Posts

Showing posts from September, 2022

ஐ. டி. ஊழியர்களுக்கு... வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி எச்சரிக்கை!

Image
ஐ. டி. நுட்பவியலாளர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு துன்பம் அனுபவித்த எச்சரிக்கை செய்திகள் வெளிவந்துள்ளன. அவர்கள் தாய்லாந்தில் வேலை என்று கூறி மியான்மர் நாட்டுக்கு கடத்தப்பட்டு நீண்ட நேரம் கடும் வேலை செய்யச் சொல்லி துன்புறுத்தப்பட்ட அதிர்ச்சி தகவல் மற்றும் விழிப்புணர்வு காணொலி இது!

தமிழ்நாட்டில் ஆர். எஸ். எஸ். பேரணிக்கு தடை!

Image
சென்னை: தமிழ்நாட்டில் வரும் அக்.2ஆம் தேதி - மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேயை ஆதரிக்கும் பயங்கரவாத அமைப்பான ஆர். எஸ். எஸ். பேரணி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மதச் சார்பற்ற கட்சிகள் காந்தி பிறந்தநாளில் மதநல்லிணக்க பேரணி நடத்துவோம் என அறிவித்து இருந்தன. இதனைத் தொடர்ந்து, சட்டம்- ஒழுங்கு பிரச்சினை காரணமாக ஆர். எஸ். எஸ். பேரணிக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. காந்தி பிறந்தநாளில் மத நல்லிணக்கப் பேரணிக்கும் தடை விதித்து உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதழியல் சாதனை புரிந்த ஆதித்தனார்!

Image
இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் ஆங்கிலேய கொடுங்கோல் அரசின் அடக்குமுறையை எதிர்த்து , நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடந்தன. அப்படி ஒரு அறவழிப் போராட்டம் மதுரையிலும் நடந்தது. அந்தப் போராட்டத்தில் ஆங்கிலேய அரசின் சூழ்ச்சியால் கலவரம் ஏற்பட்டது. ஆங்கிலேய அரசின் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள். ஆனால், ஒருவர் மட்டுமே கொல்லப்பட்டதாக செய்தி வெளியிட வேண்டும் என்று காவல்துறையினர் கட்டளையிட்டார்கள். அப்போது மதுரையிலிருந்து மதுரை முரசு என்ற இதழை நடத்தி வந்த சி.பா.ஆதித்தனார் மதுரையில் போலீஸ் துப்பாக்கிச் சூடு! மூன்று பேர் சாவு!" என முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டார். அதைப் பார்த்த ஆங்கிலேய அதிகாரிகள் போர்க்கால அதிகாரத்தைப் பயன்படுத்தி மதுரை முரசு இதழைத் தடை செய்தனர். அதிகாரிகள் ஆணை பிறப்பித்தாலும் உண்மைச் செய்தியை வெளியிட ஆதித்தனார் தயங்கியது இல்லை என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும். அவர்களின் தமிழ்ப் பற்றும் இதழியல் சாதனையும் போற்றத்தக்கது. ( சி. பா. ஆதித்தனார் பிறந்த தினம் செப்டம்பர் 27 )

