Posts

Showing posts from August, 2022

தென்காசியில் அரசுப் பணி தேர்வுக்கான பயிற்சி : மாணவர்களுக்கு வக்பு வாரிய ஆலோசனை கூட்டம்!

Image
தென்காசி சொர்ணபுரம் ஜமாஅத் சார்பில் வக்பு வாரியம் ஏற்பாடு செய்துள்ள அரசு பணியாளர்கள் தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் சேர்க்கை தொடர்பாக மாணவர்கள் - பெற்றோர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உ. பி. யை விட 5 மடங்கு வரி செலுத்தும் தமிழ்நாடு!

Image

படித்ததில் பிடித்தது!

Image
சோமாலியாவில் புகழ் பெற்று வரும் யூடியூபர் பைஸா சமாரா பற்றிய சுவையான தகவல்! நன்றி: குங்குமம்

ஊடகப் பார்வை: நான் பாடும் பாடல்!

Image
நான் பாடும் பாடல் எனும் திரைப்படம் ராஜ் தொலைக்காட்சியில் பார்த்தேன். எழுத்து - இயக்கம்: ஆர். சுந்தர்ராஜன். இசை: இளையராஜா. இப்படத்தில் சிவக்குமார், மோகன், பாண்டியன், சரத்பாபு, அம்பிகா, இளவரசி, நளினி என நட்சத்திரப் பட்டாளமே இருக்கிறது! சிவக்குமார் ஒரு எழுத்தாளராக - நாவலாசிரியராக நடித்திருப்பது சிறப்பு! மோகன் ஒரு மருத்துவராக வந்து விபத்தில் மரணம் அடைகிறார். அவரது மனைவி அம்பிகா ஒரு பாடகி! விதவை ஆகிறார். சிவக்குமாரின் கதைகளுக்கு அம்பிகா நல்ல ரசிகை - வாசகி! ஏற்கனவே விதவையான நளினிக்கு சரத்பாபு வாழ்க்கை கொடுக்கிறார். அதேபோல், " ( உங்கள் கதையின் ) விதவைக்கு வாழ்க்கை கொடுங்க " என்று அம்பிகா கேட்கிறார். கதாநாயகிக்கு மட்டுமல்ல - நிஜ நாயகிக்கும் கதாசிரியர் சிவக்குமார் வாழ்க்கை கொடுக்க தயாராக இருந்தபோதும் அதனை அவள் ஏற்கவில்லை. மறைந்த கணவனின் நினைவாக வாழும் கதாநாயகியின் பத்தினித்தனத்தை கதாசிரியர் புகழ்வதோடு படம் முடிகிறது. இவ்வளவு கதாபாத்திரங்களை வைத்து மன நிறைவு அளிக்காத ஒரு திரைப்படம் எடுத்திருப்பதாகவே தெரிகிறது! பாடவா உன் பாடலை, சீர் கொண்டு வா வெண் மேகமே போன்ற நேயர் விருப்பப் பாடல்கள...

வேலைவாய்ப்பு செய்திகள்!

Image
இந்திய புவி ஆய்வு மையத்தில் ஒட்டுநர் பணி! தகவல்: ஜமால் முஹம்மது

குஜராத் பாலியல் குற்றவாளிகளுக்கு விடுதலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்!

Image

நபிகள் நாயகம் பற்றி அவதூறு: தெலுங்கானா பிஜேபி எம். எல். ஏ. கைது !

Image
ஹைதராபாத்: அவதூறு பேசிய பிஜேபி எம். எல். ஏ. அதிரடியாக கைது செய்யப்பட்டார். நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் பற்றி அவதூறாக தெலுங்கானா பிஜேபி எம்.எல்.ஏ. ராஜாசிங் பேசினார். இது குறித்து தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவரை பிஜேபியிலிருந்து தலைமை நீக்கியுள்ளது. மேலும் அவர் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஏற்கனவே கட்சியின் தேசிய கொள்கைப் பரப்பு செயலாளர் நுபூர் சர்மா என்ற பெண், உலக மக்கள் இறைத்தூதர் என்று போற்றும் நபிகள் நாயகம் (ஸல்) பற்றி கேவலமாக விமர்சனம் செய்தார். அவரை ஆதரித்து இந்த எம்.எல்.ஏ. பேசியதாக கூறப்படுகிறது. எனவே நுபூர் சர்மாவையும் அவரை ஆதரித்துப் பேசி அவதூறு செய்வோரையும் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்தியாவில் மத சுதந்திரம்? அமெரிக்க அமைப்பு கண்டனம்!

