஆ' (பிரார்த்தனை) செய்து, குடும்பத்தினருடன் சேர்ந்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அதேவேளை ஐரோப்பிய கால்பந்தாட்ட வீரர்களோ... வெற்றியின்போது பெண் தோழிகளையும் யாரென்றே தெரியாத அழகிகளையும் முத்தமிட்டு முகம் சுழிக்க வைத்தனர். ஐரோப்பியர்களிடம் நெருக்கமான குடும்பப் பிணைப்புகள் பெரும்பாலும் இல்லை. கூட்டுக் குடும்பம் எனும் கட்டமைப்பு, அவர்களிடையே முற்றாக மறைந்துவிட்டது. பெற்றோர், முதியோர் இல்லங்களில் விடப்படுகின்றனர். எல்லாவித அநாகரிகங்களையும் எவ்வித கூச்சமும் இன்றி செயல்படுத்துகின்றனர். அதேசமயம், மொராக்கோவின் வீரர்கள்தம் வெற்றிகளில், அவர்தம் குடும்ப ஆதரவு பெரும் பங்காற்றுகின்றது. ஐரோப்பியர்தாம் மொராக்கோ மக்களுக்கு கால்பந்தாட்டத்தைக் கற்று...

புனித உம்ரா முடித்து சென்னை வந்த வக்பு வாரிய தலைவருக்கு வரவேற்பு!

Image
சென்னை : புனித உம்ரா பயணம் மேற்கொண்டிருந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில முதன்மை துணைத்தலைவரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவருமான முன்னாள் எம். பி. அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் 18.12.2022 ஞாயிறு இரவு 7.30 மணிக்கு சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் வக்பு வாரிய தலைமை வழக்கறிஞர் காஜா முகைதீன் ஜிஸ்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பி. மீராசா மரைக்காயர், சேலம் மாவட்ட முன்னாள் தலைவர் A.K. நசீர் அஹமது, சேலம் ஜாமிஆ பள்ளி முத்தவல்லி எஸ். ஆர். அன்வர், சிதம்பரம் முஹம்மது அலி, செல்லப்பா என்ற ஜியாவுதீன், தலைமை நிலைய பேச்சாளர் கொள்ளிடம் ரசீத் ஜான், கள்ளக்குறிச்சி முத்தவல்லி இக்பால் ஹாஜியார், திருச்சி நத்ஹர் வலி தலைமை அறங்காவலர் அல்லாபக்ஸ், எழுத்தாளர் அத்தேஷ், வழக்கறிஞர் பக்ரூதீன், சென்னை மேற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலி அஹமது உள்ளிட்ட ஏராளமானோர் வரவேற்றனர்.

நூல் அறிமுகம்!

Image
அறிவுடையார் எல்லாம் உடையார் எனும் நூல் மனித வாழ்வில் அறிவொளியை ஏற்றி, தீமைகளை விட்டும் தடுத்து - மோசடிகளைப் புரியவைத்து அறிவுப் பாதையில் செலுத்தும் பணியைச் சுமந்து வருகிறது! பக்கம் : 168 விலை: ரூ.110 9790732894 ஜி பே-யில் பணம் செலுத்தலாம்.

பிஜேபிக்கு எதிராக முற்போக்கு கட்சிகள் ஒன்று சேர்வதே எங்கள் விருப்பம்!-பேராசிரியர் காதர் மொகிதீன் பேட்டி

Image
கும்பகோணம்: 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் சேர்வதே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் விருப்பம் என்று கும்பகோணத்தில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் பேட்டி அளித்துள்ளார். கும்பகோணத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் முகமது சுல்தான் தலைமையில் 15-12-2022 வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. மாநில செயலாளர் ஆடுதுறை ஏ.எம்.ஷாஜஹான், மாநில துணைச்செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கலந்துகொண்டு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்தலை நடத்தி சிறப்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துவங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி அதன் பவள விழாவை மிகப் பெரிய மாநாடாக சென்னையில் நடத்தத் திட்டமிடப்பட்டு, அதற்கான ஏற்பாட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் பல்வேறு மா...

சிறுபான்மை மாணவர்களுக்கு அநீதி! நவாஸ் கனி எம். பி. கண்டனம்

Image
சிறுபான்மை மாணவர்களுக்கான ப்ரீ மெட்ரிக் கல்வி உதவித் தொகை 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாகும். இம்முடிவினை ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சகம் மறு ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ்கனி எம்பி ஒன்றிய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது :- ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறுபான்மை நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வந்த Pre Matric Scholarship இனி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருப்பது சிறுபான்மை சமூக மாணவர்களை வெகுவாக பாதிக்கும் நடவடிக்கையாகும். கல்வி உரிமைச் சட்டம் 2009 -ன் படி நடுநிலை கல்வி வரை இலவச கட்டாய கல்வி வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி இந்த கல்வி உதவித் தொகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருப்பது பெ...

