Posts

Showing posts from July, 2022

சதுரங்க ஒலிம்பியாட் போட்டி : இந்திய வீரர்கள் வெற்றி!

மாமல்லபுரம்: சர்வதேச அளவில் இரண்டாவது நாளாக நடைபெறும் சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சார்பில் 6 அணிகள் களம் இறங்கின. இதில் இன்று சாதனை வீரர் பிரக்யானந்தா போட்டியில் பங்கேற்றுள்ளார். பல்வேறு நாடுகள் சார்பில் வீரர்- வீராங்கணைகள் விளையாடும் இந்த போட்டியில் மெக்சிகோ வீரரை வீழ்த்தி தமிழக வீரர் கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றார். இந்தியா சார்பில் 3வது அணியில் போட்டியிட்ட தமிழகத்தை சேர்ந்த நந்திதா சிங்கப்பூர் வீராங்கணையை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி! -முதல்வர் மு. க. ஸ்டாலின்

Image
மாநிலங்களின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியாகும் என்று மலையாள மனோரமா ஊடக கருத்தரங்கில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசினார். தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு நாட்டு நலனுக்கு - மக்களுக்கு எதிரானது. ஒரே நாடு ஒரே மொழி என்பது தேசத்துக்கு விரோதமானது. இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றார். மலையாள உடன்பிறப்புகளே என்று குறிப்பிட்டு, சில வாக்கியங்களை மலையாள மொழியில் பேசி அசத்தினார் முதல்வர்!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரிய பணி!

Image
நன்றி : மணிச்சுடர் நாளிதழ்

நடனம் ஆடும் பாலம் சரி செய்யப்படுமா?

நன்றி : ஸ்பை நியூஸ்

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் மறுப்பு!

கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் அடைந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், இரு ஆசிரியைகள் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், நேற்று பள்ளி நிர்வாகிகள் 5 பேர் ஜாமீன் கோரி மனு செய்தனர். அது குறித்து இன்று நடந்த விசாரணையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்து விட்டார்.

சாமானிய மனிதனையயும் பாதிக்கும் ஜி. எஸ். டி. வரி!

Image
ஒன்றிய பிஜேபி அரசின் சாதனை!

மூத்த இதழாளர் நூருல்லா நூல் வெளியீடு!

Image

44வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி : 7 மாநில முதல்வர்கள் வாழ்த்து!

சென்னை: 44 வது சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. முதல்வர் மு. க. ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். போட்டிகள் நாளை முதல் மாமல்லபுரத்தில் தொடங்கி ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சுமார் 187 நாடுகளில் இருந்து 2500 சதுரங்க வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் நடிகர் கமல்ஹாசன் குரலில் தமிழகத்தின் பெருமை கூறும் வரலாறு காட்சிப்படுத்தப்பட்டது. இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் சதுரங்க ஒலிம்பியாட் சிறப்பு இசை காட்சிப்படுத்தப்பட்டது. பல்வேறு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள், போட்டியின் ஒலிம்பியாட் தீபம் ஒப்படைப்பு போன்ற வண்ணமிகு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனால் சென்னை - மாமல்லபுரம் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாமல்லபுரம் பகுதியில் பாஸ் இல்லாமல் யாரும் வர அனுமதி இல்லை என்று காவல் துறை அறிவித்துள்ளது. முன்னதாக, தமிழகத்தில் நடைபெறும் சதுரங்க ஒலிம்பியாட் போட்டி குறித்து, பல்லவ மன்னன் ஆண்ட தமிழ் மண்ணில் இந்த போட்டி நடைபெறுவது பெருமை வாய்ந்தது என்று புதுச...

பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி திட்டம்! - முதல்வர்

Image
சென்னை: அரசு பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவ மாணவிகள் பயன் அடையும் வகையில் காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். இத்திட்டத்தின் முதல் கட்டமாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலை தூர கிராமங்களின் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும். இதன் மூலம் 1,545 பள்ளிகளில் 1,14,095 மாணவ மாணவிகள் பயன் அடைவார்கள். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

பரபரப்பான மாரி தொடர்! பிரமிளா போல் அசத்தும் நாயகி!