Image
இந்தியாவில் மத சுதந்திரத்திற்கு எதிராக பாசிச சக்திகள் செயல்படுவதற்கு அமெரிக்க அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து நியூஸ் 18 வெளியிட்ட காணொலி காட்சி!

மழைநீர் வடிகால் பணிகள்: கே. என். நேரு உறுதி!

Image
சென்னை மாநகராட்சி சாலைகளில் மழை நீர் தேங்காமல் உடனடியாக வடிந்து வெளியேற பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சுதந்திரம் சும்மா வரவில்லை!

Image
>சுதந்திரம் பெற முஸ்லிம்களின் முக்கியப் பங்களிப்பு!

ஊடகப் பார்வை: சுதந்திர தின நிகழ்ச்சிகள்!

Image
தொலைக்காட்சி சுதந்திர தின நிகழ்ச்சிகளில், வேலு நாச்சியார், திருப்பூர் குமரன் போன்றவர்கள் வெள்ளையரை எதிர்த்துப் போராட்டம் நடத்திய நாடக காட்சிகளை ஜீ தமிழ் சிறப்பாக ஒளிபரப்பியது. வேலு நாச்சியாராக நடிகை தேவிப்பிரியா நீண்ட வசனம் பேசி நடித்தது பாராட்டத்தக்கது. பாரதியாராக - திருப்பூர் குமரனாக நடித்தவர்களும் உணர்ச்சிபூர்வமாக நடித்தது குறிப்பிடத்தக்கது. - மீராப்பிரியன்

இந்தியப் பிரிவினைக்கு யார் காரணம்?

Image
இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு யார் காரணம் என்று இந்த காணொலிக் காட்சியில் மெட்ராஸ் ரெவியூ ஊடகம் விளக்குகிறது! நன்றி: Madras review

ஊடகப் பார்வை: வீட்ல விசேஷம்!

Image
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வீட்ல விசேஷம் படம் ஒளிபரப்பானது. மக்களிடம் பொதுவாக, தம்பதிகள் இந்த வயதில் தான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது என்ற மூட நம்பிக்கை உள்ளது. அதனை உடைக்க இந்தப் படத்தின் கதை முயன்றுள்ளது. இந்திப் படத்தின் மறு ஆக்கமாக வீட்ல விசேஷம் தமிழில் ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜி.சரவணன் இயக்கியுள்ளனர். வயதான தம்பதிகளாக சத்யராஜ் - ஊர்வசி இணை நடித்து, அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளனர். இருந்தாலும் சத்யராஜின் நக்கலும் நையாண்டியும் குறையவில்லை! வயதான காலத்தில் ஊர்வசி கர்ப்பிணியானதை தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளிடம் - அம்மாவிடம் சொல்ல சத்யராஜ் தவிக்கும் தவிப்பு - தயக்கம் ரசிக்கும்படி உள்ளது. மகனாக நடிக்கும் ஆர். ஜே. பாலாஜி தனது பெற்றோர் பற்றி அதிருப்தி இருந்தாலும், காதலி அபர்ணாவின் தாயார் தவறாக விமர்சனம் செய்ததும் கொதித்து பதிலடி கொடுப்பது அருமை! 60 வயதில் என் தந்தையும் தாயும் காதலுடன் வாழ்வதில் என்ன தவறு என்று கேட்கிறார். வயிற்று வலி வந்து, கத்தி படாமல் சுகப் பிரசவம் ஆக வேண்டும் என்று முயல்வதும்- அந்த நேரத்தில் கணவனை வேதனையில் ஆம...