தமிழகத்தை அமளிக்காடாக்க பாசிச சக்திகள் சதி! ஜவாஹிருல்லா எம். எல். ஏ. அறிக்கை

Image
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கை: சமூகநீதியின் நிலைக்களமான தமிழ்நாட்டில், பாஜகவின் சனாதன கொள்கையை நுழைத்துவிட பெரும் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அரசியல் சாசனத்தின் மீது பதவிப் பிரமாணம் எடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்எஸ்எஸ்ஸின் முழுநேர ஊழியர் போல செயல்படுவதும், சனாதனக் கொள்கையையும், அதை செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையையும் பகிரங்கமாக ஆதரித்து பல கூட்டங்களிலும் பேசி வருகிறார். நெடுங்கால சிறைவாசிகள் விடுதலை குறித்த கோப்புகளைக் கிடப்பில் போடும் ஆளுநர், ஆர்எஸ்எஸ் கொள்கைகளை வளர்ப்பதற்கு அதிக சுறுசுறுப்பைக் காட்டிவருவது குறிப்பிடத்தக்கது. கட்சியில் பதவி பெறுவதற்கும், காவல்துறை பாதுகாப்பு பெறுவதற்கும், பிரபலமாவதற்கும், அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்கும் தங்கள் இடங்கள் மீதும் வாகனங்கள் மீதும் தாங்களே குண்டு வீசி பலமுறை சிக்கிக்கொண்டு அம்பலமானவர்கள் பாஜகவைச் சேர்ந்தவர்கள். 26.09.2022 தேதியிட்ட முரசொலி நாளேடு இதைத் தொகுத்து வெளியிட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இத்தகைய சம்பவங்கள்...

இஸ்லாமும் கூட்டமைப்பும் நூல் வெளியீடு!

Image
மவ்லானா ஸத்ருத்தீன் இஸ்லாஹி உர்தூ மொழியில் எழுதிய நூலை முஹம்மது அபுல் ஜலால் மலையாளத்தில் மொழிபெயர்க்க, அதனை தமிழில் மவ்லவி முஹம்மது இஸ்மாயில் மொழிபெயர்த்துள்ளார். வெளியீடு: இஸ்லாமிய நிறுவனம் அறக்கட்டளை ( ஐ எப் டி ), பெரம்பூர் நெடுஞ்சாலை, சென்னை.

இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல் கர்ளாவி காலமானார்!

Image
புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர் யூசுப் அல் கர்ளாவி கத்தர் நாட்டில் காலமானார். எகிப்து நாட்டைச் சேர்ந்த அவர் சிறந்த கல்வியாளர் ஆவார். அரபு மொழியில் உள்ள அவரது நூல்கள் உலகின் பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன.

முதல்வருக்கு அப்பாவி முஸ்லிம்கள் சார்பில் வேண்டுகோள்!

Image
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகத்தில் முஸ்லிம்களின் வீடுகளில் அடாவடி - சட்டவிரோத என். ஐ. ஏ. சோதனை சம்பந்தமாக மதுரை வழக்கறிஞர் எம். எம். அப்பாஸ் எழுதிய கடிதம் வருமாறு : கடந்த 22.09.22 அன்று ஒன்றிய பாரதிய ஜனதா அரசின் கைப்பாவையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் சிலரின் வீடுகளில் சட்டவிரோத சோதனை நடத்தி அப்பாவிகளை கைது செய்து கொண்டு சென்றதை தாங்கள் நன்கு அறிவீர்கள். முஸ்லிம் சமூகத்தின் மீதும், முஸ்லிம்களின் வழிபாட்டுத் தளங்களின் மீதும் தீராத மத வெறுப்பு கொண்டதுதான் மத்திய பாரதிய ஜனதா அரசு என்பதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள். இந்தப் பின்னணியில்தான் முஸ்லிம் சமூகத்தால் நடத்தப்படும் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது பாரதிய ஜனதா அரசும் அதன் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறையான என் ஐ ஏ வும் வெறுப்பு கொண்டுள்ளதும் தாங்கள் அறிந்ததே. இவ்வெறுப்பை தணிக்க பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி அதன் நிர்வாகிகளை கைது செய்ய நடத்தப்பட்டது தான் கடந்த 22.09.2022 அன்று நடைபெற்ற சோதனை என்பதை தாங்கள் அறிந்திராமல் இருக்...

இஸ்லாமிய அமைப்புகள் மீது அடக்குமுறை: வைகோ கண்டனம்!