இலங்கையில் நபிகள் நாயகம் ( ஸல் ) நூல் வெளியீடு!

Image
கொழும்பு: இலங்கை முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த - பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எழுதிய 'நபிகளாரின் சமூக உறவு' நூல் வெளியீட்டு விழா கொழும்பு நகரில் கலாபூஷணம் என். எம். அமீன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தனராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். முதல் தூதர் இறங்கிய இலங்கை மண்ணில் இறுதி தூதர் குறித்து விளக்கும் நூல் வெளியிடப்படுவது மிகவும் பொருத்தமானது என்று அவர் குறிப்பிட்டார். நூலாசிரியர் ம.ம.க. தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் ஏற்புரை ஆற்றினார். இலங்கை சுற்றுப் பயணத்தில் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் தெஹிவளையில் நடைபெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பேராளர் மாநாட்டிலும் பங்கேற்றார். முன்னாள் அமைச்சர் அமீர் அலி, ரிசாட் பதியுதீன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராகப் பதவியேற்பு!

Image
சென்னை: தமிழ்நாடு புதிய அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு. க. ஸ்டாலின், அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், தமிழக எம் எல் ஏக்கள், எம்பிக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஆளுநர் ஆர். என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், கே. என். நேரு, கே கே எஸ் எஸ் ஆர் ராமசந்திரன், பொன்முடி, பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மற்றும் கனிமொழி எம்பி, தயாநிதி மாறன் எம்பி மற்றும் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை விளையாட்டுத் தலைநகராக ஆக்குவதற்கு முயற்சி செய்வேன் என்று பேட்டியில் தெரிவித்தார். உதயநிதியின் மனைவி பெயர் கிருத்திகா. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். முதல்வர் - திமுக தலைவர் மு. க. ஸ்டாலின்- துர்கா தம்பதியின் மகனான உதயநிதி ( வயது 45 ) பி.காம் படித்துள்ளார். திரைப்படத் தயாரிப்பாளராக - நடிகராக உள்ள அவர் திமுக இள...

மாண்டஸ் என்பது யார்?

Image
இப்போது வந்துள்ள புயலுக்கு மாண்டஸ் என்று ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள் தெரியுமா ? டாக்டர் அப்துல்லா அல் மன்னூஸோ ( மாண்டஸ் என்பதற்கு இதுதான் உச்சரிப்பு!) என்ற இந்த அரபு நாட்டவரின் பெயர் தான் அது. யார் இவர் ? ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறந்த இந்த அப்துல்லா அல் மாண்டஸ் தான் இப்போது உலக நாடுகளின் வானியல் ஆய்வு அமைப்புகளின் தலைவர். பி எஸ்சி , எம் எஸ் சி , பி எச்டி முதலான படிப்புகளை வானிலை ஆராய்ச்சி தொடர்பாகவே - பல நாடுகளில் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர். இவரது பெயரைத் தான் இப்போது தமிழ்நாட்டில் அடிக்கும் புயலுக்கு பெயராக வைத்துள்ளார்கள். மன்னூஸோ என்றால் பொக்கிஷப் பெட்டி என்று பொருளாம்!

சென்னையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Image
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே பதினேழு இயக்கம் சார்பாக ஒன்றிய அரசின் இந்தி திணிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திருமுருகன் காந்தி தலைமையில் நடைபெற்றது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணை தலைவர் முஹம்மது முனீர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் திராவிட முன்னேற்றக் கழக எம் பி ஆலந்தூர் ஆர். எஸ். பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னியரசு, எஸ்டிபிஐ பொது செயலாளர் அ.ச. உமர் பாருக், விடுதலை தமிழ் புலிகள் கட்சி குடந்தை அரசன், மமக அமைப்பு செயலாளர் புழல் சேக், மதிமுக செங்குட்டுவன் என பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இஸ்லாம் மார்க்கத்தை தழுவினால் இட ஒதுக்கீடு இல்லையா?