Image
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாரி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. நிகழப்போகும் ஆபத்துகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ளும் தெய்வீக சக்தி கதாநாயகிக்கு இருப்பதாக கதை! அந்த நடிகை ஆஷிகா படுகோனே அப்படியே பழைய நடிகை பிரமிளாவைப் போல் இருக்கிறார்! அவர் மற்றவர்களைக் காப்பாற்ற ஓடும் காட்சிகள் பரபரப்பாக திரைப்படம் போல் காட்சியாக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. அவரது நடிப்பும் புது நடிகை போல் காணப்படவில்லை. தனது அபூர்வ சக்தியால் மாரி பல பேரைக் காப்பாற்றுகிறாள். ஆனால் அவளை அப சகுனக்காரி என்று திட்டி, ஊர் மக்கள் ஊரை விட்டு விரட்டுகிறார்கள். குறிப்பாக மாரியின் தோழியின் அம்மாவாக நடிக்கும் நடிகை வனிதா, குளத்தில் குதிக்கும் தன் மகளைக் காப்பாற்றும் அப்பாவிப் பெண் மாரியின் மீது வெறுப்பை உமிழ்கிறார்! அவர் மாரியை ராட்சசி போல் தாக்குவதும் - விரட்டி அடிப்பதும் பெண் ரசிகர்களை கலங்கடிக்கும்! மாரி கதாநாயகனைக் காப்பாற்றும் காட்சி கூட விறுவிறுப்புதான்! - மீராப்பிரியன்

திருவள்ளூர்: தற்கொலை செய்த பள்ளி மாணவிக்கு உடற்கூறாய்வு !

திருவள்ளூர்: மப்பேடு அருகே கீழச்சேரி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் + 2 படித்து வந்த மாணவி தங்கியிருந்த விடுதியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த திடீர் மரணம் தொடர்பாக, பெற்றோரும் உறவினரும் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாறியது. மரணம் அடைந்த மாணவிக்கு அவரது அண்ணன் முன்னிலையில் உடற்கூறாய்வு நடைபெற்றது. ஏற்கனவே கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மேலும் ஒரு மாணவியின் திடீர் மரணம் தமிழக மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முழுவதும் அதிமுக போராட்டம்!

சென்னை: திமுக ஆட்சி அமல்படுத்தியுள்ள சொத்துவரி, மின்சார கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. திருச்சி, கோவை, மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, காரைக்குடி, திண்டுக்கல், விருதுநகர், சேலம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கும்பகோணம், விழுப்புரம், பெரம்பலூர், வேலூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட நகரங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கோஷங்களை அதிமுக தொண்டர்கள் எழுப்பினர்.

சதுரங்க ராஜா!

சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள சதுரங்க ராஜா அமைப்பு பற்றி ஊடகவியலாளர் ஹமீது விளக்குக்கிறார்! ( காணொலி )

குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு பதவி ஏற்றார்!

புதுடெல்லி: நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவி ஏற்றார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருப்பேன் என்று பதவி ஏற்ற குடியரசுத் தலைவர் முர்மு தெரிவித்தார். விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், மாநிலங்களின் முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படைத் தளபதிகள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கடிதம்!

Image
சென்னை: உக்ரைன் நாட்டில் இருந்து வந்த இந்தியாவைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு இந்தியாவில் படிப்பை தொடர ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், இது தொடர்பாக தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அக்னி வீரர்களின் எதிர்காலம் : ராகுல் காந்தி கேள்வி!

புதுடெல்லி: அக்னி வீரர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். அக்னி பாத் என்ற பெயரில் ஒப்பந்த அடிப்படையில் இந்திய ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகளும் இளைஞர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 4 ஆண்டுகளுக்கு மட்டும் வேலை வழங்கும் இந்த திட்டம், வேலை பாதுகாப்போ - ஓய்வூதியமோ ராணுவ வீரர்களுக்கு பெருமை சேர்ப்பதாகவோ இல்லாததால் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, இந்த திட்டத்தினால் இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக பிஜேபி ஒன்றிய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