Image
ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: அண்மைக் காலமாக ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை ஆகியவைகளின் மூலம் இஸ்லாமிய அமைப்புக்களின் நிர்வாகிகள் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் புகுந்து சோதனை என்ற பெயரில் அவர்களை அச்சுறுத்தி வருகிறது. எஸ்.டி.பி.ஐ., பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புக்கள் மக்களாட்சி முறையில் வெளிப்படையாக இயங்கி வரும் அமைப்புக்களாகும். இந்த அமைப்பில், இந்துக்கள் முதலான பிற மதத்தினரும் நிர்வாகிகளாக உள்ளனர். ஆம்புலன்ஸ் வண்டிகள் மூலம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவி செய்தல், இயற்கை பேரழிவின்போது அனைத்து மக்களுக்கும் நிவாரண உதவிகளை அளித்தல், குருதிக் கொடை வழங்குதல், மத நல்லிணக்க ஊர்வலங்களை நடத்தி, ஒற்றுமைப் படுத்துதல் என பல வகைகளிலும் இந்த அமைப்புகள் ஆரவாரமின்றி பணியாற்றிக்கொண்டு இருக்கின்றன. இந்த அமைப்புகளை பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதாக புழுதிவாறித் தூற்றும் பணியில் சங் பரிவார் கூட்டம் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டு வருகிறது. மக்கள் ஆதரவுடன், வேரூன்றி வளர்ந்து வரும் இந்த அமைப்புக்களை இயங்கவிடாமல் தடுத்து, அழி...

ஆ. ராசா சொன்னது பாடநூலில்!

Image
தி. மு. க. நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஏதோ தவறாகப் பேசிவிட்டதாக பாசிச பிற்போக்குவாதிகள் துள்ளிக் குதிக்கிறார்கள்! பெரியார் பேசாத ஒன்றை - டாக்டர் அம்பேத்கர் எதிர்த்து புறக்கணிக்காத ஒன்றை அவர் பேசினாரா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தம்மை இழிவுபடுத்தும் சித்தாந்தம் குறித்து தான் அவர் கோபமாகப் பேசினார். சி. பி. எஸ். இ. வரலாறு புத்தகத்தில் மனுஷ்மிருதியின் நாலு வர்ணத்தை பாடமாக வைத்துள்ளதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒன்றிய அரசின் சி. பி. எஸ். இ. ஆறாம் வகுப்பு வரலாறு புத்தகத்தில் இந்தப் பாடம் உள்ளது.( படம் பார்க்கவும்! ) பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களின் மனதில் ஜாதிகளின் அடிப்படையில் வேறுபாட்டை புகுத்தி நஞ்சை ஊட்டி பிரித்தாளும் சூழ்ச்சி செய்து அரசு உயர் பதவியில் இருப்போர் யார் என்ற விழிப்புணர்வு அனைத்து சமுதாய மக்களுக்கும் வர வேண்டும். * தகவல்: ஜமால் முஹம்மது.

பஞ்சாப் முதல்வர் பற்றி அவதூறு : ஆம் ஆத்மி வசீகரன் கண்டனம்!

Image
ஆம்ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் நா. வசீகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாப் மாநிலத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மிகப் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இதன் முதலமைச்சராக பகவத் மான் பதவியேற்று சிறப்பான ஆட்சியை தந்து கொண்டிருக்கிறார். இந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி என்பது சரித்திரம் வாய்ந்த வெற்றி ஆகும். யாரும் எதிர்பார்க்காத இந்த வெற்றி பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ், அகாலிதள் ஆகிய கட்சிகளை இருக்கிற இடம் தெரியாமல் செய்துள்ளது. இதற்கு காரணம் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பகவத் மான் ஆவார்கள். இதை பொறுத்துக் கொள்ள முடியாத பாரதிய ஜனதா கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பகவத் மான் மீதும் ஆம் ஆத்மி கட்சி மீதும் அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார்கள். சமீபத்தில் ஜெர்மனி நாட்டுக்கு சென்று இருந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மீது அவதூறாக செய்தி பரப்பப்பட்டு வருகிறது. அதில், 'விமானத்தில் நன்றாக குடித்து விட்டு போதையில் இருந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார் ' என்ற தவறான தகவலை வெளியிட்டுள்ளன. அவதூறான செ...