மாடுகளுக்கு சுதந்திரம்!

குஜராத் மாநிலத்தில் மெஹசானா மாவட்டத்தில் நடந்த தேசியக் கொடி ஊர்வலத்தில் மாடுகள் புகுந்ததால் முன்னாள் துணை முதலமைச்சர் நிதின் படேல் காயம் அடைந்தார். நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த ஊர்வலத்தில் திடீரென மாடுகள் புகுந்தன. இதனால் கூட்டத்தில் பலர் காயம் அடைந்தனர். அதில் முன்னாள் துணை முதல்வரும் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சுதந்திரதினத்தை முன்னிட்டு நடந்த ஊர்வலத்தில் மாடுகளும் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

ஊராட்சிகளில் இணைய தள சேவை!

Image
சிவகங்கை: பொதுமக்களுக்கு அனைத்து சேவைகளையும் இணைய தளம் வழியாக வழங்கிடும் வகையில் மாவட்டத்தில் உள்ள 445 ஊராட்சிகளிலும் இணைய தள இணைப்பு வழங்கும் பணி நடந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார மைய சேவை கட்டிடத்தில் தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேசன் இணைய தள சேவை கருவிகள் மற்றும் வட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும் கவுரிப்பட்டியில் உள்ள சென்னலக்குடி முகாம் வாழ் தமிழர்களின் குடியிருப்பை அவர் ஆய்வு செய்தார்.(படம்)

சதுரங்கப் போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர் வீராங்கணைகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு!

Image
சென்னை: பன்னாட்டு சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை உலகம் வியக்கும் வண்ணம் தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் நடத்திக் காட்டியுள்ளார். இதில் பொதுப் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய பி அணிக்கும் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஏ அணிக்கும் தலா ஒரு கோடி ரூபாய் பரிசினை முதல்வர் வழங்கினார்.

இலங்கை வந்தது சீனக் கப்பல்!

சீனக் கப்பல் 'யுவான் யாங் 5' இலங்கை ஹம்பன்தோட்டா வந்தது. இந்தியாவின் ஆட்சேபனையை மீறி இந்த உளவுக் கப்பல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை இறையாண்மை உள்ள நாடு என்றும் சீனாவுடனான இலங்கை உறவில் இந்தியா தலையிடக் கூடாது என்றும் சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.

காமன்வெல்த்: வாள் வீச்சு போட்டியில் தமிழக வீராங்கணை தங்கம் வென்றார்!

காமன்வெல்த் வாள் வீச்சு போட்டியில் தமிழக வீராங்கணை பாவானி தேவி தங்கம் வென்றார்! ஆஸ்திரலிய வீராங்கணை வஸ்லேவாவை வீழ்த்தி இந்த சாதனையை நிகழ்த்தினார்.

நிதிஷ்குமார் மீண்டும் முதல்வர் ஆனார்!

Image
பாட்னா: பீகார் மாநில முதல்வராக 8வது முறையாக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார். முன்னதாக பிஜேபி கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் முறைப்படி பதவி விலகினார். இதனைத் தொடர்ந்து லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் மகா கூட்டணி அமைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து கூட்டணி சார்பாக லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் முதல்வராக நிதிஷ்குமார் முதல்வர் பதவியும் தேஜஸ்வி துணை முதல்வர் பதவியும் ஏற்றனர். ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

நிதிஷ்குமார் பிஜேபி கூட்டணியிலிருந்து விலகுகிறார் !