டி. என். பி. எஸ். சி. குழு 4 தேர்வு: 84% பேர் எழுதினர்!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய ( டி. என். பி. எஸ். சி. ) 7 ஆயிரத்து 301 காலி பணியிடங்களுக்கான குழு 4 தேர்வுகள் இன்று நடைபெற்றது. 84% பேர் எழுதினர். இளநிலை உதவியாளர், தட்டச்சர், எழுத்தர், கிராம நிர்வாக அலுவலர் முதலான பணிகளுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில் 18.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழ் மொழி குறித்த கேள்விகள் எளிதாக இருந்ததாகவும் பொது அறிவு கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் தேர்வு எழுதியவர்கள் கூறினர். நீக்கப்பட்ட திட்டமான திருமண உதவித் திட்டம் பற்றி கேள்வி கேட்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

மர்ம மரணம் அடைந்த மாணவிக்கு இறுதி அஞ்சலி!

Image
கள்ளக்குறிச்சி: சின்ன சேலம் அருகே சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி ஸ்ரீமதி, விடுதியில் மர்ம மரணம் அடைந்ததை தொடர்ந்து பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறின. இந்த வழக்கை சி. பி. சி. ஐ. டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுப்படி 2 உடற்கூறாய்வு செய்யப்பட்டு, மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதை தொடர்ந்து இன்று சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் கணேசன், எம். எல். ஏ. க்கள், மாவட்ட ஆட்சியர் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பெற்றோரும் உறவினரும் கதறி அழுத காட்சி மனதை உருக்குவதாக இருந்தது. மாணவியின் அகால மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

முஸ்லிம்களுக்கு அரசு வேலை வாய்ப்பு லட்சணம் இது தானா?

சென்னை: வேலையில்லாத் திண்டாட்டம் நாடு முழுவதும் இருக்கிறது. தமிழகத்தில் கொஞ்சம் குறைவாக இருக்கலாம். முன்பு வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் படித்தவர்களுக்கு வேலை கிடைத்தது. இப்போது அந்த நிலை இல்லை. எல்லா வகை அரசுப் பணிகளுக்கும் டி. என். பி. எஸ். சி. உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்படுகிறது. இந்தப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு தான்! அப்படியே அவர்கள் வெற்றி பெற்றாலும் இடஒதுக்கீடு அடிப்படையில் எப்படி வேலை வழங்கப்படுகிறது என்பது மர்மமாகவே இருக்கிறது. இந்த நிலையில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கான 3.5 சதவீத இடஒதுக்கீடு வேலைவாய்ப்பு துறையில் எப்படி அமலாக்கப்படுகிறது? எத்தனை பேருக்கு வேலை கொடுத்திருக்கிறார்கள் என்பது ஆய்வு செய்யப்பட வேண்டியது. எனவே நேரடி நியமனங்களும் செய்யப்பட வேண்டும். வக்பு வாரியம் போன்ற துறைகளில் முஸ்லிகளுக்கு நேரடியாக வேலை வழங்க வேண்டும். வக்பு வாரிய தலைவராக அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் பொறுப்பு ஏற்ற பிறகு இளநிலை உதவியாளர் பணிக்கு 27 பேர் தேவை என்று 13-8-2021 அன்று பொது விளம்பரம் செய்து 5000 விண்ணப்பங்கள் பெற்றும் அதற்கான ...

சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருது!

Image
சூரரைப் போற்று தமிழ் திரைப்படம் சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர் உட்பட 5 தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த நடிகராக சூர்யா விருது பெறுகிறார். சிறந்த இசையமைப்பாளராக ஜி. வி. பிரகாஷ் தேர்வு பெற்றுள்ளார். மலையாள திரைப்படம் ஐயப்பனும் கோஷியும் 4 விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த இயக்குனர் சச்சிதானந்தன்.

புதிய குடியரசுத் தலைவராகும் முர்முவுக்கு தலைவர்கள் வாழ்த்து!

புதுடெல்லி: இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றுள்ளார். இவர் ஒடிசா பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இவர் 2824 வாக்குகள் பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா 1877 வாக்குகள் பெற்றார். 15வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முர்முவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல் காந்தி, மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்!