இந்திய குடியரசுத் தலைவருக்கு லண்டனில் கிடைத்த வரவேற்பு! ( மலரும் நினைவுகள் )

Image
*19 செப்டம்பர் 2022 - இன்றுடன் விடைபெற்ற இங்கிலாந்து மகாராணி எலிசபெத் அவர்களின் நினைவலைகள்: இந்தியாவின் இரண்டாம் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அரசு முறை பயணமாக 1963 -இல் லண்டன் சென்றிருந்த போது மகாராணி எலிசபெத் ரயில் நிலையத்திலிருந்து கௌரவித்து தனது பக்கிங்ஹாம் அரண்மனைக்கு தனது சாரட் (குதிரை) வண்டியில் அழைத்துச் செல்லும் காட்சியைக் காணொலியில் காணுங்கள். சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயின்றவர். இவர் ஆசிரியராகப் பணியாற்றியதால் இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1954 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தகவல் - காணொலி அனுப்பியவர்: ஜமால் முஹம்மது

கேரள மாணவி உலக சாதனை!

Image
கேரளாவைச் சேர்ந்த ரெஹனா ஷாஜஹான் 24 மணி நேரத்தில் பல்வேறு படிப்புகளில் 81 ஆன்லைன் சான்றிதழ்கள் பெற்று உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்!

நபிகள் நாயகம் ( ஸல் ) பற்றி அறிஞர் அண்ணா!

Image
ஆயிரம் வருடங்களுக்கு முன்னாலே அரேபிய நாட்டிலே, மணற்காட்டிலே மெய்ஞான போதகர் வீசிய மூன்று மாணிக்கங்களை நான் பெற்றேன்! மாணிக்கங்களா? ஆமாம்! மாணிக்கங்கள்தான்! ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! அல்லாஹு அக்பர்! ~ பேரறிஞர் அண்ணாதுரை.

சவுக்கு சங்கர் பேசியது சரிதானா?

Image
ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் அவதூறு வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ளார். நீதிபதிகள் பற்றி கடுமையான விமர்சனம் செய்துள்ளார். யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர். ஆனால் அவதூறாகப் பேசக்கூடாது. இந்த காணொலியில் இவர் பேசும் சில கருத்துக்கள் நியாயமாகவே உள்ளது.

இந்தியாவின் ஆட்சி மொழியாக தமிழுக்கே தகுதி! - காயிதே மில்லத்

Image
*கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் இந்திய அரசமைப்பு கூட்டத்தில் ( 14.09.1949 ) பேசியது: " இங்கே ஒரு மொழி இந்திய மொழியாக மட்டும் இருந்தால் போதாது, இந்நாட்டினுடைய மிகவும் பழமையான மொழியாகவும் அது இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மொழியைத்தான் நமது தேசிய மொழியாக ஏற்றுக்கொள்ள முடியும். " எனக் கூறினார்கள்... இந்த வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமானால், நான் ஒரு உண்மையை இச்சபை முன்பு தைரியமாகக் கூற விரும்புகிறேன். இந்நாட்டு மண்ணில் பேசப்பட்ட மொழிகளில் மிகவும் பழமையானதும், ஆரம்ப காலத்தில் இருந்து பேசப்பட்டு வரும் மொழியாக இருப்பதும் தமிழ் தான். அதாவது திராவிட மொழிகளே இந்நாட்டின் புராதன மொழிகள் என நான் துணிந்து கூறுகிறேன். இந்நாட்டு மண்ணில் பேசப்பட்ட முதல் மொழி திராவிட மொழியே என்ற எனது கூற்றை எந்த வாலாற்றாசிரியராலும் மறுக்க முடியாது. எந்த புதைபொருள் ஆராய்ச்சியாளராலும் எதிர்க்க முடியாது. உயர்தரமான இலக்கிய வளங்களும், நயங்களும் நிறைந்த மொழி தமிழ். இது மிகவும் புராதனமான மொழி. இது எனது தாய்மொழி என்...

கோவை : எஸ். டி. பி. ஐ. அலுவலகத்தில் ஐ. டி. அதிகாரிகள் சோதனை!