பாட்னா : பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். பிஜேபி கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து கட்சியினருடன் விவாதித்து வருகிறார். இதற்காக தனது ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம். பி., எம். எல். ஏ. க்கள் கூட்டத்தைக் கூட்டி, ஆலோசனை நடத்தினார். கடந்த பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் பிஜேபியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, அந்தக் கட்சி ஆதரவுடன் முதல்வர் ஆனார். ஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது. தனது கட்சியின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை அதிகாரம் - பண பலத்தைக் காட்டி பிஜேபிக்கு அழைப்பதாக நிதிஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். ஒன்றிய அமைச்சரவையில் தனது கட்சிக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கையை பிரதமர் மோடி நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. நிதிஷ்குமாரின் புதிய முடிவுக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

விஸ்வநாதன் ஆனந்துக்கு முதல்வர் வாழ்த்து! காமன்வெல்த்: இந்தியா தங்கம் குவிப்பு!

Image
பன்னாட்டு சதுரங்க அமைப்பின் துணை தலைவராக தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு செய்யப்பட்டதற்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ** காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கணை பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். *** குத்துச் சண்டையில் இந்திய வீராங்கணைகள் நீத்து, நிகாத் ஜரின் இருவரும் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர் (படம்). ஆண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவில் 26 வயதேயான இந்திய வீரர் அமித் பன்ஹால் 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்தின் மெக்டொனால்டை வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். தடகளத்தில் இந்தியாவுக்கு 4 பதக்கங்கள் கிடைத்தன. மும்முறை தாண்டுதலில் இந்தியாவின் எல்தோஸ் பால் தங்கப்பதக்கம் வென்றார். கேரளாவைச் சேர்ந்த அப்துல்லா அபூபக்கர் வெள்ளிப் பதக்கம் வென்றார். 10 ஆயிரம் மீட்டர் நடைப்பந்தயத்தில் இந்திய வீரர் சந்தீப்குமார் வெண்கலப் பதக்கம் பெற்றார்.

சி. எஸ். ஐ. ஆர். தலைமை இயக்குநராக கலைச் செல்வி நியமனம்!

Image
புதுடெல்லி : இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி நிறுவனமான சி. எஸ். ஐ. ஆர். என்று அழைக்கப்படும் இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுத் துறை கூட்டமைப்பு தலைமை இயக்குநராக மின் வேதியியல் துறை விஞ்ஞானி கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காரைக்குடியில் அமைந்துள்ள 'சிக்ரி'யில் (இந்திய மின்வேதியியல் மற்றும் ஆய்வு நிறுவனம்) இயக்குநராகப் பணியாற்றி வந்தார். லித்தியம் அயன் பேட்டரி உள்ளிட்ட மின் கலன்கள் குறித்த ஆய்வுகள் செய்துள்ளார். பல்வேறு அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார். கண்டுபிடிப்புகளுக்கான 6 காப்புரிமைகள் பெற்றுள்ளார்.

கோவை மாணவர் சித்தேஷ் சாதனை!

Image
கோவை மாணவர் சித்தேஷ் யோகாவில் சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இன்று கலைஞர் தொலைக்காட்சியில் அவர் செய்த ஆசனங்கள் வியக்க வைத்தன! நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் மனோபாலா பங்கேற்றுப் பாராட்டினார்.

புதிய குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தங்கர் வெற்றி!

Image
புதுடெல்லி: இன்று நடைபெற்ற தேர்தலில் புதிய குடியரசு துணைத் தலைவராக ஆளுங்கட்சி ஆதரவு பெற்ற ஜெகதீப் தங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர்கட்சிகள் சார்பாக போட்டியிட்ட மார்கரெட் ஆல்வா 200 வாக்குகள் கூட பெறாமல் தோல்வி அடைந்தார்.

நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது!

Image
தமிழகத்தின் மூத்த தலைவர் - கம்யூனிஸ்ட் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் 'தகைசால் தமிழர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதை சுதந்திர தின விழா வில் அவருக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்குகிறார். இந்த விருதில் ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் சான்றிதழும் அடங்கும்.

வெள்ள நிவாரண முகாமில் உள்ள மக்களுடன் முதல்வர் விசாரிப்பு!