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர்களைப் பழி வாங்கும் போக்கில் பிஜேபி ஒன்றிய அரசு செயல்படுவதாக நாடு முழுவதும் அக்கட்சியின் தொண்டர்கள் இன்று போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டு தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று அமலாக்கத் துறையினர் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். தனது உடல்நிலை காரணமாக விசாரணையை சோனியா காந்தி தள்ளிப்போடக் கோரியும் பிடிவாதமாக இதனைச் செய்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற பிஜேபி ஒன்றிய அரசின் போக்கை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் போக்கில் பிஜேபி அரசு செயல்படுவதற்கு அக்கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மரணம் அடைந்த மாணவி தங்கியிருந்த விடுதி முறையான அனுமதி பெறவில்லை!

கள்ளக்குறிச்சி: மாநில குழந்தைகள் நல ஆணையர் சரஸ்வதி கள்ளக்குறிச்சி சின்னசேலம் பள்ளி மாணவி மர்ம மரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவி தங்கியிருந்த விடுதி முறையான அனுமதி பெற்று செயல்படவில்லை. அந்த விடுதி உரிய விதிமுறைகளைக் கடைபிடித்து இருந்தால், மாணவிக்கு இந்த விபரீதம் ஏற்பட்டிருக்காது என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார். 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாதிக்கப்படும்போது அவர்களின் பெயர்- அடையாளங்களை வெளியிடக் கூடாது என்று ஊடகங்களை அவர் கேட்டுக்கொண்டார்.

சிறுபான்மையினர் நிதி: ஒன்றிய அரசு சரிவர அனுப்பவில்லை! - செஞ்சி மஸ்தான்

கன்னியாகுமரி: தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத் துறைக்கு ஒதுக்கிய ஒன்றிய அரசின் நிதி சரிவர வந்து சேரவில்லை. கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார். கன்னியாகுமரிக்கு வருகை தந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாணவி உடலுக்கு மறு பிரேத பரிசோதனை!

Image
சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம் குறித்து மறு பிரேத பரிசோதனைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே செய்யப்பட்ட பிரேத பரிசோதனையில் சந்தேகம் உள்ளதாக கூறப்படுகிறது. மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்திருந்தால், எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும். பிரேத பரிசோதனையில் அது தெரிய வரவில்லை என்று கூறப்படுகிறது. மர்ம உறுப்பு, ஆசனவாய் ஆகிய பகுதிகளில் பாதிப்பு இல்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. பின் தலையில் காயம், உடலில் பல இடங்களில் சிராய்ப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தற்கொலை அல்ல, கொலை என்று மாணவியின் பெற்றோர் கூறுகிறார்கள். பள்ளி தாளாளரின் மகன்கள், தம்பி ஆகியோர் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறுகிறார்கள். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு இன்று விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. சந்தேகம் இருப்பதால் புதிய பிரேத பரிசோதனை நடைபெற உள்ளது. இந்த பரிசோதனையிலாவது உண்மை தெரிய வருமா? துப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவி மர்ம மரணம்: வன்முறை - தீவைப்பு! 100 பேர் கைது!

Image
கள்ளக்குறிச்சி: சின்ன சேலம் அருகே கனியாமூர் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த மாணவி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை - பள்ளி மற்றும் போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு நடைபெற்றது. கல்வீச்சில் போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு-பதற்றம் ஏற்பட்டுள்ளது. பள்ளி தாளாளர், முதல்வர் உட்பட 3 பேரும் வன்முறையில் தொடர்புடைய 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து டி. ஐ. ஜி. சைலேந்திர பாபு, உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு அமைதி ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பேட்டி அளித்துள்ளனர். மாணவி மரணத்திற்கு உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். பொதுமக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மகளிருக்கு இலவச பயணம்: பிங்க் நிற பேருந்துகள் அறிமுகம்!

Image
சென்னை: நகர பேருந்துகளில் இலவச பயணம் செய்ய மகளிருக்கு வசதி செய்து கொடுத்துள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு! இதற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது மகளிர் இலவச பயண பேருந்து என எளிதில் அடையாளம் காண 'பிங்க்' நிற பேருந்துகளை விரைவில் அறிமுகம் செய்கிறது சென்னை மாநகர அரசு போக்குவரத்து கழகம்! இந்த திட்டம் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் அமலுக்கு வரும் என தெரிகிறது.

திராவிட முன்மாதிரி ஆட்சியில் பூமி பூஜை தேவையா?

