நூல் அறிமுகம்: மகாத்மா காந்தி படுகொலை - புதிய உண்மைகள்!
பாசிசத்தை அறியும் புத்தகங்களின் வரிசையில்..... *மகாத்மா காந்தி கொலை வழக்கு புதிய உண்மைகள் - அப்பு எஸ்தோஸ் சுரேஷ், பிரியங்கா கோட்டம்ராஜூ* தன் வாழ்நாள் முழுதும் ஹேராம் என்று கூறியவர், சனதனத்தினை வலுவாக பிடித்துக்கொண்டிருந்தவர் , இறக்கும் வரையிலும் பிராத்தனைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர். அப்படி இருந்தும் ஏன் காந்தியடிகள் கொல்லப்பட்டார்? அதுவும் கோட்சே எனும் பார்ப்பணரால்! காந்தி இந்துவாக இருந்தார்... கோட்சே இந்துத்துவா ஆக இருந்தார் என கூறி கடந்துப்போனாலும், இன்று கோட்சேவை கதாநாயகனாக ஆக்கிடும் நிலை ஆட்சியாளர்களால் வெளிப்படையாகவே செய்யப்படுகின்றது. இதற்கு என்ன காரணங்கள் முதன்மையாக இருக்கும் என ஆராய்ந்தால் அதற்கு கிடைத்திடும் பதிலே இந்நூல். காந்தியின் மீது ஒரு சாரார் கொண்டிருந்த வெறுப்புணர்ச்சியின் அடிப்படை என்ன? அந்த வெறுப்பு உணர்ச்சி கோபமாகவும், பின் வெறியாகவும் மாறிய தருணம் எது? கோட்சே எப்படி உருவாக்கப்பட்டான்? சதித்திட்டங்கள்? படுகொலைக்கான திட்டமிடல்கள்? இறுதியாக படுகொலை என பதைபதைக்க வைக்கும் பல நிகழ்வுகள் அடுத்தடுத்து மறைக்கப்பட்ட பல தகவல்களை கொண்டு உங்கள் மனக்கண்ணை...