சென்னை: வெள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் பற்றி மாவட்ட ஆட்சியர்கள், பொதுமக்களிடம் முதல்வர் மு. க. ஸ்டாலின் விசாரித்து அறிந்தார். உபரி நீர் மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவேரி டெல்டா மாவட்டங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு குறித்து செல்பேசி தகவல் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

கலீல் அஹமது பாகவிக்கு சேஞ் மேக்கர் பதக்கம்!

Image
பிரபல மார்க்க அறிஞர் - எழுத்தாளர் - சமூக சேவகர் மவ்லவி கலீல் அஹமது பாகவிக்கு இந்திய அரசின் இணைய தளம் ' மாற்றத்தை உருவாக்குபவர் ' ( சேஞ் மேக்கர் ) பிளாட்டின பதக்கம் வழங்கியுள்ளது. எனது அரசு ( mygov.) என்ற இணைய தளத்தை தொடர்ந்து பயன்படுத்தி இந்த பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

+ 2 படித்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு!

Image
பிளஸ் 2 படித்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்துள்ளது பாரதியார் பல்கலைக்கழகம். தகவல்: ஜமால் முஹம்மது

பொங்கிப் பாயும் வெள்ளம்!

Image
பவானி கூடுதுறைப் பகுதியில் பாலங்களிடையே பாய்ந்தோடும் வெள்ளம்!

நேஷனல் ஹெரால்டு பிரச்சனை: மக்களவையில் காங்கிரஸ் அமளி !

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முடக்க நினைக்கும் பிஜேபி மோடி அரசுக்கு நாடாளுமன்றத்தில் மல்லிகார்ஜுன கார்கே உட்பட காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். அந்த பத்திரிகை அமைந்துள்ள யங் இந்தியா அலுவலகம் அமலாக்கத் துறையால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை எழுப்புமாறு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு சோனியா காந்தி கட்டளை பிறப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை வடக்கு மாவட்ட நிர்வாகிகள்!

Image
சென்னை: தலைமை நிலையத்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மதுரை வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் ஏ. கே. முகைதீன் தலைமையில் நிர்வாகிகள் மாநில பொதுச் செயலாளர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கரிடம் - மாவட்ட உறுப்பினர் சேர்ப்பு பணி நிறைவு செய்து, பிரைமரி நிர்வாகிகள் பட்டியலை வழங்கினார்கள்.

திராவிட முன்மாதிரி ஆட்சியில் சிறு குறு நடுத்தர தொழில்கள் முன்னேற்றம்! - முதல்வர்

Image
சென்னை: நந்தம்பாக்கத்தில் புத்தொழில் நிறுவனங்கள், தொழில் காப்பகங்கள் கண்காட்சி - கருத்தரங்கம் நடைபெற்றது. சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தாமோ. அன்பரசன் தலைமை தாங்கினார். முதல்வர் மு. க. ஸ்டாலின் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது, திமுகவின் திராவிட முன்மாதிரி ஆட்சியில் தமிழகத்தில் சிறு குறு நடுத்தர தொழில்கள் முன்னேற்றம் கண்டுள்ளன. தொழில் தொடங்க எளிதான மாநிலங்கள் வரிசையில் தமிழ்நாடு 14 வது இடத்தில் இருந்து 3 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது என்று குறிப்பிட்டார்.

தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி அணு ஆய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Image

மாட்டிறைச்சிக் கடை மூடல் - சீமான் கண்டனம்!

சேலம்: மாட்டிறைச்சிக் கடையை மூட உத்தரவு பிறப்பித்த அரசு திராவிட மாடல் அரசா? ஆரிய மாடல் அரசா? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் தாதக்கா பட்டி சண்முக நகர் பகுதியில் பல ஆண்டுகளாக பாதுஷா மைதீன் என்பவர் மாட்டிறைச்சி கடை நடத்தி வருகிறார். மதவாத கட்சி - அமைப்பினர் அச்சுறுத்தலால் இந்த கடையை மாவட்ட நிர்வாகம் மூட உத்தரவிட்டுள்ளது. இது வெட்கக்கேடானது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.