மதச் சார்பற்ற அரசு நடக்கும் தமிழ்நாட்டில் அரசு திட்டங்களில் பூமி பூஜை நடத்துவது குறித்து கேள்வி கேட்கிறார் திமுக எம்.பி. எஸ்.செந்தில்குமார்!

உ. பி. யில் இணைப்பு சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கான்பூர்: உ.பி.யில் 14 ஆயிரத்து 850 கோடி செலவில் பந்தேல்கண்ட் 4 வழி விரைவுச் சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ** பிரதமர் பேசும்போது, இது மாநிலத்தின் 6 மாவட்டங்களை இணைக்கிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு- தொழில் முன்னேற்றம் ஏற்படும். இது மோடி- யோகி ஆட்சியாகும். இம்மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கும் இணைப்பும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று குறிப்பிட்டார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர்கள்!

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர். முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவுப்படி கூடலூர் பகுதியில் வெள்ளத்தால் உடைந்த பாலத்தை பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வனத்துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். மக்களின் குறைகளை கேட்டறிந்தனர். வெள்ளத்தால் குடிசைகள், வீடுகள் பாதிக்கப்பட்ட நிலையில், 102 நபர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, தண்ணீர், மின்சார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ** மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் மழையால் தாமிரபரணி அணை நிரம்பி வருகிறது. தாமிரபரணி அருவியில் நீர் கொட்டுகிறது. ** கர்நாடகத்தில் இருந்து மழை உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. காவேரி டெல்டா மாவட்டங்களின் கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதழாளர் முஹம்மது ஜுபைருக்கு ஜாமீன்!

புதுடெல்லி: அல்ட் நியூஸ் ஆசிரியர் முஹம்மது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. எந்த அவதூறு செய்தியும் வெளியிடப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் வாதிட்டார். 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான செய்தியை தோண்டி எடுத்து வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அவரது வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம் ஊடகவியலாளர் முஹம்மது ஜுபைருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இயக்குநர் -நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்!

சென்னை: பிரபல நடிகரும் இயக்குநருமான பிரதாப் போத்தன் (69) சென்னையில் காலமானார். அழியாத கோலங்கள் திரைப்படம் மூலம் தமிழில் தொடங்கிய கலைப் பயணம் பல்வேறு படங்களில் நடிப்பு, இயக்கம் என தொடர்ந்து பங்கேற்று முத்திரை பதித்தார். ஜீவா, வெற்றி விழா, சீவலப்பேரி பாண்டி முதலான படங்களை இயக்கியுள்ளார். அவரது மறைவுக்கு நடிகர்கள் சத்யராஜ், கருணாஸ் உள்ளிட்ட திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சி. பி. எஸ். சி. தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்க அமைச்சர் பொன்முடி கோரிக்கை!

சென்னை: சி. பி. எஸ். சி. தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் அறிவிக்க வேண்டும். இல்லையென்றால், மாணவர்களின் கல்லூரி முதல் ஆண்டு சேர்க்கை பாதிக்கப்படும் என்று ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கோரியுள்ளார். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே செயல்படுத்தப்படும். தமிழ்நாடு கல்விக் கொள்கைக்கு ஆளுநர் ரவி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

முதல்வர் மு. க. ஸ்டாலின் நலமுடன் உள்ளார்!- அமைச்சர் துரை முருகன்

சென்னை: முதல்வர் மு. க. ஸ்டாலின் நலமுடன் உள்ளார் என்று திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். முதல்வருக்கு கொரோனா தொற்று இருப்பதால் அவர் வீட்டில் தனிமையில் இருந்தார். இந்த நிலையில் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், முதல்வர் நலமுடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத சொற்கள் : பிஜேபி அரசு கட்டுப்பாடு!

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் பட்டியல் அடங்கிய வழிகாட்டு நூல் வெளியிடப்பட்டு உள்ளது. தங்களை எந்த சொற்களால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விமர்சனம் செய்கிறார்கள் என்பதை கண்டறிந்து அவற்றை தடுக்க பிஜேபி அரசு இந்த கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளதாக கூறப்படுகிறது. இது ஜனநாயக விரோத செயல் என்றும் விமர்சனங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சர்வாதிகாரப் போக்கில் பிஜேபி ஒன்றிய அரசு செயல்படுகிறது என்றும் காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது! பட்டிலில் உள்ள சொற்களில் சில: அராஜகம், ரவுடித்தனம், முட்டாள்தனம், மோசடி, ஊழல்- லஞ்சம், கபட நாடகம், சர்வாதிகாரம், சர்வாதிகாரி, பொய், காலிஸ்தான் மற்றும் பல.