Image
கோவை மாவட்ட எஸ். டி. பி. ஐ. கட்சி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு தமிழக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஒன்றிய அரசின் தவறான போக்கு குறித்து கட்சி தலைவர் நெல்லை முபாரக் கண்டனம் தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகம் முன் திரண்ட தொண்டர்கள் ஒன்றிய பிஜேபி அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

பெங்களூர் வெள்ளத்தில் மூழ்கியது ஏன்?

Image
சமீபத்தில் பெய்த மழையால் பெங்களூர் வெள்ளத்தில் மூழ்கியதற்கு யார் காரணம் என்று விளக்குகிறது இந்த காணொலி!

பி. காம் பாடத்தில் சர்ச்சையான கருத்து!

Image
பெண்ணுரிமைகளுக்கு பெருமை சேர்க்கும் இஸ்லாம் மார்க்கம் எந்த அடிமைத்தனத்தையும் ஊக்குவிக்கவில்லை. பர்தா முறை பெண்களுக்கு பாதுகாப்பு என்பதை முஸ்லிம் பெண்கள் உணர்ந்து கடைப்பிடித்து வருகிறார்கள். அதனை கொச்சைப்படுத்துவது போல் பி.காம். பாடத்தில் ஒரு கேள்விக்கு பர்தா முறையை ஒழிப்பது என்று குறிப்பிடப்பட்டு இருப்பது முஸ்லிம்களின் மத நம்பிக்கையை புண்படுத்துவது ஆகும். அந்த தவறான கருத்தை நீக்குவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் பிரமுகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நீட் தேர்வுகளில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்கள் என்ன படிப்பில் சேரலாம்?

Image
இந்த வருடம் நீட் தேர்வில் 470 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தவர்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ படிப்பில் ஏதெனும் ஒன்று கிடைக்க வாய்ப்புள்ளது. நீட் தேர்வில் 470-க்கு கீழ் எடுத்தவர்களை குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் என கருதலாம், அவர்களுக்கு அடுத்து என்ன என்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை பார்ப்போம். * நீங்கள் அரசு பள்ளி மாணவராக இருந்தால், நீட் தேர்வில் 250-க்கு மேல் மதிப்பெண் எடுத்து இருந்தால் அரசு கவுன்சிலிங் மூலம் எம். பி. பி. எஸ். கிடைக்க வாய்ப்புள்ளது, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடையாது. * வாய்ப்பு 1 : அரசு நடத்தும் சித்தா, ஆயுர்வேதா கவுன்சிலிங் மூலம் தனியார் கல்லூரிகளில் சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி போன்ற படிப்புகளுக்கான இடம் கிடைக்க வாய்ப்புள்ளது. இங்கு ஆண்டு கல்வி கட்டணம் ரூ.1,25,000. அரசு சித்தா, ஆயுர்வேதா ஹோமியோபதி கல்லூரிகளில் கல்வி கட்டணம் மிக மிக குறைவு. ஆனால் அங்கு இடம் கிடைக்க நீட் தேர்வில் 500-க்கு மேல் மதிப்பெண் எடுத்து இருக்க வேண்டும். * வாய்ப்பு 2 : அரசு நடத்தும் மருத்துவ கவுன்சிலிங் மூலம் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் இ...

சமூக ஆர்வலர் அமீர் அல்தாப் எழுதிய நூல்!

Image
00 l ர் ட

இஸ்லாம் வளர்ந்தது எப்படி? - திருமாவளவன்

இந்தியாவை 800 ஆண்டுகள் ஆட்சி செய்த மொகலாயர்கள் - முஸ்லிம் மன்னர்கள் நினைத்திருந்தால் அனைவரையும் மதம் மாற்றியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. அவர்கள் அனைத்து மதத்தினருக்கும் மத சுதந்திரம் கொடுத்தார்கள். சமத்துவம் - சகோதராதத்துவம் காரணமாகவே இஸ்லாத்திற்கு பலரும் மதம் மாறினார்கள் என்று சமூக - மதங்களின் ஆய்வாளரும் வி. சி. க. தலைவருமான திருமாவளவன் பேச்சு இந்த காணொலியில்!