Image
இஸ்லாத்தை விரும்பி வாழ்வியலாக ஏற்கும் சகோதரர்களை முஸ்லிம் சமூகத்தின் எந்த பிரிவில் சேர்ப்பது என்பது தொடர்பான தெளிவான வழிகாட்டுதல் தமிழக அரசால் வழங்கப்படவில்லை. காரணம் அது தொடர்பான ** ( படம் : புகழப்பட்டவர் நூல் வெளியீடு! இனிய திசைகள் செய்தி )*** கோரிக்கை எதுவும் முஸ்லிம்களால் முன்வைக்கப்படவில்லை. தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கான 4 கடிதங்களில் இஸ்லாத்திற்கு மதம் மாறுபவர்களை " Others Category " என்ற வகையில் சேர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் கல்வி - வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இஸ்லாத்தை ஏற்ற இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த யு. அக்பர் அலி அவர்கள் BCM பட்டியலில் வரமாட்டார் என்று TNPSC செயலாளர் அளித்த உத்தரவு செல்லும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு தமிழக அரசின் இந்த தெளிவில்லாத கடிதங்களே காரணம். இஸ்லாத்தை விரும்பி ஏற்கும் யாரையும் BCM பட்டியலில் உள்ள லெப்பை, ராவுத்தர், மரைக்காயர், அன்சார், தக்னி,...

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் சந்திப்பு!

Image
ஜி 20 மாநாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லி சென்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்களை தேசிய துணை தலைவர் அப்துஸ் ஸமது சமதானி எம். பி., லாயர்ஸ் போரம் தேசிய தலைவர் ஹாரிஸ் பீரான், உ. பி. மாநில தலைவர் சர்ப்ராஸ் கான், தேசிய செயலாளர் குர்ரம் அனீஸ் உமர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணி மாநில நிர்வாகிகள் தேர்வு!

Image
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - லாயர்ஸ் ஃபோரம் மாநில வழக்கறிஞர் அணியை கட்சியின் தேசிய தலைவர் கே. எம். காதர் மொகிதீன் தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் தலைமை நிலையம் காயிதே மில்லத் மன்ஸிலில் தேசிய வழக்கறிஞர் பேரவை பொது அமைப்பாளர் பி. இ. அபுசித்தீக் தலைமையில் நடைபெற்றது.தேசிய கவுன்சில் உறுப்பினர் ஏ. எஸ். அப்துல்ரஹ்மான் ரப்பானி கிராஅத் ஓதினார். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர் வரவேற்புரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் மாநில வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

ஜி 20 மாநாடு: அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம்!

Image
புதுடெல்லி: ஜி 20 மாநாடு தொடர்பாக அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இந்தியா ஜி 20 அமைப்பு மாநாடுக்கு தலைமை ஏற்பதை முன்னிட்டு டெல்லியில் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு. க. ஸ்டாலின் பேசுகையில், பருவ நிலை மாற்றம் தொடர்பான இந்தியாவின் இலக்குகளை அடைய தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கும் என்று குறிப்பிட்டார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே. எம். காதர் மைதீன், திமுக எம்பி டி. ஆர். பாலு, கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரகாஷ் காரத், டி. ராஜா, அ. தி. மு. க. சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

சோழர் கால தமிழ் எழுத்து கல்வெட்டுகளை வாசிப்பது எப்படி?

Image
சோழர் கால தமிழ் எழுத்து கல்வெட்டுகளை வாசிப்பது சற்று எளிதுதான். கொஞ்சம் முயற்சியும் ஒரு வாரப் பயிற்சியும் இருந்தால் போதும். எளிதாகத் தமிழ் கல்வெட்டுகளை வாசித்து விடலாம். ** அட்டவணையில் தமிழ் கல்வெட்டுகள் அனைத்தும் உள்ளன. நன்கு கவனித்து உள்வாங்கி நாளொன்றுக்கு 5 தடவை எழுதி எழுதி ஒரு வாரம் பயிற்சி செய்தால் நிச்சயமாக சோழர்கால கல்வெட்டுகளை எளிதாக வாசிக்க முடியும். ** பயிற்சியைத் துவங்குமுன் ஒரு சில குறிப்புகளை நினைவில் கொள்ளவும். " அ " முதலான உயிர் எழுத்துக்கள் ஏறக்குறைய தற்காலிக வடிவம்தான். ' இ ' எழுத்து மட்டும் எண் 3 போல் இருக்கும். எ ,ஏ மற்றும் ஒ ,ஓ இரண்டுக்கும் ஒரே ஒரு எழுத்துத்தான். 'க ' வரிசை எழுத்துக்கள் தற்கால வடிவம்தான். " கை" எழுத்தை " ளக" என்று படிக்கும் அபாயம் உண்டு. சற்றுக் கவனம் தேவை. " ங " வரிசை கூர்ந்து கவனிக்க. ஙு என்பது பு எழுத்துப் போல் தோன்றும். "ச " வரிசையில் சு, சூ இரண்டும் ஒரே எழுத்துபோல் இருக்கும். "ட. வரிசையில் டு என்பது தற்கால ரு எழுத்துப்போல் இருக்கும். "ண " வரிசையில்...