ஆளில்லா ராட்சத விமானம் : அமெரிக்கா சோதனை!

வானில் ஆளில்லா ராட்சத விமானத்தை அமெரிக்கா சோதனை செய்து பார்த்துள்ளது! இது வானிலிருந்து ஒளிப்படம் எடுக்குமாம். சூரிய ஒளியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரவில் பேட்டரியில் இயங்கும்! இந்த விமானம் எதிர்காலத்தில் ராணுவத்தில் பயன்படுத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.

ஹிஜாப் வழக்குகள்: உச்சநீதிமன்றம் அடுத்த வாரம் விசாரணை!

புதுடெல்லி: மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரக்கூடாது என்று கர்னாடக அரசு திடீர் உத்தரவு பிறப்பித்தது செல்லும் என்று அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததற்கு முஸ்லிம் சமுதாயமும் ஜனநாயக அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. இது முஸ்லிம்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள மத சுதந்திரத்தை மறுப்பதாகும். மேலும் முஸ்லிம் மாணவிகளின் படிப்பைக் கேள்விக்குறி ஆக்கும் செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டது. இதுகுறித்து பல்வேறு அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீண்ட காலமாக இந்த வழக்கு விசாரணை தாமதம் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்குகள் அடுத்த வாரம் விசாரிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதிமுக துணை பொதுச் செயலாளர்கள் நியமனம்!

அதிமுக துணைப் பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஆளுநர் ரவியின் போக்கு கண்டனத்துக்கு உரியது! - தலைவர்கள்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆளுநர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் ஆர். எஸ். எஸ். - பிற்போக்கு சனாதனக் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்தப் போக்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உயர் கல்வித்துறை அமைச்சரை மதிக்காமல், மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டதற்கு திமுக எம்பி திருச்சி சிவா, அ. ம. மு. க. பொதுச் செயலாளர் தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று!

சென்னை: முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று இருப்பதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனவே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முதல்வரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. முதல்வர் மு. க. ஸ்டாலின் இரண்டு தடுப்பூசிகளும் பூஸ்டர் தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இடைக்கால பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு!

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இது குறித்து கருத்துக் கூறிய ஓ.பன்னீர்செல்வம், என்னை கட்சியிலிருந்து நீக்க பழனிசாமிக்கு உரிமை இல்லை என்றார்.

நீலகிரி, கோவையில் கன மழைக்கு வாய்ப்பு!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அங்கு லேசான மழைக்கு வாய்ப்பு!

அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது!

சென்னை: ஒருபக்கம் முக்கிய திருமண மண்டபத்தில் பொதுக்குழு நடந்து கொண்டிருந்த போது, இன்னொரு பக்கம் அதிமுக தலைமை அலுவலகம் இன்று பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது. பொதுக்குழுவை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், தனது ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்தில் நுழைந்தார். அவர் தலைமை அலுவலகத்தைக் கைப்பற்ற முயற்சி செய்வதாக எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். இரு தரப்பினர் மோதிக் கொண்டதால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. இதனால் ஓ.பி.எஸ். மற்றும் தொண்டர்கள் வெளியேற்றப்பட்டனர். இதனை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம் வருவாய் கோட்ட அலுவலரால் பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது! இது குறித்து இ. பி. எஸ்., ஓ. பி. எஸ். இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று 'சீல்' வைக்கப்பட்ட அலுவலகத்தை திறக்கலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தியாகத் திருநாள் கொண்டாட்டம்!