கணவன் - மனைவி பிரியாதிருக்க!

கணவன் - மனைவி இருவருக்கும் வாழ்வில் புரிதல் வேண்டும். கணவன் சொல்வதை மனைவியும் மனைவி சொல்வதை கணவனும் காது கொடுத்து கேட்க வேண்டும்.இந்த காணொலியைக் காணுங்கள்!

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா தஞ்சை மாவட்ட பொதுக்குழு!

Image
தஞ்சாவூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் 6-9-2022 அன்று திருவையாறு வட்டம் நடுக்கடை சமுதாய மஹாலில் நடைபெற்றது. மாவட்டத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட உலமா பெருமக்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நடுக்கடை ஜமாஅத் தலைவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவவிக்கப்பட்டது. நிகழ்ச்சியை திருவையாறு வட்டார ஜமாஅத்துல் உலமா சபையினர் ஏற்பாடு செய்திருந்தனர். படங்கள்: பொதுக்குழு நிகழ்ச்சியிலிருந்து சில காட்சிகள்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு தீர்மானங்கள்!

Image
சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்டம் சென்னை ராயபுரம் ரம்ஜான் மஹாலில் 3-9-2022 அன்று பேராசிரியர் கே. எம்.காதர் மொஹிதீன் தலைமையில் நடைபெற்றது. தேசிய பொதுச் செயலாளர் குஞ்ஞாலிக் குட்டி வரவேற்புரை ஆற்றினார். கேரள மாநில தலைவர் சையது சாதிக் அலி ஷிஹாப் தங்கள் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாநில முதன்மை துணை தலைவர் - வக்பு வாரிய தலைவர் அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான், பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், துணை தலைவர் நவாஸ் கனி எம். பி., கொள்கை பரப்பு செயலாளர் காயல் மகபூப், துணை செயலாளர் இப்ராஹிம் மக்கி, தேசிய மகளிர் அணி தலைவி பாத்திமா முஸப்பர் எம்.சி., பேராசிரியர் முனைவர் சேமுமு.முகமதலி மற்றும் தேசிய - மாநில நிர்வாகிகள், மாணவர் அணி, மகளிர் அணி மற்றும் செயற்குழு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் ஒன்றிய அரசு பாதுகாக்க வேண்டும், வரலாற்று சின்னங்களை அந்தந்த வகுப்பினரிடம் ஒப்படைக்க வேண்டும், கட்சியின் 75 ஆம் ஆண்டு பவள விழா விமரிசையாக கொண்டாடவும்- அனைத்து மாநிலங்களிலும் தேச - நேச நல்லிணக்கப் பயணம் நடத்தவும், தர்ம சன்சாத் உள்ளிட்ட இந்துத்துவா அமை...

இந்தியா - பங்களா தேஷ் இடையே 7 ஒப்பந்தங்கள்!

Image
புதுடெல்லி: இந்தியா - பங்களாதேஷ் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசினா இன்று இந்தியா வருகை தந்தார். டெல்லியில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார். பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். இரு நாட்டு நல்லுறவு- ஒத்துழைப்பு குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. இரு நாடுகளுக்கிடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

முஸ்லிம் சிறை வாசிகளை விடுதலை செய்யக் கோரி பேரணி!

Image

திருச்சியில் விழிப்புணர்வு முகாம்!

Image
திருச்சி: நீதி, அன்பு, ஒற்றுமை - இந்தியா எனும் சிந்தனை எனும் தலைப்பில் அரசியல் - சமுதாய விழிப்புணர்வு முகாம் திருச்சியில் 18-9-2022 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னாள் ஐ. ஏ. எஸ். அதிகாரி சசிகாந்த் செந்தில் நடத்துகிறார். இதில் கலந்து கொள்ள விரும்புவோர் இங்கே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்கள்!

Image