Image
சென்னை: தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் ஈதுல் அள்ஹா எனும் தியாகத் திருநாள் கொண்டாடினர். பல்வேறு நகரங்களில் உள்ள ஈத்கா மைதானங்களில் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. லட்சக் கணக்கான முஸ்லிம்கள் அதில் கலந்துகொண்டு உலக அமைதிக்காகவும் கொரோனா உள்ளிட்ட நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்கவும் பிரார்த்தனை புரிந்தனர். ஆடுகள் முதலான பிராணிகளை குர்பானி கொடுத்து உறவினர், ஏழைகளுக்கு பங்கு வைத்து விநியோகம் செய்தனர். இனிப்பு மற்றும் பிரியாணி செய்து மற்ற சமுதாய நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் விருந்தளித்தனர். முன்னதாக, குடியரசு தலைவர் ராம்னாத் கோவிந்த், பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்க பொதுச் செயலாளர் முனைவர் சேமுமு முகமதலி மற்றும் பிரமுகர்கள் ஹஜ் பெருநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

காரைக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு!

Image
காரைக்குடி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு காரைக்குடியில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநில செயலாளர் முத்தரசன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது.

இலங்கை பிரதமர் ரணில் ராஜினாமா!

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மோசமான நிலைமையை சமாளிக்க முடியாமல் ராஜினாமா செய்கிறார். அனைத்து கட்சியினர் பங்கேற்கும் ஆட்சி அமைக்க ஏற்பாடு நடக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே 13ம் தேதி ராஜினாமா செய்கிறார் என நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். மக்களின் தன்னெழுச்சி போராட்டம் - வன்முறை வெடித்துள்ளது. பிரதமர் வீடு தாக்கி தீவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் வேட்பாளராக இந்திய வம்சாவளி ரிஷி சுனக்!

லண்டன்: இங்கிலாந்தின் அடுத்த பிரதமர் வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. போரிஸ் அமைச்சரவையில் ரிஷி பணியாற்றி ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முலாயம் சிங் யாதவ் மனைவி காலமானார்!

லக்னோ: உ. பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ் மனைவி சாதனா குப்தா காலமானார். உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: பிரபல மூத்த நடிகர் விக்ரம் உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் நலமுடன் இருக்கிறார். மாரடைப்பு எதுவும் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடைபெறுமா?

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் 11ம் தேதி காலை 9.15 மணி அளவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை எதிர்த்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தொடுத்த வழக்கில், தீர்ப்பு அதே 11ம் தேதி காலை 9 மணிக்கு அளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதனால் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொலை!

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே பொது நிகழ்ச்சியில் பேசிக்கொண்டு இருந்தபோது, அடையாளம் தெரியாத ஒரு நபர் அவர் மீது துப்பாக்கியால் சுட்டார். அவரை மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனளிக்காமல் அவர் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு, நிறுவனங்களில் சோதனை!

சென்னை: வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சென்னை, தஞ்சாவூர், திருச்சி முதலான நகரங்களில் - 49 இடங்களில் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் உறவினர் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதற்கு முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இனிய உதயம் இதழில் வெளியான கவிதை!

Image

மியான்மரில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் கொலை!

மியான்மரில் ராணுவத்தினரால் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை தமிழகம் கொண்டு வர ஒன்றிய - மாநில அரசுகளுக்கு சென்னை பாடியநல்லூரில் உறவினர் கோரிக்கை!

4 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு!

வால்பாறையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! **திருப்பூர், திண்டுக்கல், கோவை, தேனி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் தகவல்.

சங்கரப்பதிக் கோட்டை பக்கீர் முஹம்மது ஒலி தர்கா!

Image

இசையில் சிறந்த குட்டிப் பாப்பா!

Image
சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியில் பட்டம் வென்று கிரிஷாங் முதல் பரிசு வீடு பரிசு பெற்றார். இரண்டாம் பரிசு வென்ற குட்டிப் பாடகி ரிஹானா ( படம் ) ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், 3ம் பரிசாக நேஹா ரூ.3 லட்சம் பெற்றார்! நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா சிறப்பு விருந்தினாக கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்!
Image
காரைக்குடியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மக்களுக்கு சிறந்த சேவையாற்றி வருகிறது! g" style="display: block; padding: 1em 0; text-align: center; ">

இளையராஜா - பி.டி. உஷா எம். பி. யாக நியமனம்!

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, ஓட்டப்பந்தய வீராங்கனை தங்க மங்கை பி. டி. உஷா ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருவருக்கும் வாழ்த்து குவிந்து வருகிறது!

நிலத்தடி நீருக்கு வரி: தமிழகத்திற்கு பொருந்தாது!

சென்னை: வீடுகள், தொழிற்சாலைகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் உத்தரவு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த உத்தரவுக்கு நாடு முழுதும் கடும் கண்டனம் எழுந்தது. இந்த நிலையில், வட மாநிலங்களில் சில இடங்களில் மட்டுமே இந்த திட்டம் அமல் படுத்தப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பூர் மஸ்ஜித் குறித்த வழக்கில் தீர்வு காண நடவடிக்கை!

Image
திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வந்த பள்ளிவாசல் மூடப்படும் அபாயம் தடுக்கப்பட்டது. சில மதவாத அமைப்புகளின் தூண்டுதல் பேரில் வழக்கு தொடுக்கப்பட்டதால், நீதிமன்ற உத்தரவு பெற்று நகராட்சி மஸ்ஜிதுக்கு பூட்டு போட வந்தபோது முஸ்லிம்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் உட்பட போராட்டங்கள் நடத்தினர். இதனை அறிந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணை தலைவரும் வக்பு வாரிய தலைவருமான அப்துல் ரஹ்மான் விரைந்து பல்வேறு நடவடிக்கை எடுத்து திருப்பூரில் பதற்றம் தணிக்க உதவினார். தலைமை செயலாளர் உட்பட அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்தித்தார். திருப்பூர் சென்று மாவட்ட ஆட்சியர் வினித் மற்றும் தொகுதி எம். எல். ஏ. செல்வராஜ் உட்பட பிரமுகர்களை சந்தித்து பேசினார். வக்பு வாரியம் மூலம் உரிய ஆவணங்களை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு 3 வார அவகாசம் அளித்து, பள்ளிவாசலில் தொடர்ந்து தொழுகை நடந்தவும் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

12 விசாரணை மரணங்கள் உண்மையானவை! - டி. ஜி. பி.

மதுரை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 80 விசாரணை மரணங்கள் நடந்துள்ளன. அவற்றில் 12 வழக்குகள் உண்மையானவை. 48 போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் சித்திரவதை மரணங்கள் நடக்காமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது. தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலந்திரபாபு மேற்கண்டவாறு கூறினார்.

சுவையான செய்திகள்!

* சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாய்வில் நீள் வடிவ தந்த தாயக்கட்டை, பாசிகள், மணிகள், பானை ஓடுகள் கண்டறியப்பட்ட நிலையில், புதிதாக தோண்டப்பட்ட குழியில், சுடுமண்ணால் செய்யப்பட்ட செங்கல்லினால் ஆன மூன்று அடுக்குகள் கொண்ட நேர்த்தியான சுவர் வெளிப்பட்டுள்ளது. *** மே. வங்க பிரதமர் ஷேக் ஹசினா, அசாம் மாநில முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மாவுக்கு சிறப்பு பரிசாக அந்த நாட்டின் சிறப்புமிகு அமரபலி ரக மாம்பலங்கள் 200 கிலோ அனுப்பியுள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடிக்கு மாம்பலங்களை அனுப்பிவைத்துள்ளார்!

நாமக்கல் மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு!

நாமக்கல் மாவட்டத்தில் அருந்ததியர் குடியிருப்புக்கு திடீர் என சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அங்கு மக்களிடம் குடிநீர், மின்சார வசதிகள் குறித்து கேட்டு அறிந்தார். 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் உயர் கல்வி பயிலும் அந்த சமூக மாணவர்களுடன் அவர் உரையாடினார்!

நூபுர் சர்மாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

புதுடெல்லி: நபிகள் நாயகம் ( ஸல் ) பற்றி அவதூறு பேசிய பிஜேபி முன்னாள் செய்தி தொடர்பாளர் நூபுர் சர்மா இந்திய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏனெனில் இந்தியாவில் நடக்கும் விபரீதங்களுக்கு அவர் தான் பொறுப்பு. அவதூறு வழக்கில் ஜாமீன் கேட்டு மனு செய்த நூபுர் சர்மாவுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மற்றவர்களை உடனே கைது செய்யும் போலீஸ், நூபுர் சர்மா ஆளும் கட்சி நிர்வாகி என்பதால், இதுவரை அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவில்லையா என்று கேட்டனர்.